ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர். ஒருவன் வருத்தத்தோடு கேட்டான்! நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன். என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது. நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா?அடுத்தவன் ஞானியிடம் சொன்னான், நான் இவர் அளவுக்குப் பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை. சின்னச் சின்னப் பொய்கள், சிறு ஏமாற்றுக்கள் இப்படி நிறைய செய்துள்ளேன். தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா என்ன?ஞானி சிரித்தார்!!முதல் ஆளிடம், "நீ போய் பெரிய பாறை ஒன்றைத் தூக்கி வா, "என்றார். இரண்டாமவனிடம், நீ போய் இந்த கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கி வா என்றார். இருவரும் அவ்வாறே செய்தனர். முதல்வன் ஒரு பெரிய பாறையைத் தூக்கி வந்தான். அடுத்தவன் கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கிக் கொண்டு வந்தான். இப்போது ஞானி சொன்னார், "சரி, இருவரும் கொண்டு வந்தவற்றை சரியாக எந்த இடத்தில் எடுத்தீர்களோ, அங்கேயே திரும்பப் போட்டு விட்டு வாருங்கள்," என்றார். முதல்வன் பாறையை எடுத்துக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வைத்து விட்டுத் திரும்பினான்.இரண்டாமவன் தயக்கத்துடன், இவ்வளவு கற்களை நான் எப்படி சரியாக அவை இருந்த இடத்திலேயே வைக்க முடியும்?" என்று கேட்டான்.ஞானி சொன்னார், முடியாதல்லவா, அவன் பெரிய தவறு செய்தான். அதற்காக வருந்தி அழுது மன்னிப்புக் கேட்டு அவன் மாற்றுப் பரிகாரம் செய்து அவன் மீட்சி அடையலாம். நீ சின்னச் சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்தும் அவை பாவம் என்று கூட உணராதவன். யாரெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது கூட உனக்கு நினைவிருக்காது. அவனுக்கு மீட்சி சுலபம். உனக்குத் தான் மீட்சி என்பது மிகக் கடினம்!சிறு துளிகள்!! பெரும் வெள்ளம்
மேஷம்தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆலோசனைகளால் தெளிவுகள் ஏற்படும். விவசாய பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் ரிஷபம்வித்தியாசமான சிந்தனைகள் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அரசு குறித்த சில நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் முயற்சிகளில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். அன்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு மிதுனம்பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். கல்வியில் சாதகமான சூழல் அமையும். பொன், பொருட்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தருணங்கள் அமையும். தொழில் சம்பந்தமான பயணங்கள் கைகூடும். நிம்மதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு கடகம்தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் அமையும். புதிய நபர்களிடம் விழிப்புடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் அவ்வப்போது தோன்றி மறையும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை குறைக்கவும். குணநலன்களில் சில மாற்றம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு சிம்மம்அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். சில பணிகளை செய்து முடிப்பதில் வேகத்தைவிட நிதானம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்துச் செயல்படவும். மாணவர்களின் கற்பித்தலில் சிறு சிறு மாற்றங்கள் காணப்படும். உத்தியோக பணிகளில் விழிப்புணர்வு வேண்டும். ஆதாயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு கன்னிஉடன்பிறப்புகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். கடினமான பணிகளையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பொன், பொருட்ச்சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். வழக்கு சம்பந்தமான செயல்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் துலாம்பொருளாதார மேன்மையால் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் நிமித்தமான பணிகளில் அலைச்சல் உண்டாகும். வெளியூர் பயணம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கர்வமின்றி செயல்படுவது மேன்மையை உருவாக்கும். தற்பெருமை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. அரசு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் விருச்சிகம்புதிய தொழில் நுட்ப பொருட்களை வாங்குவீர்கள். