1965 இல் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரின்போது, அன்றைய பிரதம மந்திரி லால்பகதூர் சாஸ்திரி காயமடைந்த ராணுவ வீரர்களை காண ராணுவ மருத்துவமனைக்கு சென்றார். அவர் பல காயமடைந்த ராணுவ வீரர்களை பார்த்தார் ... இறுதியில் எழுந்திருக்க முடியாமல் படுத்தே இருந்த ராணுவவீரரிடம் அருகில் சென்றார். அருகில் இருந்த டாக்டர், இந்த ராணுவ வீரரின் பல உறுப்புகள் சேதம் அடைத்துள்ளது அதனால் அவர் மிகுந்த கண்காணிப்பில் உள்ளார், அவர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனக்கூறினார். சாஸ்திரி அவர்கள் மிகவும் அருகில் சென்று அவருடைய தலைக்கு அடியில் தன்னுடைய கைகளை கொடுத்து தாங்கினார். அந்த ராணுவ வீரனின் கண்களிலிருந்து கண்னீர் பெருக்கெடுத்தது. சாஸ்திரி அவர்கள் அவரோடு கீழ்வருமாறு உரையாடினார்.
சாஸ்திரி : மேஜர், நீங்கள் உலக புகழ் பெற்ற இந்திய ராணுவத்தின் மேஜர். இந்திய ராணுவம் வீரத்திற்கும் துணிச்சலுக்கும் பெயர்பெற்றது. தயவுசெய்து உறுதியாக இருங்கள் அழாதீரகள் !. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள்.
மேஜர்: சார், இந்த கண்ணீர் என்னுடைய வலியினாலோ காயத்தினாலோ அல்ல. இந்த கண்ணீருக்கு காரணம் நான் ஒருநாள் என்னுடைய பிரதமமந்திரியை பார்ப்பேன் அப்போது அவருக்கு ராணுவ வணக்கம் தெரிவிப்பேன் என்ற கனவுதான். இன்று உங்களை நேரில் பார்த்துவிட்டேன் ஆனால் என்னால் எழுந்து உங்களுக்கு ராணுவ வணக்கம் தெரிவிக்க முடியவில்லையே என்றவருத்தம்தான் என்னை வாட்டுகிறது.
சாஸ்திரி கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.
இப்படிப்பட்ட உயர்ந்த உள்ளங்கள் வாழ்ந்த நாடு இந்தியா.
- 128