Feed Item
Added article 

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனால் சந்தானம் ஹீரோவாக நடித்து சம்பாதித்ததை விட இழந்ததுதான் அதிகம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நடித்த பெருவாரியானப் படங்களை அவரே தயாரித்திருந்தார். அவர் நடித்து வரும் ‘தில்லுக்கு துட்டு’ வகைப் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகின்றன.

தற்போது சந்தானம் டி டி நெக்ஸ்ட் லெவல் படத்தினல் நடித்துள்ளார். இந்த படம் மே 16 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் சந்தானத்துடன் யாஷிகா ஆனந்த், கஸ்தூரி மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளனர்.இந்த படத்தை அவரின் நெருங்கிய நண்பர் ஆர்யா தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான டிரைலர் இணையத்தில் கவனம் பெற்றது. இந்த படம் சென்சார் செய்யப்பட்ட நிலையில் படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

  • 825