ஒருமுறை காடு வழியே சென்ற ஒரு மனிதனை ஒரு புல துரத்தியது.அதனிடமிருந்து தப்பித்து அவன் ஒரு மரத்தின் மேல் ஏறினான். உச்சியை அடைந்தவனுக்கு ஒரு அதிர்ச்சி. அங்கே ஒரு பெரிய மனிதக் குரங்கு உட்கார்ந்திருந்தது.அதைப் பார்த்து நடு நடுங்கிய மனிதன் அந்த மனிதக் குரங்கிடம் அடைக்கலம் கேட்டான்.அந்த மனிதக் குரங்கு, கவலைப்படாதே நான் உன்னை எதுவும் செய்யமாட்டேன்.என்னை அண்டி வந்த உனக்கு நான் நிச்சயமாகப் பாதுகாப்புத் தருவேன் என்றது.இரவுப் பொழுதும் வந்தது... புலியோ மரத்தின் கீழே பசியோடு இருந்தது. மனிதனும் மனிதக் குரங்கும் மாறி மாறி உறங்க முடிவு செய்தனர். மனிதன் தூங்கியப் போது மனிதக்குரங்கு காவல் காத்தது குரங்கு தூங்கும் போது மனிதன் காவல் காத்தான். புலி இவர்களைப் பிரிக்க முடியாவிட்டால் நமக்கு உணவு கிடைக்காது என எண்ணி அந்த மனிதனிடம்... வஞ்சகமாகஇப்போது மனிதக்குரங்கு தூங்குகிறது நீ அதைப் பிடித்து கீழே தள்ளிவிடு... எனக்கு வேண்டியது பசிக்கு இரை, உன்னை விட்டு விடுகிறேன்” என்றது.மனித மனம் குரங்கை விட மோசமானது. நாம் தப்பிக்கலாம் என்றுத் தன்னலம் கருதி மனிதன் குரங்கை கீழே தள்ளிவிட்டான்.கீழே விழும் போது நடந்ததைப் புரிந்துக் கொண்டது மனிதக்குரங்கு.ஆனால் புலியோ “எனக்கு மனித மாமிசம் தான் வேண்டும்.... உனக்கு மனிதனின் இயல்பைப் புரிய வைக்கவே நான் இவ்வாறு கூறினேன். இப்போதும் உன்னை விட்டு விடுகிறேன்.... நீ மேலே சென்று மனிதனைக் கீழே தள்ளிவிடு நான் பசியாற மனித மாமிசம் உண்டு விட்டுப் போய் விடுகிறேன்” என்றது.அப்படியே செய்வதாக சொல்லி விட்டு மரத்தின் மேலே ஏறி வந்த குரங்கு மனிதனின் அருகில் வந்தது. மனிதனோ குரங்கைப் பார்த்து பயத்தால் நடுங்கினான்.மனிதக் குரங்கோ “பயப்படாதே மனிதா என்னை நம்பி அடைக்கலம் என்று வந்த உன்னை எப்போதும் நான் காப்பேன்.புலியிடமிருந்து தப்பிக்கவே நான் உன்னை கீழே தள்ளுவதற்கு ஒப்புக் கொண்டேன். நீ கவலை இல்லாமல் இருக்கலாம்... என்றது.நண்பன் என்று வந்தவனிடம் நட்பு பாராட்ட வேண்டும்...நட்பு ஒரு பெண்ணின் கற்பைப் போன்றது.ஒருமுறை நட்பின் புனிதத்தில் குறை கண்டோமே ஆயின் அந்த நட்பு அதன் மதிப்பை நிச்சயமாக இழந்தே போகும் இது தான் உண்மை...கதையின் நீதி :-நன்றிக்கு சிறந்த எடுத்துக்காட்டு விலங்குகள்...துரோகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு மனிதர்கள்...
காமராஜர் ஆட்சியில் எழுந்த ஒரே கிசுகிசு, இதுவாகத் தான் இருக்கும். அதற்கு காரணம், ஒரு தொழிற்சாலை தொடங்க காமராஜர் கொடுத்த திடீர் அனுமதி..திண்டுக்கல் நகரத்தை விட்டு வெகு தொலைவில், ஒரு தொழிற்சாலை துவங்க அனுமதி கேட்டிருந்தார்கள்.அதை பரிசீலனையில் வைத்திருந்தார்கள் அதிகாரிகள். இதை தெரிந்து கொண்ட காமராஜர், அவசரம் அவசரமாக அதிகாரிகளை அழைத்தார்.'உடனடியாக அந்த திண்டுக்கல்காரர்களுக்கு தொழிற்சாலை தொடங்க அனுமதி கொடுங்கள்' என்று வாய்மொழி உத்தரவை பிறப்பித்து விட்டு, புறப்பட்டுப் போய் விட்டார். அதிகாரிகள் குழம்பிப் போனார்கள்.'எதற்காக நமது முதலமைச்சர் அந்த திண்டுக்கல் தொழிற்சாலைக்கு இவ்வளவு தீவிரமாக ஆதரவு கொடுக்கிறார் ? ஒருவேளை அந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் நமது முதலமைச்சருக்கு வேண்டியவர்களாக இருப்பார்களோ ?'அதிகாரிகள் இப்படி கிசுகிசுப்பது, காமராஜர் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்து விட்டது. அதிகாரிகளை தன் அறைக்கு வரவழைத்தார்."என்ன உங்கள் சந்தேகம் ? கேளுங்கள்" அதிகாரிகள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.காமராஜரே பேசினார்."அவசரம் அவசரமாக அந்த தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்க சொன்னேனே... அது ஏன் ?