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். வெளிநாடு குடியுரிமை கிடைப்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். உயர்கல்வியில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் தனுசுகடன் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வேலையாட்களால் சில நெருக்கடிகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக்கொள்ளவும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சிப் பணிகளில் நுணுக்கமான சில விஷயங்களை அறிவீர்கள். பொறுமை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு மகரம்புதிய பொறுப்புகளும் பதவிகளும் ஏற்படும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் வழியில் ஆதாயம் ஏற்படும். தாமதம் விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : நீலம் கும்பம்நிர்வாகத் திறமைகள் வெளிப்படும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் சாதகமாக அமையும். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். உயர்பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மற்றும் அறிமுகங்கள் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திடீர் தனவரவுகள் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு மீனம்வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
குரோதி வருடம் தை மாதம் 1 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 14.1.2025சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.இன்று அதிகாலை 04.40 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை .இன்று காலை 11.24 வரை புனர்பூசம். பின்னர் பூசம் .கேட்டை மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம். லிங்கன் ஒருநாள் தன் கோச்சு வண்டியில் தலைநகர் வாஷிங்டன் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் சென்று கொண்டிருந்த சாலையின் பக்கத்திலே சதுப்புநில புதைகுழி ஒன்றிருந்தது. அந்தப் புதைகுழியில் பன்றிக் குட்டி ஒன்று தவறி விழுந்து அதிலிருந்து மீள முடியாமல் போராடித் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.உடனே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி அந்த சகதியில் கால் வைத்து ஒருவாறு பன்றிக் குட்டியைப் புதை குழியினின்று மீட்டார்.பன்றிக் குட்டியைச் சற்று தூரத்தில் விட்டார். துள்ளிக் குதித்து ஓடியது பன்றி.ஆபிரகாம் லிங்கனின் உடம்பெல்லாம் சகதி. ஆடையெல்லாம் அழுக்கு, வெள்ளை மாளிகையில் இச்செய்தி பரவ அனைவரும் ஜனாதிபதியின் உயிர் இரக்கத்தைப் பாராட்டினார்.லிங்கன் சொன்னார். தயவு செய்து என்னைப் புகழாதீர்கள்.அந்த சின்னப் பிராணி சகதியிலே சிக்கிக்கொண்டு பரிதவித்துத் துடித்தது. அதைக் கண்ணுற்றதும் என் நெஞ்சத்தில் ஒரு நெருஞ்சி முள் குத்தியது போன்ற உணர்வு ஏற்பட்டது. என் நெஞ்சில் பாய்ந்த முள்ளை நீக்கினேன். அவ்வளவுதான்.உண்மையிலே அந்தப் பிராணிக்கு நான் உதவினேன் என்பதைவிட எனக்கு ஏற்பட்ட இன்னலைப் போக்கிக் கொண்டேன் என்பதுதான் உண்மை.பண்புகளில் தலைமையிடம் வகிக்கும் கருணையைத்தான் அனைத்து மதங்களும் ஆண்டவனுக்குச் செய்யும் ஆராதனையாகக் குறிப்பிடுகின்றன.
பெரிய மகான் ஒருவர் ஊருக்கு வந்திருந்தார். இரண்டு பொண்ணுங்க தினமும் அவரை போய் பார்த்துட்டு ஆசீர்வாதம் வாங்கிட்டு வர்றாங்க. ஒரு பொண்ணு நல்லகுணம்.இன்னொரு பொண்ணு கொஞ்சம் கெட்ட குணம்.கெட்ட குணம் இருக்கிற பொண்ணுக்கு மகான் முதல்ல இங்கே வாம்மா!ன்னு கூப்பிட்டு பிரசாதம் கொடுத்து அனுப்பி வைத்தார். நல்ல குணம் இருக்கிற பொண்ணுக்கு காக்க வச்சு கடைசியில ஆசீர்வாதம் பண்ணி அனுப்பினார்.பத்து நாளைக்கு மேல இதேபோல நடக்கவும்,நல்லகுணம் இருக்கிற பொண்ணுக்கு தாங்க முடியல. என்ன சாமி? ரெண்டு பேரும் ஒண்ணா வரோம்.அவரை பத்தி ஓரஞ்சாரமா தெரிஞ்சிருந்தும் அவளை மட்டும் படக்குனு கூப்பிட்டு ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வச்சீங்களே? என்று மன வருத்தத்தை கொட்டிவிட்டார்.அதற்கு மகான் சிரித்துக்கொண்டு, அட பொண்ணு! அவளை எனக்கு ரொம்ப நேரம் பார்க்க பிடிக்கவில்லை. அதனால் அவளை உடனே ஆசீர்வதித்து அனுப்புறேன் ஆனா உன்ன ரொம்ப நேரம் பார்த்து உன் கூட இருக்கணும்னு தோணுது அதனால உன்னை ரொம்ப நேரம் என் கூட இருக்கிறதுக்கு அனுமதிக்கிறேன் என்று சொன்னாராம்.அதே போல தான் கடவுள் கெட்டவர்களுக்கு நல்லா கொடுப்பாரு! ஆனா சீக்கிரம் ஓடுன்னு டாட்டா காமிச்சு அனுப்பி வச்சுருவாரு.நல்லவங்களை தன் கூடவே வச்சிக்கிறாரு.எல்லா வேதங்களிலும் சொல்வது இதுதான். எவனொருவன் பிறரிடத்தில் அன்பாக இருக்கிறானோ, தரும காரியங்கள் செய்கின்றானோ அவன் எனக்கு அருகில் இருப்பான்! என்கிறார் கடவுள்.
சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் நாட்டிலிருந்து பயணமாகிறார். சீனாவில் பரவி வரும் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றின் மத்தியில் ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் மேற்கொள்வது பலத்த எதிர்பார்ப்பு மற்றும் சந்தேகங்களை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.இதேநேரம் சீனாவில் பரவும் மெட்டாப் நியூமோ வைரஸ் (எச்.எம்.பி.வி.) தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. அதுமட்டுமல்லாது உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இதனால் கடந்த 2022 சீனாவில் உருவான கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 2 மில்லியனுகும் அதிகமான மக்கள் பலியாகினர் என கூறப்படுகின்றது. அதேபோன்று பல மில்லியன் மக்கள் அந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும் இருந்தனர்.இதனால் சீனாவில் புதிதாக பரவி வரும் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இதேநேரம் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லி கியாங் (Li Qiang) மற்றும் இராஜதந்திரிகளை சந்திக்க உள்ளார். அத்தோடு இந்த விஜயத்தின் போது, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைசார் பல கள விஜயங்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளதோடு பல உயர் மட்ட வர்த்தகக் கூட்டங்களிலும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்த விஜயம் மிக முக்கியமான முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. இதன் ஊடாக இருதரப்பு பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த விஜயத்தின் போது முக்கிய 7 ஒப்பங்தங்கள் கைசாத்திடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது சீனாவில் பரவி வரும் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றின் மத்தியிலும் ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் மேற்கொள்வதானது இலங்கைக்கு குறித்த வைரசை கொண்டுவருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் ஏற்படும் எனவும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.00
இலங்கையில் சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிவுக்கு கொண்டு வருமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் உயர் சட்ட அதிகாரிகள் ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.எனவே, குற்றம் செய்யும் எந்தவொரு நபரின் நிலை என்னவாக இருந்தாலும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.இங்கு, வழக்கின் தாமதத்தை பாதிக்கும் நடைமுறை சிக்கல்கள் மற்றும் வழக்கு கோப்புகள் முழுமையடையாததற்கான காரணங்கள் குறித்து சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.இந்தக் கலந்துரையாடலில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, மற்றும் மூத்த அதிகாரிகள் சட்டமா அதிபருடன் கலந்து கொண்டனர்00
உள்ளூர் சந்தையில் புளி பற்றாக்குறை காரணமாக, ஒரு கிலோ கிராம் புளியை 2,000 ரூபாய் சில்லறை விலையில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.350 முதல் 400 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கிராம் புளி, தற்போது 2,000 ரூபாவுக்குக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் வியாபாரிகள் தெரிவித்தனர்.இந்த நாட்களில் புளிய மரங்களில் அறுவடை இல்லை என்றும், மார்ச் மாத இறுதியில் புளி அறுவடை முடியும் வரை இந்தப் பற்றாக்குறை தொடரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.000
கடற்கரையில் கண்ணன், ராதை ஆகிய இருவரும் இணைந்த தெய்வீக சிலைகள் கரையொதுங்கிய சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை ஆகிய இருவரும் இணைந்த தெய்வீக சிலை ஒன்று திடீரென கரையொதுங்கியுள்ளது அண்மைக்காலமாக கால நிலையில் ஏற்பட்ட மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, புயல்கள், தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் ஏற்ப்பட்டது. அதன்போது இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, போன்ற நாடுகளில் இருந்து குறித்த சிலை வந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.இந்நிலையில் குறித்த சிலையை பார்வையிடுவதற்காக அதிகளவான மக்கள் குவிந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.00
