Feed Item
Added article 

'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்போது படத்தில் நடிக்கும் நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். 

ரஜினிகாந்துக்கு கிடைக்கும் சம்பளம் அதிர்ச்சியளிக்கிறது. அதன்படி, படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி. பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் ரஜினியின் சம்பளம். ரூ.260-280 கோடி வரை ரஜினி சம்பளமாகப் பெறுவதாகத் தகவல். லோகேஷ் கனகராஜுக்கும் அதிக சம்பளம். படத்தை இயக்குவதற்கு லோகேஷுக்கு ரூ.60 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாம். 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'ஜெயிலர்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் 'கூலி'. தமிழ் சினிமாவின் எல்லாக் காலத்திலும் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக 'ஜெயிலர்' இருந்தது. உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்தது. 'கூலி'யைப் பொறுத்தவரை, பாக்ஸ் ஆபிஸ் வசூலைத் தவிர மற்ற வருவாய் வழிகளும் சன் பிக்சர்ஸுக்குப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 'ஜெயிலர்' படத்தை விட அதிக OTT ஒப்பந்தத்தை 'கூலி' பெற்றுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

  • 830