Feed Item
Added article 

அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்களுக்கு ஒரு சந்தேகம் .டைரக்டர் ராமண்ணாவுக்கும் அந்த சந்தேககேம் வந்தது. நடிப்பு சிறப்பாக இருந்தாலும் அதில் ஓர் உறுத்தலாக அந்த வலிப்பு நடிப்பு. சிவாஜியிடம் எப்படி கேட்பது .ஒரு தயக்கம் ராமண்ணாவுக்கு. ராமண்ணாவின் புருவ வியப்பு கலந்த சந்தேகமும் கண்ணில் தெரிந்த உண்மையின்மையும் சிவாஜி அறியாமல் இருப்பாரா?

சிவாஜி அன்று நடித்தது ஜுலியஸ் சீசர் வேடம்.ராமண்ணாவை அழைத்து ,சீசருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளதை தான் படித்திருப்பதாக கூறி ,அதைத்தான் நான் செய்தேன் என கூற ராமண்ணாவின் விழிகளில் இப்போது ஆச்சர்யம்.

ஒரு நிமிடம் வந்து போன சந்தேகம் அது அதிசயமாய் ஆச்சர்யமாய் மாறிப் போனது.

மேதைகளை புரிந்து கொள்வது சில சமயங்களில் கஷ்டம்.புரியாமல் வாழ்வது நம் துரதிருஷ்டம்.

சொர்க்கம் படத்தில் ஜூலியஸ் சீசராக சிவாஜி நடித்த போது...

  • 230