எரிபொருளுக்காக தற்போது விதிக்கப்படும் வரியில் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெற்றோல் லீற்றர் ஒன்றுக்காக 72 ரூபாயும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றுக்காக 50 ரூபாயும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றுக்காக 57 ரூபாயும் வரியாக விதிக்கப்படுகிறது. இந்தநிலையில், குறித்த வரியை கடந்த 11 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தொடர்ச்சியாக மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.000
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைய, வாகன இறக்குமதிக்கான ஏனைய அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட பின்னரான மொத்த வரியானது 500 சதவீதமாக அதிகரிக்கப்படக் கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தச் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த வருடத்திற்குள் 50 ஆயிரம், வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக நிலவிய வாகன இறக்குமதிக்கான தடையைத் தளர்த்தி அரசாங்கம் மீண்டும் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்குமான வரி சதவீதங்களை உள்ளடக்கிய அதிவிசேட வர்த்தமானியை அரசாங்கம் கடந்த வாரம் வெளியிட்டது. நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் குறித்த அதிவிசேட வர்த்தமானி வெளியிட்டுள்ளது. அதன்படி, வாகன உற்பத்தி திகதியிலிருந்து 10 வருடங்களுக்கு குறைந்த ஆயுட்காலத்தைக் கொண்ட வாகனங்களுக்காக 200 சதவீதம் முதல் 300 சதவீதம் வரையில் வரி விதிக்கப்படவுள்ளது. அதன்படி, வாகனங்களின் விலை எதிர்காலத்தில் 20 சதவீதம் வரையில் அதிகரிக்கக் கூடும் எனவும், இயந்திர திறன் 660 சிசி பிரிவில் உள்ள வாகனங்களான வெகன்ஆர், சுசுகி எல்டோ உள்ளிட்ட மகிழுந்துகளுக்கு நிலவிய வரி 16 இலட்சம் என்பதுடன், புதிய வரி கொள்கைக்கு அமைய அந்த வரி 18 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளது. டொயோட்டா விட்ஸ் மற்றும் டொயோட்டா கொரோலா உள்ளிட்ட ஆயிரம் சிசி இயந்திர திறன் கொண்ட மகிழுந்துக்கான வரி சுமார் 20 இலட்சம் ரூபாவில் காணப்பட்டதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் தற்போதைய புதிய வரி கொள்கைக்கு அமைய, குறித்த வாகனங்களுக்கான வரி சுமார் 24 இலட்சம் ரூபாய் அதிகரிக்கும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், டொயோட்டா அக்வா, டொயோட்டா ஆக்சியோ மற்றும் டொயோட்டா பிரீமியோ உள்ளிட்ட ஆயிரத்து 500 சிசி இயந்திர திறன் கொண்ட மகிழுந்துகளுக்கான வரி சுமார் 57 இலட்சத்திலிருந்து, 66 இலட்சம் வரை அதிகரிக்கக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே, இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்காக அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட பின்னரான மொத்த வரியானது 500 சதவீதம் வரை அதிகரிக்ககூடும் என தெரிவித்துள்ளார்.000
இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் தலைவராக மிட்செல் சான்ட்னர் பெயரிடப்பட்டுள்ளார். இதில் மூத்த வீரர்களான கேன் வில்லியம்சன், டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, லாக்கி பெர்குசன், டாம் லாதம், டேரில் மிட்செல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகிறது. மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை இந்த தொடர் நடைபெறவுள்ளது. குழு ஏ பிரிவில் இந்தியா, பாக்கிஸ்தான் , நியூசிலாந்து, பங்களாதேஸ் அணிகளும், குழு பி பிரிவில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை போட்டியிட வேண்டும் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்நிலையில், இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது000