இதுதானே உங்கள் சந்தேகம் ?" தொடர்ந்து காமராஜர் "திண்டுக்கல் நகரத்துக்கும், அந்த தொழிற்சாலை அமையப் போகும் இடத்துக்கும் இடையே எத்தனை கிராமங்கள் இருக்கின்றன. அது உங்களுக்கு தெரியுமா ?"அதிகாரிகள் பதில் தெரியாமல் அமைதியாக அமர்ந்திருக்க,காமராஜர் "அறுபது கிராமங்கள். அந்த 60 கிராமங்களுக்கும் இன்னமும் மின்சார வசதி செய்து கொடுக்க நம்மால் முடியவில்லை. ஏனெனில் திண்டுக்கல் நகரத்துக்கும் அந்த கிராமங்களுக்கும் இடையே ஏராளமான மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை அமைக்க வேண்டும். அதற்குத் தேவையான நிதி வசதி அரசிடம் இல்லை. எனவே அந்த புதிய தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்க, ஒரு முக்கியமான நிபந்தனையை விதித்து இருக்கிறேன்."அதிகாரிகள் காமராஜர் பேசுவதை உன்னிப்பாக கவனித்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். தான் போட்ட திட்டத்தை விரிவாக விளக்கினார் காமராஜர். புதிதாக தொடங்கவிருக்கும் தொழிற்சாலைக்கு தேவையான மின்சாரத்தை திண்டுக்கல்லில் இருந்து கொண்டு வர, அந்தத் தொழிற்சாலை நிர்வாகத்தினர், அவர்களது செலவிலேயே மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிபந்தனைக்கு சம்மதித்தால், தொழிற்சாலை தொடங்க உடனடியாக அனுமதி கொடுக்கப்படும். சம்மதித்தார்கள் தொழிற்சாலை நிர்வாகத்தினர்.உடனடியாக அத்தனை மின்கம்பங்களையும், டிரான்ஸ்பார்மர்களையும் அமைத்துக் கொடுத்து விட்டார்கள். இப்போது அந்த அறுபது கிராமங்களை ஒட்டியும் மின்கம்பங்கள்.இதை அதிகாரிகளிடம் எடுத்துச் சொன்ன காமராஜர், "இனி நமது வேலை சுலபம். மின்சாரம் இல்லாமல் தவிக்கும் அந்த 60 கிராமங்களுக்கும், ஏற்கனவே அந்த தொழிற்சாலை நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர்கள் மூலமாக, மின்சாரத்தை எளிதாக நாம் விநியோகம் செய்து விடலாம். இதனால் அரசாங்கத்துக்கு ஏராளமான மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் செலவு மிச்சமாகும்.அதற்காகத்தான் உடனடியாக அந்தத் தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கச் சொன்னேன்.புரியுதா ?"ஆச்சரியத்துடன் அசந்து போய் அமர்ந்திருந்தார்கள் அதிகாரிகள். எவ்வளவு ஒரு சமூக அக்கறை ?எப்பேர்பட்ட கூர்மையான சிந்தனை.அதற்கு முன்னும் சரி. அதற்குப் பின்னும் சரி. அந்த அளவுக்கு ஆற்றல் உள்ள, அக்கறை உள்ள அரசியல் தலைவரை, எந்த அதிகாரியும் கண்டது இல்லை. இப்படிப்பட்ட காமராஜரை பாராட்டாமல் இருக்க முடியுமா ? பக்கம் பக்கமாக பாராட்டி எழுதினார்கள் பத்திரிகையாளர்கள்..அப்போதுதான் காமராஜரிடமிருந்து, பத்திரிகையாளர்களுக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. என்னவோ ஏதோவென்று விரைந்து சென்று காமராஜரை சந்தித்தார்கள் பத்திரிகையாளர்கள்."ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லத்தான் உங்களை கூப்பிட்டேன். உங்கள் பத்திரிகைகளில் அடிக்கடி என்னை பாராட்டி எழுதி கொண்டிருக்கிறீர்கள். இனிமேல் என்னை பாராட்டி எழுதாதீர்கள்." இதைக்கேட்ட பத்திரிகையாளர்கள் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, தொடர்ந்து காமராஜர் சொன்னார்."நான் நேர்மையோடு இருப்பது பெரிய விஷயம் இல்லை. ஏனென்றால் எனக்கு மனைவியோ குழந்தைகளோ, குடும்பமோ இல்லை. ஆகவே எனக்கு தேவைகளும் எதுவும் இல்லை. ஆனால் இந்த கக்கனை பாருங்கள். அவருக்கு குடும்பம் இருக்கிறது. மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர் நேர்மையோடு இருக்கிறாரே.. அதுதானே பெரிய விஷயம். அவரைத்தான் நாம் பாராட்ட வேண்டும். இனிமேல் என்னை பாராட்டி எழுதுவதைவிட கக்கனை பாராட்டி எழுதுங்கள்."காமராஜரின் இந்த பக்குவமான பேச்சைக் கேட்ட பத்திரிகையாளர்கள் பரவசமாகிப் போனார்கள்.
