கனடாவில் தங்க நகை வாங்குபவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை
கனடாவின் டொரன்டோவில் வசிக்கும்இலங்கை தமிழர் ஒருவர் தனது நான்கு கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை விற்பனை செய்வதற்காக அங்குள்ள நகைக்கடைக்கு சென்றபோது ஒரே நகை வெவ்வேறு கடைகளில் எடைகள் காட்டப்பட்ட சம்பவம் தங்க நகையை கொண்டு சென்றவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து குறித்த நபர் மொத்தம் ஐந்து நகைக்கடைகளுக்கு சென்று தனது நகையை எடைபோட்டு பார்த்துள்ளார். அதில் நான்கு கடைகளில் உள்ள மின்னணு எடை இயந்திரங்கள் அவரது நகையின் சரியான எடையை காட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக அந்த நான்கு கடைகளில் நகையை அளவிடும் போது 3.9 கிராம், 3.8 கிராம் மற்றும் 3.85 கிராம் என நகையின் உண்மையான எடையை விட குறைவான அளவுகளே காட்டப்பட்டுள்ளன.
அதேசமயம் ஐந்து நகைக்கடைகளில் ஒரே ஒரு கடையில் மாத்திரம் நகையின் சரியான எடையான நான்கு கிராம் துல்லியமாக காட்டப்பட்டுள்ளது. தற்போது சந்தை நிலவரப்படி 0.1 கிராம் தங்கத்தின் மதிப்பு சுமார் 13.68 அமெரிக்க டாலர் அதாவது சுமார் 20 கனேடியன் டாலர்கள் ஆகும்.
ஒரு கடையில் 0.2 கிராம் எடை குறைவாக காட்டப்பட்டால் வாடிக்கையாளருக்கு தெரியாமலேயே சுமார் 40 கனேடியன் டாலர்கள் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
நகைக்கடைகளில் உள்ள எடை இயந்திரங்கள் முறையாக அங்கீகரிக்கப்பட்டு காலிப்ரேஷன் (Calibration) செய்யப்பட வேண்டியது அவசியம்.
சிறிய அளவிலான எடை குறைப்பு கூட அதிகப்படியான தங்கத்தை விற்கும் போது அல்லது வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்தும். எனவே தங்க நகைகளை வாங்கும்போது மிகவும் அவதானமாக அவதானித்து வாங்குங்கள்.