மேஷம்மாணவர்களுக்கு கல்விப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். தைரியமான செயல்பாடுகள் மூலம் மதிப்பு மேம்படும். கலைப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த விமர்சனங்கள் குறையும். சகோதர உறவுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தாமதம் மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் ரிஷபம்குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சூழ்நிலை அறிந்து பேசுவது நன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். செய்கின்ற செயல்களில் கவனம் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் மிதுனம்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்பும், ஆறுதலும் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. காரசாரமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : ஊதா கடகம்கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். சுபகாரியங்கள் தொடர்பான சுபவிரயங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் சாதகமற்ற சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சலும், புரிதலும் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் சிம்மம்பொருளாதாரம் தொடர்பான பிரச்சனை குறையும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதிய நம்பிக்கையும் தெளிவும் ஏற்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வெளியூர் பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். சாந்தம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் கன்னிவியாபார பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். கற்றல் திறனில் சில மாற்றம் ஏற்படும். தாயாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அறப்பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு துலாம்சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். தான தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் கிடைக்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். கௌரவ பொறுப்புகள் மூலம் மதிப்பு அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு விருச்சிகம்பேச்சுகளில் கனிவு வேண்டும். சிந்தனைப்போக்கில் கவனம் வேண்டும். வரவுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். காப்பீடு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் விசயத்தில் சிந்தித்துச் செயல்படவும். திடீர் பயணம் மூலம் மாற்றமான அனுபவம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் தனுசுநண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். இழுபறியாக இருந்துவந்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் நுணுக்கமான சில விஷயங்களை அறிவீர்கள். வாழ்க்கைத்துணையின் வழியில் ஆதாயம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு மகரம்உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் மூலம் புதிய கண்ணோட்டம் உண்டாகும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை குறைத்து கொள்ளவும். மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் கும்பம்குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். பொழுதுபோக்கு செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். கலை சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். பணி நிமித்தமான முயற்சிகள் சாதகமாக அமையும். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் மீனம்கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் மற்றும் பாக்கிகள் வசூலாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இன்பம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
குரோதி வருடம் மார்கழி மாதம் 29 ஆம் தேதி திங்கட்கிழமை 13.1.2025.சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 05.20 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி. இன்று காலை 11.23 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம். அனுஷம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
நான் தூக்கத்தில் மன்னன். பாழுங்காட்டில் துண்டை விரித்துப்படுத்தால்கூட, நான் சுலபமாகத் தூங்கிவிடுவேன். அதனால் நான் இழந்தது கொஞ்சமா? கேலிக்கு ஆளானது கொஞ்சமா?இரவில் சாப்பிட்டுவிட்டுக் காரில் ஏறிப்படுத்தால், காலையில் திருச்சி வரும்போதுதான் விழிப்பேன்.அதிலே சிந்தனைக்கு லாபம் இருந்ததே தவிர, வந்த லாபம் போகவும் செய்தது.கும்பகர்ணன் மட்டும் தூக்கத்தைக் குறைத்துக் கொண்டிருந்தால்,ஸ்ரீராமனுடைய சைன்யம் சேதுக்கடலைத் தாண்டியிருக்காது என்பார்கள்.இரவும், பகலும் தூங்காமல் விழித்துக்கொண்டே நம்மைக் காவல் காக்கிறாள் மதுரை மீனாட்சி.