சந்தனத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். மிகவும் குளுமையானது. நம் உடலில் உள்ள வெப்பத்தை தணிக்க அல்லது வாசனைக்காக பூசிக் கொள்வது வழக்கம் இல்லையா?சுப காரியம் என்றாலும் சரி மரணம் என்றாலும் நாம் இதை பயன்படுத்துகிறோம்.இந்த மரங்கள் அதிகபட்சமாக 1௦ மீட்டர் உயரத்திற்கு வளரக்கூடியவை. இவ்வளவு நெடிய உயரத்திற்கு வளரக்கூடிய சந்தன மரங்கள் விஷபாம்புகளை அதிகம் கவருகின்றன. ஏனென்றால், சந்தன மரங்களை சுற்றியுள்ள சீதோஷ்ண நிலையை விட சந்தன குளிர்ச்சியாக இருக்கும். எனவே விஷப்பாம்புகளுக்கு பிடித்த இடமே சந்தனம மரங்கள் இருக்கும் இடம் தான். ஆனால்... எவ்வளவு விஷப்பாம்புகள் குடிகொன்டாலும், சூழந்திருந்தாலும் இந்த சந்தன மரங்கள் தன்னுடைய வாசத்தை அல்லது வீரியத்தை இழந்துவிடுகின்றதா? இல்லவே இல்லை.அது எப்போதும் போல குளிர்ச்சியாக, வாசனையாக எல்லோராலும் விரும்பப்படுவதாக இருக்கிறது. அதுபோலதான் நம்முடைய சுற்றுப்புறத்திலும், எவ்வளவோ எதிர்மறை ஆற்றல்கள் கொடுக்ககூடிய விஷயங்கள் இருந்தாலும், அதனால் எந்த பாதிப்பும் கொள்ளாமல், நம்முடைய சுயத்தை இழக்காமல் நம் கடமையை தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்து கொண்டே வரும்போது அந்த சந்தன மரத்தை போல வாழ்வில் உயரத்தை எட்டலாம் என்பது உறுதி. முயன்று தான் பாருங்களேன்……
தெருவோரத்தில் ஒரு வாழைப்பழ வியாபாரி பழம் விற்றுக்கொண்டிருந்தார். பலர் அவரிடம் வாழைப்பழங்களை வாங்கிக்கொண்டிருந்தனர்அப்பொழுது எங்கிருந்தோ ஒரு பசு திடீரென்று அந்த கடையை நோக்கி ஓடி வந்தது. அங்கிருந்த மக்கள் அனைவரும் சிதறி ஓடினர். அந்த பசு கடையின் அருகில் வந்து வாழை சீப்புகளை எடுத்து உட்கொள்ள ஆரம்பித்தது.அருகில் நின்றுகொண்டிருந்த அனைவரும் அந்த பசுவை கற்களாலும், கம்புகளாலும் தாக்கத் தொடங்கினர். அந்த பழக்கடையின் உரிமையாளர் பதறிப்போய் மக்கள் அனைவரையும் தடுத்தார். அடிக்காதிங்க அடிக்காதிங்க என்று கத்தினார்.என்ன ஐயா உங்க பழக்கடைல இருந்து பழங்களை சாபிடுது நீங்க என்னடானா அடிக்க வேண்டாம்னு சொல்லுறீங்க... என்று கேட்டார்கள்.அது பாவம் பா, வாயில்லா ஜீவன், நமக்கு ஆறறிவு இருக்கு அதனால நம்ம உழைச்சு சாப்பிடுறோம்.. நம்ம அளவுக்கு அதுக்கு அறிவு இல்லாதனால அது இப்படி இருக்கு.அந்த பசு என்ன பாவம் பண்ணுச்சு, எத்தனை நாள் தான் அதுவும் மேய புல்லு இல்லாம சுவரோட்டிகளையே தின்னுகிட்டு இருக்கும். விடுங்க அது போகட்டும் என்றார் அவர்.என்ன அய்யா இப்படி சொல்லுறீங்க... அந்த பசு இப்படி சாப்பிட்டா உங்களுக்கு நஷ்டம் வராதானு கேட்டேன். அதற்க்கு அவர் தந்த பதில் அனைவரையும் கலங்கடித்தது.அந்த பழ வியாபாரி சொன்னார் என்ன பெருசா நஷ்டம் வந்துற போகுது..?நீங்க பேரம் பேசி என்கிட்ட பழம் வாங்கி நஷ்டப்பட வைக்கிறீங்க.. அந்த நஷ்டத்த விடவா இந்த பசுமாடு எனக்கு நஷ்டம் ஏற்படுத்திட போகுது...?எங்க ஆத்தாக்கு ஆக்கி போட எனக்கு கொடுத்து வைக்கல.... எங்க ஆத்தாவுக்கு கொடுக்குறதா நெனச்சு இந்த பசுமாட்டுக்கு கொடுக்குறேன் என்றார்...
ராமாநுஜர் ஆற்றில் குளிக்கச் செல்லும்போது நடப்பதற்கு சிரமமாக இருந்ததால், பிராமண சீடர்களின் தோளில் கை போட்டுக் கொண்டு நடந்து செல்வார்.ஆனால், குளித்துவிட்டு கோயிலுக்குப் போகும் போது மறந்தும் அவர்கள் தோளில் கை போட்டுக்கொண்டு நடக்க மாட்டார்.தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த உறங்காவில்லியின் தோளில் கை போட்டபடியே மகிழ்ச்சியோடு நடந்துசெல்வார்.ராமாநுஜரின் இந்தச் செயல் அந்தணச் சீடர்களுக்குப் பிடிக்கவில்லை.ஒரு நாள் வேண்டுமென்றே ராமாநுஜர் குளித்து விட்டு வரும் சமயம் உறங்காவில்லியை வரவிடாமல் அவர்கள் தடுத்து விட்டனர்.பிராமண சீடர்கள் ஓடிப் போய் ராமாநுஜருக்குத் தோள் கொடுத்தனர்.ராமாநுஜர் தனது மேல் துண்டை, தண்ணீரில் நனைத்து ஈரமாக்கி சீடர்களின் தோள் மேல் போட்டு அதன் மீது கை வைத்து நடந்தார்.‘ஈரத்துணியை ஏன் எங்கள் மேல் போட்டீர்கள்? என்று அவர்கள் கேட்டதும், “ உங்களைத் தொட்ட தீட்டு வராமல் இருக்கத்தான். இப்படிச் செய்தேன்” என்றார்.“தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த உறங்காவில்லியைத் தொட்டால் தீட்டு இல்லை. உயர்ந்த ஜாதியில் பிறந்த எங்களைத் தொட்டால் தீட்டு வருமா?” என்று குமுறினர்.“உயர்ந்த ஜாதி என்கிற அகம்பாவம் உங்களுக்கு இருக்கிறது. உங்களைத் தொட்டால் அது எனக்கு வந்துவிடும்.உறங்காவில்லிக்கு அந்த அகங்காரம் இல்லை. அடக்கமும் பண்பும் அவனிடம் உள்ளது. அவனைத் தொட்டால் எனக்கு அந்த அடக்கம் வரும் அல்லவா? என்று முகத்திலடித்தாற் போல் கூறிவிட்டு நடந்து சென்றார்.இத்தனைத் துணிச்சலுடனான செயலை அவர் 1000 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறார் என்றால், அதனால்தான் அவர் எம்பெருமானார் என அழைக்கப்படுகிறார்.எல்லோருடைய அன்புக்கும் காரணமாக இருப்பதால் அவர் எம்பெருமனார்.
கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய ஆலயம் "திருச்சேறை"ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற்பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ரிண விமோஷன லிங்கேஸ்வரர் ". கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும். இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது சிறப்பு.இச்சந்நதியின் முன் நின்று கூறை உவந்தளித்த கோவேயென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே என மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்."பெருந் திரு இமவான் பெற்ற பெண் கொடி பிரிந்த பின்னைவருந்து வான் தவங்கள் செய்ய, மா மணம் புணர்ந்து, மன்னும்அருந் திருமேனி தன் பால் அங்கு ஒரு பாகம் ஆகத்திருந்திட வைத்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே."திருச்சேறையிலுள்ள செந்நெறி என்னும் கோயிலில் உறைகின்ற செல்வராம் சிவபெருமான் தம்மைத் தாட்சாயணி பிரிந்த பிறகு, மிக்க செல்வத்தை உடைய, இமவான் பெற்ற பெண்மகளாய்த் தோன்றி மிக்க வருத்தத்தைத் தரும் தவங்களைச் செய்ய, பெருமான் அவளை திருமணம் செய்து கொண்டு, தன் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்டார்.
அவள் எங்கே இருக்கிறாள்?மதுரையிலிருந்து சென்னை செல்ல விமானத்தில் அமர்ந்திருந்தேன். பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. விமானம் கிளம்பும் முன்பே துாங்கிவிட்டேன். சில நிமிடங்களில் துாக்கம் கலைந்தது.பக்கத்து இருக்கையில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அமர்ந்திருந்தாள்.''மனதில் பெரிய கேள்வியை வைத்துக்கொண்டு ஏன் இப்படி சம்பந்தமில்லாத ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறாய்?''திடுக்கிட்டு நிமிர்ந்தேன். பக்கத்து இருக்கைக்காரி பச்சைப்புடவைக்காரியாக மாறியிருந்தாள்.''உன் கண்களுக்கு மட்டும்தான் தெரிவேன். உன் மனதைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியைக் கேள்.''''தாயே மதுரையில் மீனாட்சியாகவும், காஞ்சியில் காமாட்சியாகவும், காசியில் விசாலாட்சியாகவும், நெல்லையில் காந்திமதியாகவும், திருக்கடையூரில் அபிராமியாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் விரும்பி உறையும் இடம் என்ன?''''முட்டாளே! நான் மதுரையிலும், காஞ்சியிலும், காசியிலும் இல்லை. மதுரை, காஞ்சி, காசி இவை எல்லாம் தான் என்னுள் இருக்கின்றன. நான் உலகத்தில் இல்லை. இந்த உலகம் தான் என்னுள் இருக்கிறது.''''தாயே தத்துவம் வேண்டாம். உங்களுக்குப் பிடித்த இடம்?''''வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவியடா நான்.''''மீண்டும் தத்துவமா? பிடித்த இடம் என்னவென்று சொல்வீர்களா அதைவிட்டு விட்டு..''''அங்கே நடக்கும் காட்சியைப் பார்''இடம் மும்பை. ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர் முன்னிலையில் ஒரு ஆறு வயதுச் சிறுமி அமர்ந்திருக்கிறாள். மறுநாள் அவளுக்கு ஒரு சிக்கலான இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அவளுடைய பெற்றோர் வெளியே காத்திருக்கிறார்கள்.''பயப்படறதுக்கு ஒண்ணுமே இல்லைம்மா. நீ எதுக்கும் கவலைப்படாத. நான் இருக்கேன். பாத்துக்கறேன்.''''ஐயையே! நான் பயப்படல டாக்டர். எனக்கு ஒரு விஷயம் தெரியணும்.''''சொல்லும்மா.''''நீங்க என் இதயத்த திறந்து பாப்பீங்க இல்லையா?''''ஆமாம்மா. இது ஓப்பன் ஹார்ட் சர்ஜரி. இதயத்தைத் திறந்து தான் செய்யணும்.. ஆனா உனக்கு வலிக்கவே வலிக்காது.'''அதைப் பத்தி எனக்குப் பயமில்லை டாக்டர். எங்கம்மா தினமும் சாமி கும்பிடுவாங்க. ஒரு நாள் சாமி எங்க இருக்காருன்னு கேட்டேன். உன் இதயத்துக்குள்ள இருக்காருன்னு சொன்னாங்க. நீங்க என் இதயத்தைத் திறந்தா சாமியப் பாப்பீங்கல்ல? சாமி எப்படி இருக்காருன்னு எனக்குச் சொல்றீங்களா?''திகைத்துப் போன அறுவை சிகிச்சை நிபுணர் சிறுமியை இறுக அணைத்துக்கொண்டார்.மறுநாள் அதிகாலை. அறுவை சிகிச்சை தொடங்கியது. அவர் நினைத்ததைவிட சிக்கல்கள் அதிகமாகவே இருந்தன. ஒரு கட்டத்தில் எல்லாம் கைமீறிப் போய்விட்டது. அறுவை சிகிச்சை தொடங்கி நாற்பத்தியைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். இதயத்திற்குச் சென்று கொண்டிருந்த ரத்தம் நின்றுவிட்டது. இனிமேல் அந்தச் சிறுமி பிழைக்கமாட்டாள் என்று தோன்றியது... அறுவை சிகிச்சை செய்த இடத்தைத் தைத்தபின் சிறுமியின் உடலை அவளுடைய பெற்றோரிடம் கொடுக்க வேண்டும். சே, என்ன வாழ்க்கை இது!அப்போதுதான் முதல் நாள் அந்தச் சிறுமி சொன்னது நினைவிற்கு வந்தது. தன் இதயத்திற்குள் கடவுள் இருக்கிறார் என்று நம்பினாளே அவள்!