ஹாமில்டன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்
கனடாவின் ஹாமில்டன் நகரில் 2026 ஆம் ஆண்டின் முதல் துப்பாக்கிச்சூடு சம்பவம் பதிவாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக பொதுமக்களின் உதவியை காவல்துறை கோரியுள்ளது.
ஜனவரி 31 ஆம் தேதி மாலை சுமார் 7.13 மணியளவில், ஈஸ்ட் 28வது தெரு மற்றும் பென்னெல் அவென்யூ ஈஸ்ட் சந்திக்கும் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில், ஒரு வயது வந்த ஆண் காயமடைந்ததாகவும், அவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து கால்நடையாக தப்பிச் சென்றுள்ளதாகவும், பென்னெல் அவென்யூ ஈஸ்டிலிருந்து ஈஸ்ட் 27வது தெரு வழியாக வடக்கு திசையில் சென்றிருக்கலாம் எனவும் விசாரணையாளர்கள் நம்புகின்றனர். தற்போது விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், சந்தேக நபரின் விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.