Latest News
டொரண்டோ பெரும்பாக பகுதி மற்றும் நயாகரா பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கு உறைபனிபொழிவு எச்சரிக்கையை கனடிய சுற்றாடல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.இந்த எச்சரிக்கை டொரண்டோ நகரம், மிசிசாகா–ப்ராம்ப்டன், நயாகரா ஃபால்ஸ்–வேலண்ட்–தெற்கு நயாகரா பிராந்தியம், மற்றும் செயின்ட் கத்தரீன்ஸ்–கிரிம்ஸ்பி–வடக்கு நயாகரா பிராந்தியம் ஆகிய பகுதிகளுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பனிப்பொழிவு காரணமாக சில பயிர்கள் சேதமடைய வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. தங்கள் மரங்கள் மற்றும் செடிகளை மூடிப்பாதுகாக்குமாறும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக இருந்தவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர்.இதில் வெற்றி பெற்று டிரம்ப் அதிபராக பதவியேற்றார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.கமலா ஹாரிஸ் கொடுத்த சமீபத்திய நேர்காணலில், "எதிர்காலத்தில் வெள்ளை மாளிகையில் ஒரு பெண் ஜனாதிபதி நிச்சயம் இருப்பார். அது நானாக கூட இருக்கலாம், ஒரு பாசிசவாதியாகவும், சர்வாதிகாரியாகவும் டொனால்ட் டிரம்ப் அரசை வழி நடத்துவார் என்ற எனது கணிப்புகள் உண்மையாகிவிட்டன" என்று தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி, கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தீபாவளி என்ற வாா்த்தையுடன் பாரம்பரிய ரங்கோலி படமும் இடம்பெற்றுள்ளது.இது தொடா்பாக கனடா அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கனடா உள்பட உலகம் முழுவதும் ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்த மதத்தினா், சமண மதத்தினரால் கொண்டாடப்படும் முக்கிய திருவிழா தீபாவளியாகும்.கனடாவின் பன்முக கலாசாரக் கட்டமைப்பை அங்கீகரிக்கும் வகையில், தீபாவளி சிறப்பு அஞ்சல் தலை வெளியிடுவது பெருமைக்குரியது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அஞ்சல் தலை வெளியீட்டுக்காக கனடா அஞ்சல் துறைக்கு
அமெரிக்கா தயாராக இருந்தால் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்குத் நடத்துவதற்கு தயாராக உள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா வரிகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய வரிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கனடா ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தை வெளியிட்டது.அந்த விளம்பரத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் வரி விதிப்புகள் வர்த்தக போர்களை உருவாக்கலாம் என்று உரையாற்றிய காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இந்நிலையில் கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதாக ட்ரம்ப் அறிவித்தார். அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தக் கனடா தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க்
தாய்லாந்தின் முன்னாள் ராணி மற்றும் தற்போதைய மன்னர் மஹா வஜிரலொங்கோர்னின் தாயாருமான ராணி சிரிகிட் கிடியாகரா (Queen Sirikit Kitiyakara) தனது 93 வது வயதில் காலமானார்.நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இவர், வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 24, 2025) உயிரிழந்ததாக தாய்லாந்து அரச குடும்பம் அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி கனடா மீது விதித்துள்ள வரிகளால் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு அதிகரித்துவருகிறது. இந்நிலையில், வரிவிதிப்பு தொடர்பில் கனடா வெளியிட்ட வீடியோ ஒன்று டிரம்பை ஆத்திரமடையவைத்துள்ளது.கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசு சமீபத்தில் பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ரொனால்ட் ரீகன், வரிவிதிப்பு தொடர்பில் வானொலியில் ஆற்றிய உரை ஒன்று இடம்பெற்றுள்ளது.அந்த உரையில், ’வெளிநாடொன்றிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி விதிப்போம் என ஒருவர் கூறுவாரானால், பார்ப்பதற்கு அது நாம் அமெரிக்காவின் தயாரிப்புகளையும் வேலைகளையும் பாதுகாப்பதற்காக எடுக்கும் நடவடிக்கை போல் தோன்றும். ஆனால், காலப்போக்கில் அது ஒவ்வொரு அமெரிக்க பணியாளர