கழற்றத் தொடங்கிய முகமூடியை மீண்டும் அணிந்து கொண்டார். பலவீனமாகத் துடித்துக் கொண்டிருந்த அந்தச் சின்னஞ்சிறு இதயத்தைப் பார்த்துக் கைகூப்பினார்.''இறைவா நீ இந்த இதயத்தில் இருக்கிறாய் என்று இந்தக் குழந்தை நம்புகிறது. இந்த உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் நான் தோற்றுவிட்டேன். இனி இந்தக் குழந்தை உன் கையில். இவள் வாழ்வதும் சாவதும் உன் கையில். நான் கற்ற கல்வி, இத்தனை ஆண்டுகளில் பெற்ற திறமை அனைத்தையும் உன் திருவடியில் சமர்ப்பிக்கிறேன். இந்தக் குழந்தை இனி உன்னுடையவள்.'' அவர் கண்களில் நீர்.பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவருடைய உதவியாளர் அலறினார்.''டாக்டர் இதயம் நல்லாத் துடிக்க ஆரம்பிச்சிருச்சி. பாருங்க ரத்த அழுத்தம் கடகடன்னு ஏறுது.'' அறுவை சிகிச்சையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் நிபுணர். அதன்பின் நான்கரை மணி நேரம் சிகிச்சை தொடர்ந்தது. குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது. இப்போதெல்லாம் அந்த நிபுணர் கோயிலுக்குச் செல்வதில்லை. எப்போதெல்லாம் குருதியில் அமிழ்ந்திருக்கும் மனித இதயத்தைப் பார்க்கிறாரோ அப்போது எல்லாம் கைகூப்பி வேண்டிக்கொள்கிறார். ஒவ்வொரு முறையும் தன் கல்வி, திறமை அனைத்தையும் இறைவனின் திருவடி சமர்ப்பணம் செய்துவிட்டுப் பதட்டமில்லாமல் சிகிச்சை செய்கிறார்.'இன்னும் பத்து நிமிடங்களில் விமானம் சென்னையில் தரையிறங்கும்' என்ற அறிவிப்பு வந்தது.''இப்போது உனக்கே தெரியுமே, எனக்குப் பிடித்த இடம் எதுவென்று?''''ஆம் தாயே. உங்கள் அன்பில் நம்பிக்கை உள்ளவர்களின் இதயங்கள்தான் சிறந்த திருக்கோவில்கள்.'என் செயலாவது யாதும் இல்லை. எல்லாம் அவள் செயல்' என்று அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரியும் அந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் போன்றவர்களின் திருக்கரங்களில் நீங்கள் ஜொலிக்கிறீர்கள். யாராவது அடுத்தவர்களுக்காக உருகிக் கண்ணீர் சிந்தினால் அந்த உப்புத் திரவத்தில் இந்த உமா மகேஸ்வரி இருப்பாள்.''''இந்தப் பாடத்தை என்றும் மறவாதே!''விமானம் தரையைத் தொடும் சமயத்தில் பச்சைப்புடவைக்காரி மறைந்துவிட்டாள்.-வரலொட்டி ரெங்கசாமி
மேஷம்பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் நிமித்தமாக முதலீடுகளில் கவனத்துடன் செயல்படவும். காலம் தவறி உணவு உண்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் பழைய சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். பொறுமை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் ரிஷபம்பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்துச் செயல்படவும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பணிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். ஆக்கப்பூர்வமான நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மிதுனம்இணையம் தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சேமிப்பை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் நினைத்தது நிறைவேறும். ஆதரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு கடகம்மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சிந்தித்துச் செயல்படவும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் சிம்மம்வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். வெளியூர் பணி நிமித்தமான முயற்சிகள் கைகூடும். இறை சார்ந்த பயணங்கள் சாதகமாக அமையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பக்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் கன்னிஅக்கம், பக்கம் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். பணியில் மறைமுகமான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணம் மூலம் உடலில் சோர்வுகள் உண்டாகும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். பணிகளில் திறமைக்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் துலாம்நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். கலைத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். தவறிப் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். போட்டிகள் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு விருச்சிகம்திடீர் தன வரவுகள் உண்டாகும். நண்பர்களுடன் அனுசரித்துச் செல்லவும். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் உண்டாகும். நினைத்ததை செய்து முடிப்பதற்கான சூழல் அமையும். அரசுப் பணிகளில் ஆதாயம் ஏற்படும். வாழ்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை தனுசுமனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாசனை திரவியங்கள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். எழுத்து தொடர்பான துறைகளில் கற்பனை வளம் அதிகரிக்கும். இணைய பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உருவாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சை மகரம்உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். மனை தொடர்பான பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வும் அதற்கான உதவியும் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் குறையும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள். கும்பம்வெளிவட்டத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். கடன்களை அடைப்பதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவுகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். திட்டமிட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் மீனம்நண்பர்களிடத்தில் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவுகள் ஏற்படும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் வரவுகள் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் மதிப்புகள் மேம்படும். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும். மாற்றம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
குரோதி வருடம் தை மாதம் 23 ஆம் தேதி புதன்கிழமை 5.2.2025இன்று அதிகாலை 04.15 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி . இன்று அதிகாலை 12.52 வரை அஸ்வினி. பின்னர் இரவு 11.18 வரை பரணி. பிறகு கிருத்திகை. உத்திரம், அஸ்தம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
அகத்தியர் மந்திர வாள் என்றும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் சொன்ன அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்:(1) "நசி, மசி" என்றிட எமனையும்வெல்லலாம்.(2) "மசி, நசி" என்றிட மன்னனும்மாண்டிடுவான்.(3) "நங், நங்" நன்மைகள் உண்டாகும்.(4) "அங் அங்" என்றால் மண்டலத்தில் இடி விழாது.(5) "சிங், சிங்" என்றால் மிருகங்கள்ஓடும்.(6) "வங், வங்" என்றால் உலகமெல்லாம்வசியமாகும்.(7) "வசி, வசி" என்றால் பீடைகள்விலகும்.(8) "மசி, மசி" என்றால் சகலவிஷங்களும் இறங்கும்.(9) "அசி, அசி" என்றால்கேட்பவைஅமோகமாக பெருகும்.(10) "உசி, உசி" என்றால் கேட்பவையாவும் ஒழிந்து போகும்.(11) "மசி, நசி, நசி, மசி" என்றால் பேய்பிசாசுகள் ஓடும்.(12) "சிவ, சிவ" என்றால் தீவினைகள்அழியும்.இது போன்ற எத்தனையோ ரகசிய பொக்கிஷங்கள் சித்தர்களால் உலக மக்களின் நலன் கருதி அருளப்பட்டன.(1) மோகன மந்திரம்: "ஓம் ரீங் மோகய! மோகய!"(2) சத்ருக்கள் வசியம்: "ஓம் ரீங் வசி!வசி!"(3) நோய்கள் தீர: "ஓம் ரீங் நசி நசி"(4) துஷ்ட மிருகம் ஓட "ஓம் ரீங் அங்"(5) இகபர சித்தி: "ஓம் ரீங் சிவயவசி"(6) தம்பனம்: "ஓம் ரீங் ஸ்தம்பய!ஸ்தம்பய!"(7) அகர்ஷனம்: "ஓம் ரீங் ஆகர்ஸ்ய!ஆகர்ஸ்ய!"(8) உச்சாடனம் நோய்கள் தீர – "ஓம் ரீங்உச்சாடய! உச்சாடய!"(9) செளபாக்கியம் பெற: "ஓம் ரீங்சிவசிவ!"(10) தெய்வ அருள் பெற: "ஓம் சிவ சிவஓம்!"(12) சத்ரு சம்ஹாரா மந்திரம்: "ஓம் ரீங்மசி நசி நசி மசி"(13) நெற்றிகண் மந்திரம்: "ஓம் லம்சூஷ்மூநாயா நமக"சிவ மந்திரப் பலன்கள்----------------------------------------(01) "நங்சிவாயநம" - திருமணம் நிறைவேறும்.(02) "அங்சிவாயநம" - தேக நோய் நீங்கும், ஆயுள் வளரும், விருத்தியாகம்.(03) "வங்சிவாயநம" - யோக சித்திகள் பெறலாம்.(04) "ஓம்அங்சிவாய" - எதற்கும் நிவாரணம் கிட்டும்.(05) "கிலிநமசிவாய" - வசிய சக்திகள் வந்தடையும்(06) "ஹிரீநமசிவாய" - விரும்பியது நிறைவேறும்(07)"ஐயும்நமசிவாய" -புத்தி வித்தை மேம்படும்.(08) "நமசிவாய" - பேரருள், அமுதம் கிட்டும்.(09) "உங்யுநமசிவாய" - வியாதிகள் விலகும்(10) "கிலியுநமசிவாய" - நாடியது சித்திக்கும்.(11) "சிங்வங்நமசிவாய" - கடன்கள் தீரும்.(12) "நமசிவாயவங்" - பூமி கிடைக்கும்.(13) "சவ்வுஞ்சிவாய" - சந்தான பாக்யம் ஏற்படும்.(14) "சிங்றீங்" - வேதானந்த ஞானியாவார்(15) "உங்றீம்" - ரிஷிகள் ஆவார்.(16) "சிவாயநம" - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.(17) "அங்நங் சிவாய" - தேக வளம் ஏற்படும்(18) "அவ்வுஞ் சிவாயநம" - சிவ தரிசனம் காணலாம்(19)"ஓம் நமசிவாய" - காலனை வெல்லலாம்.(20) "லங்ஸ்ரீறியுங் நமசிவாய" - விளைச்சல் மேம்படும்.(21) "ஓம் நமசிவாய" - வாணிபங்கள் மேன்மையுறும்.(22) "ஓம் அங்உங்சிவாயநம" - வாழ்வு உயரும், வளம் பெருகும்.(23) "ஓம் ஸ்ரீறியும் சிவாயநம" - அரச போகங்கள் கிடைக்கும்.(24) "ஓம் நமசிவாய" - சிரரோகம் நீங்கும்.(25) "ஓங் அங்சிவாய நம" - அக்னி குளிர்ச்சியைத் தரும்.எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ ஜெபம் செய்ய ஆரம்பியுங்கள். உங்கள் பக்தி, சிரத்தைக்கு ஏற்ப பலன் கிடைக்கும்.மேற்கண்ட மந்திரங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப உருவேற்றி ஜெபிக்க வேண்டும். மந்திரம் நன்மை செயலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும். மந்திரம் நன்கு செயல்பட சைவ உணவு மற்றும் சில யோக பயிற்சிகள் முக்கியம்