அவளுக்கு மீனாட்சி என்ற பெயர் வந்ததற்குக் காரணமே அதுதான் என்கிறார் வாரியார் சுவாமிகள்.மீன்போல் விழித்திருந்து அவள் ஆட்சி செய்வதால் அவள் மீனாட்சி. இதை எனது குருநாதர் வாரியார் சுவாமிகள் அழகாகச் சொல்லுவார்:“ஓடும் ரயிலில் இரண்டாயிரம் பேர் தூங்குகிறோம். இன்ஜின் டிரைவர் விழித்துக் கொண்டிருக்கிறார். அவரும் தூங்கிவிட்டால் இரண்டாயிரம் பேரும் என்ன ஆவது?”“நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தாமும் கேட்டார்” என்று தம்பி கல்யாணசுந்தரம் பாடியிருக்கிறார்.தூக்கம் ஒருவகை லயம், ஒரு வகைச் சுகம் ஈடு இணையில்லாத போகம்!நல்ல தூக்கம் ஒருவனுக்கு வருவது, அவன் செய்த தவம், அவன் பெற்ற வாரம்.. ஆனால், கடமைகளை மறக்கடிக்கும் தூக்கம் போகமல்ல – ரோகம்.காலை ஆறு மணிக்குத் திருமணம். மாப்பிள்ளை ஏழு மணிக்கு எழுந்திருந்தால், நேரம் காத்திருக்குமா? ஆகவே எந்தப் போகமும் அளவுக்குரியது.ஒரு குறிப்பிட்ட வயது வரையில், குழந்தைக்குத் தூக்கம்தான் வளர்ச்சி.அந்த வயதுக்குப்பின், விழிப்புத்தான் வளர்ச்சி. நன்றாக வளர்ந்து, காக்கவேண்டியவர்களைக் காத்து, சேர்க்க வேண்டியவற்றைச் சேர்த்த பிற்பாடு தூக்கம் ஒரு யோகம்.காக்கவேண்டிய காலத்தில் தூங்குவதே ரோகம். ஆனால், துர்ப்பாக்கியவசமாகத் தள்ளாடும் வயதில் எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டுத் தூங்கப் போகிறவனுக்குத் தூக்கம் வராது.ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் தூக்கம் குறையத் தொடங்கும்.‘ஐயோ தூங்கமுடியவில்லையே’ என்று கவலைப்பட்டுப் பயனில்லை.‘சுகபோகத்தை அனுபவிக்க வேண்டிய வயதில் அனுபவித்துத் தீர்த்துவிட்டோம்’ அன்று ஆறுதலடைவதைத் தவிர வேறு வழியில்லை.திருடர் பயம் நிறைந்த இடத்தில், விழுந்து விழுந்து தூங்கினால் நஷ்டம்.ஆபத்தான நேரங்களில், தூக்கத்தை அறவே விளக்காவிட்டால் கஷ்டம்.தவறினால், ஒரு போகம் பல ரோகங்களுக்குக் காரணமாகிவிடும்.ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம்தான் தூங்குவான் அடால்ஃப் ஹிட்லர். அது அவனுக்குப் ஒதுமானதாக இருந்தது. மளமளவென்று வெற்றியையும் தேடித் தந்தது.ஒருநாள் நிம்மதியாகத் தூங்க விரும்பி, இரண்டு மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு தூங்கினான். அன்றைக்குத்தான், ‘நார்மண்டி முற்றுகை’ நடந்தது. ஐசன்ஹோவரும், சர்ச்சிலும் ஆயிரக்கணக்கான கப்பல்களைப் பிரஞ்சு நாட்டு ‘நார்மண்டி’ கடற்கரைக்கு அனுப்பி வெற்றி பெற்றுவிட்டார்கள்.ஹிட்லரின் தோல்விக்கு அமெரிக்காவின் அணுகுண்டா காரணம்? இல்லை, ஹிட்லரின் தூக்கமே காரணம்! ஆகவே அனுபவத்தின் காரணமாகச் சொல்கிறேன்:“அனுபவிப்பதை அளவோடு அனுபவியுங்கள். உண்பதில் நிதானம்... உறங்குவதில் நிதானம் – தீயன பழகாமல் இருத்தல் – அளவான வாழ்க்கையிலேயே அதிகமாக உற்சாகத்தைக் காணுதல் – இப்படி வாழ்ந்தால் இறைவன் ஒத்துழைப்பான்.– கண்ணதாசனின், “போகம், ரோகம், யோகம்”
1989 அருப்புக் கோட்டை சிவன் கோயிலில் நடைபெற்ற திருமுருக கிருபானந்த வாரியார் சாமி அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு.அவர் ஒரு ஆன்மீகச் சொற்பொழிவாளர் என்பதையும் தாண்டி, மிகச் சிறந்த தமிழ் அறிஞர்.வேதாந்த தத்துவங்களை எளிதில் புரியும் உதாரணங்களோடு கூறுவதில் அவருக்கு நிகர் அவரே.அன்று அவர் கூறிய ஒரு தத்துவம்.மாட்டு வண்டி உங்கள் அனைவருக்கும் தெரியும். வண்டிக்கு அறிவு கிடையாது. மாட்டுக்கு அறிவு உண்டு.ஆனால் அறிவுள்ள மாட்டால் வண்டியை தானேபூட்டிக் கொள்ள முடியாது. அறிவில்லாத வண்டியாலும் தானே போய் மாட்டின் மேல் இணைய முடியாது.வண்டிக்கு சொந்தக்காரன் ஒருவர் உள்ளான். அவன் தான் பூட்டாங்கயிறால் வண்டியையும் மாட்டையும் இணைத்து இயக்குகிறார்.பயணம் முடிந்தவுடன் வண்டிக்காரன் வண்டியையும் மாட்டையும் தனித்தனியே பிரித்து வைத்து விடுவார்.நம் உடலுக்குப் பெயர் அசித்து. ஆன்மா பெயர் சித்து. ஆன்மாவுக்கு அறிவு உண்டு. உடலுக்கு அறிவு கிடையாது. இரண்டும் தானே இணைந்து செயல்பட முடியாது.இறைவன் என்னும் வண்டிக்காரன்,பிராண வாயு (ஆக்ஜிஸன்) என்னும் பூட்டான் கயிறால் உடலையும் ஆன்மாவையும் இணைத்து இயக்கிக் கொண்டு உள்ளார்.வாழ்க்கைப் பயணம் முடிந்தவுடன் இரண்டையும் தனித்தனியே பிரித்து வைத்து விடுகிறார். அதற்கு மரணம் என்று பெயர்.மரணம் வரும்வரை சரணம் சொல்ல வேண்டும் என்றபோது கரவொலி அடங்க வெகுநேரம் ஆனது.