சீனாவுடன் மூலோபாய கூட்டணியை பேண விரும்புவதாக கனடா தெரிவித்துள்ளது.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சீனாவை “உலகளாவிய குழப்பம் ஏற்படுத்தும் சக்தி” என குற்றம் சுமத்திய நிலையில், தற்போது அதே நாட்டை ஒரு மூலோபாய ரீதியான பங்காளி (strategic partner) எனக் காணத் தொடங்கியுள்ளது என கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.“இரு நாடுகளுக்கிடையே சில பிரச்சினைகள் இருந்தாலும், அவை முழு உறவை பாதிக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.பொருளாதாரமும் பாதுகாப்பும் ஆகிய துறைகளில் கனடா தனது நலன்களை முன்னேற்றிக் கொள்ளும் நோக்கத்துடன் சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது அவசியம் என தெரிவித்துள்ளார். அனிதா ஆனந்த் சீனா, இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்ததையடுத்து இந்த கருத்தை தெரிவி
கனடாவின் மொன்றியலில் கொகேய்ன் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாகாணங்களுக்கு இடையே செயல்பட்டதாக கூறப்படும் கொகேய்ன் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.மொன்றியல், லாரன்ஷியன் மற்றும் மொண்டெரெஜி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில், டொரண்டோவில் இருந்து கொகேய்னை பெற்று கியுபெக்கில் மீள விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் வலையமைப்பை குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.கரீம் சப்பி, கத்தரின் ட்ரூடெல்-பிரிமோ, ஜீன்-பிரான்சுவா ரோபெர்ஜ், மனோன் பிரிமோ, மத்யூ போஷார்ட், ஜென்னிபர் டிவ்ரிஸ், மிச்சேல் பிரான்செஸ்கோ மணிகோன் மற்றும் ஜூலி செயிண்ட்-ஜாக்ஸ்-லாபோயிண்ட் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் அனைவரும் 24 முதல் 54 வயத
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. மொத்தம் 24 அடி உயரம் கொண்ட இந்த ஏரியின் நீர்மட்டம் 21 அடியை கடந்துள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி இன்று மாலை 4 மணி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு வெள்ள முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கடந்த 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வழக்கத்தை விட இந்த முறை வடகிழக்கு பருவமழை அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மழை
இங்கிலாந்தில் சில வீடுகளில் அப்பிள் பழங்களின் அறுவடையின் பின்னர் வீட்டுக்கு வேண்டுமான பழங்களை எடுத்து கொண்டு மீதமானவற்றை வெளியே வைத்துவிடுவார்கள். வழியி்ல் செல்லும் வழிபோக்கர்கள் இலவசமாக எடுத்து செல்ல வைத்து விடுவார்கள்.இயற்கையாக விளைந்த இந்த பழத்துக்கும், மருந்துகள் பூச்சி நாசினிகள் பாவித்து விளைவிக்கபட்டு குளிரூட்டிகளில் பதனிடப்பட்ட கடை அப்பிள்களுக்கும் சுவையில் பெரும் வித்தியாசம் உள்ளது என அப்பிள் பழங்களை சுவைத்த ஒரு வழிபோக்கர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ (Prince Andrew), ‘யோர்க் கோமகன்’ (Duke of York) என்ற பட்டம் உட்பட தனக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பட்டங்களையும், கௌரவங்களையும் இனி பயன்படுத்தப் போவதில்லை என்று அறிவித்தார்.ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) விவகாரத்தில் தன் மீதான தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள், அவரது அண்ணன் மன்னர் சார்லஸ் மற்றும் அரச குடும்பத்தின் பணிகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.மன்னர் மற்றும் தனது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்ததாகவும், தனது கடமையை குடும்பத்திற்கும் நாட்டிற்கும் முதன்மைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எப்ஸ்டீனின் பாலியல் கடத்தல் குற்றங்களுக்கு ஆளான வெர்ஜீனிய கியூஃப்ரே (Virginia Giuffre) என்பவரின் பு
கனடா கூட்டாட்சி அரசு இன்று எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் புதிய திட்டங்களை அறிவிக்கவுள்ளது. பிரதமர் மார்க் கார்னி நயாகரா பகுதியில் உள்ள ஒரு எல்லைச் சோதனை நிலையத்தை இன்று பார்வையிடுகிறார்.அதனைத் தொடர்ந்து பொது பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.இம்மாதம், லிபரல் அரசு தமது எல்லைப் பாதுகாப்பு மசோதாவை இரண்டு பகுதிகளாகப் பிரித்தது — சில முக்கிய பிரிவுகளை விரைவாக நிறைவேற்றவும், விவாதத்திற்குரிய பகுதிகளுக்கு கூடுதல் பரிசீலனை நேரம் வழங்கி பின்னர் நிறைவேறற்வும் திட்டமிட்டுள்ளது.புதிய மசோதாவில், கடலோர பாதுகாப்புப் படையின் (Coast Guard) பங்கு விரிவுபடுத்துதல், குடியேற்ற மற்றும் அகதி முறைமையை வலுப்படுத்துதல், பாலியல் குற்றவாளிகளின் தகவல் பகிர்வை மேம்படுத்துதல், சட்டவி