ஐந்து வயது சிறுமி தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள். அங்கே ஒரு முத்துமாலையை பார்த்தாள். அது வேண்டுமென தன் தாயிடம் அடம்பிடித்தாள்.“இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை" என்றாள் தாய்.நான் உன்னோட பிறந்தநாளைக்கு அப்பாகிட்ட சொல்லி 'ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்' மாலை வாங்கி தரசொல்றேன்... இது வேண்டாம்மா" என்றாள் தாய்.ஆனால் அச் சிறுமி, அழுது பிடிவாதம் செய்து அந்த ப்ளாஸ்டிக் முத்துமாலையை வாங்கிக் கொண்டாள்...அந்த சிறுமிக்கு அந்த முத்துமாலை மிகவும் ஃபேவரெட் ஆன பொருளாகிப்போனது. அதை எங்கு சென்றாலும் அணிந்திருந்தாள் உடன் வைத்திருந்தாள்.பள்ளிக்கு செல்லும்போதும், நண்பர்களுடன் விளையாடும்போதும், ஏன் படுக்கும்போது கூட உடன் கழுத்தில் போட்டிருந்தாள்.பிளாஸ்டிக் மாலையை கழுத்திலேயே போட்டிருந்தாள் அலர்ஜியால் கழுத்து நிறம் மாறி விடும் என என்னென்னவோ தாய் சொல்லியும் கூட கேட்கவில்லை. எப்போதும் அதைப் பிரிய மனமில்லை அவளுக்கு. அச்சிறுமியின் அப்பா மிகவும் அன்பானவர். தினமும் அவர் குழந்தை படுக்கும் முன் கதை சொல்வார். ஒரு நாள் கதை சொல்லி முடித்ததும் கேட்டார், “மகளே.. என்னை உனக்கு பிடிக்குமா?””ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்.”“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?”“ஓ.. முடியாதுப்பா... நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. என்னோட பிங்கி பொம்மையை வேணா எடுத்துக்கோங்க.. ஆனா முத்துமாலை மட்டும் தர மட்டேன்ம்பா...” என்றாள்."பரவால்லை குட்டிம்மா..." என்று புன்னகையுடன் பதில் சொன்னார் தந்தை.இன்னொரு நாள் மீண்டும் கேட்டார், “மகளே... என்னை உனக்கு பிடிக்குமா?””ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்”“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?” மீண்டும் கேட்டார்.“ஓ.. முடியாதுப்பா... நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. வேணும்னா என்னோட குதிரை பொம்மையை எடுத்துக்கோங்க... முத்துமாலைய மட்டும் கேக்காதீங்கப்பா ப்ளீஸ்... அதமட்டும் நான் தர மட்டேன்.” என இம்முறையும் அழுத்தமாக மறுத்தாள் அச் சிறுமி.இப்போதும் அதே புன்னகையுடன் “பரவால்லை குட்டி..” என்றார் தந்தை.சில நாட்களுக்கு பிறகு ஒருநாள், தந்தை இரவு கதை சொல்ல வந்தபோது....சிறுமி ஒரு தயக்கத்துடன், “இந்தாங்கப்பா...” என சொல்லிக் கொண்டே ஒரு சிறிய பெட்டியை திறந்து அதிலிருந்த அவளின் விருப்பமான முத்துமாலையை எடுத்து தந்தையின் கைகளில் தந்தாள். அது பழசாகியும்... சில முத்துக்கள் உடைந்தும் போயிருந்தன.அதை ஒரு கையில் வாங்கிக் கொண்ட தந்தை, மறுகையால் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு நீல வெல்வெட் பெட்டியை எடுத்தார். அதில் உண்மையான முத்துக்களால் ஆனா ஒரு அழகிய முத்துமாலை இருந்தது.💥அவர் அதை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். குழந்தை தன் மலிவான மாலையை தருவதற்காக காத்திருந்தார் அவர்... அதை தந்தவுடன் அந்த உண்மையான மாலை கொடுத்தார்.💚"இதை உனக்கு தருவதற்காகத்தான்டா குட்டி... நான் தினமும் அந்த ப்ளாஸ்டிக் மாலையை கேட்டேன்..." என்றார் தந்தை.இந்த தகப்பன் யாருமல்ல... நம் எல்லோரையும் படைத்த இறைவன்...அந்த குழந்தைதான் நாம். ஆம். இதுபோலத்தான் நாமும் நம் வாழ்க்கையில் சில மலிவான விஷயங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு கைவிடுவதற்கு தயாராக இல்லை.அத்தகைய போலியான விசயங்களை கைவிட்டால் இறைவன் உண்மையான, நிரந்தரமான நிம்மதியை நமக்கு பரிசளிப்பான்.நமது மோசமான பழக்கங்கள், செயல்கள், தீய நட்புகள்,உறவுகள்... போன்ற எது வேண்டுமானாலும் நம்முடன் மிகவும் பின்னிப் பிணைந்திருக்கலாம்.. அவைகளால் நமக்கு பாதிப்பு என தெரிந்தும் கூட கைவிட கடினமானவைகளாக இருக்கலாம்...ஆனால் அவைகளை எல்லாம்விட சிறந்தவைகள் நமக்காக காத்திருக்கின்றன. அத்தகைய சிறப்பான ஒன்றை பெறவேண்டுமானால்... போலியான மலிவான விசயங்களை நாம் கைவிட வேண்டும்.அன்பே வடிவான இறைவன் சிறந்த ஒன்றை தராமல் நம்மிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்வதில்லை..........