மேஷம்தன்னம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். அதிகார பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். விளையாட்டு விஷயத்தில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றியமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் ரிஷபம்வியாபார பணிகளில் நெருக்கடிகள் குறையும். உங்கள் கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். மனதில் நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் மாற்றங்கள் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மிதுனம்குணநலன்களில் சில மாற்றம் காணப்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் தூக்கமின்மையும், சோர்வும் ஏற்படும். அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்கள் பேச்சுக்களில் கவனம் வேண்டும். புதிய தொழில் நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் மேம்படும். சகோதர உறவுகளிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் கடகம்குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் இருந்தாலும் ஒத்துழைப்பு ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். சிரமம் விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் சிம்மம்மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்கள் வருகையால் அலைச்சலும் விரயங்களும் உண்டாகும். புதிய துறை சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை கன்னிகுடும்பத்தில் அமைதி உண்டாகும். பாதியில் நின்ற பணிகளைச் செய்து முடிப்பீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். எதிர்பாராத சில அனுபவங்கள் மூலம் புதிய பாதை புலப்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் ஆதாயம் ஏற்படும். பக்தி மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு துலாம்உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாமன் வழி உறவுகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் அலைச்சல் ஏற்படும். கால்நடைகளிடம் கவனம் வேண்டும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உருவாகும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். ஆதரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை .விருச்சிகம்குழந்தைகள் தொடர்பான செயல்களில் கவனத்துடன் இருக்கவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதளவில் குழப்பம் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். பொழுதுபோக்கு செயல்களால் கையிருப்புகள் குறையும். கலைப் பணிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு தனுசுநண்பர்களின் சந்திப்பு புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். ஆரோக்கியம் தொடர்பான சில இன்னல்கள் குறையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய கல்விகளை கற்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சோர்வு விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மகரம்விவாதங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை பொறுமையுடன் கேட்டு முடிவெடுப்பது நல்லது. ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வமும் அதனால் விரயமும் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் கும்பம்மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனை அதிகரிக்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் மீனம்குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிறு மற்றும் குறுந்தொழிலில் ஆதாயம் மேம்படும். வெளியூர் பயணங்கள் மூலம் மதிப்பு அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வீடு மற்றும் மனை சார்ந்த முதலீடுகளில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நற்செயல் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : நீலம் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
குரோதி வருடம் மார்கழி மாதம் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 12.1.2025சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.இன்று அதிகாலை 04.58 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி. இன்று காலை 11.46 வரை மிருகசீரிஷம். பின்னர் திருவாதிரை. விசாகம், அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.