"பிழைக்கத் தெரியாத முட்டாள்" என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார்.தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள்.அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருப்பார்கள்.அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமனிதன் தான் “சாய்க்கிரோ ஹோண்டா”.தனது வாழ்க்கை அனுபவத்தை சாறு பிழிந்து எடுப்பது போன்று “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று அந்த இளைஞன் சொன்னார்.Toyoto நிறுவனத்திற்கு piston (உந்துருளி) தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு.யாருக்காகவும் அவன் காத்திருக்கவில்லை. அப்பாவின் திட்டு , சக மாணவர்களின் கேலிகளுக்கு இடையே, மாதிரி உலோகம் உருக்கும் கூடம் ஒன்றை 1928ஆம் ஆண்டு உருவாக்கினார்.இதற்காக இரவு பகலாக உழைத்தார். ஓராண்டு காலமாக கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி piston ஐ பெரும் எதிர்பார்ப்புடன் Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது piston இல்லை என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியியளாளர்கள்.முதலாவது கனவுத் திட்டம் படுதோல்வி அடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டி வைத்த முதலீடு மொத்தமும் வீணாகியது. எல்லோரும் தங்களது கேலிகளை பொழிந்தார்கள்.புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார்.மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய piston மாதிரியை Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.அருமை என்று பாராட்டிToyoto நிறுவனம் ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது.மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு கொண்ட சாய்க்கிரோ ஹோண்டா பெரிய தொழிற்கூடம் கட்டினால் தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையிலான piston தயாரிக்க முடியும்.எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா.அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சிமெண்ட் தட்டுப்பாடு.எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சிமெண்ட் கூட கிடைக்கவில்லை.ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு என அவரது அப்பா கூறினார், வாழ்க்கை முழுவதும் ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாயா என்றார் உயிர் நண்பன்.இவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது சிமெண்ட் கலவைக்கு இணையான மாற்றுக்கலவையை உருவாக்கும் முறையை கண்டுபிடித்தார் ஹோண்டா.ஆங்காங்கு கடன் வாங்கி சில மாதங்களிலேயே பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார்.தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி piston தயாரிக்கும் தொழிலை அமர்க்களமாகத் தொடங்கினார். கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது.அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்து நாசமாக்கியது.ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால், தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி சேதங்களை சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா.ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கி விட்டது.மொத்தத் தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத நிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மற்றும் மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு Toyoto நிறுவனத்திற்கு விற்பனை செய்தார் ஹோண்டா.இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப்பாருங்கள்.........ஆனால், அப்போதைய நிலையில் ஹோண்டா கூறிய கருத்து.......“நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளி கூட கவலைப்பட மாட்டேன்… இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிவிடுவேன்.”இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம் ஜப்பானின் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலக்கட்டம், ஜப்பான் முழுதும் பெட்ரோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன.எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிளில் செல்கின்றார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார்.அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது.*அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம் புது ஐடியா தோண்றியது.அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.அதை எடுத்துக்கொண்டு ஆனந்தமாக சுற்றி வந்தார் ஹோண்டா. அதேபோன்று எங்களுக்கும் செய்துகொடு என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள்.அவரும் சளைக்காமல் செய்து கொடுத்தார். அதன் விளைவு என்ன ஆயிற்று????அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா.கையில் பணமில்லை, வங்கிகள் கடன் தரத் தயாராகவில்லை. ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன் என்று எல்லோரும் கூறினார்கள்.அப்போதும் கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார்.முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார்.*5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள் முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உதயமானது.*முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலோகம் உருக்கும் கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் வகைகளை கொண்டு வந்தார்.அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா.இப்போது ஹோண்டா நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் வாகனங்களை தயாரிக்கிறது.முயற்சியை மூலதனமாக கொண்டு, தன்னம்பிக்கையை மனதில் வைத்து வைராக்கியத்துடன் உழைக்கும் எவர்க்கும் வெற்றி கைகூடாமல் போனதில்லை.
ஆண்டிகள் கூடிமடம் கட்டிய கதை என்று கிண்டலாக கூறுவார்கள்,ஆனால். உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது.. அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்.பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக் கலை அதிசயம் !.கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும். அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள்.ஆனால், திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது. எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது !.திருச்செந்தூர் விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால், இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்து கொள்ளலாம்.இவ்வளவு ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது நமது முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவும் திறமையும், கடவுள் மேல் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் மூழ்கடித்து விடுகிறது.திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் திருப்பணி செய்து ஆலயத்தை கட்டியவர்வகளும் புனரமைப்பு பணிகள் செய்த ஆண்டிகளை நீங்கள் அறிவீர்களா..!!1. மௌனசுவாமி2. காசிசுவாமி3. ஆறுமுகசுவாமி. (இவர் ராஜகோபுரம் கட்டியவர்)4. ஸ்ரீவள்ளிநாயகசுவாமி5. தேசியமூர்த்திசுவாமிஎனும் இந்த ஐந்து ஆண்டிகள்தான்!!தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களாளும் பெரும் பணக்காரர்களும் கட்டப்பட்டிருக்கும் நிலையில்.. ஆண்டிகலாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும். இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் அருகிலேயே அமைந்துள்ளது. இவை அனைத்தையும் ஒரே நாளில் தரிசிக்கலாம்...தரிசனம் செய்ய செல்லும் வழி...முதல் மூவர்களான காசி சுவாமி, மௌன சுவாமி, ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் அமைந்திருக்கும் நாழிக் கிணற்றின் தெற்கே மூவர் சமாதி என்ற பெயருடனே அமைந்துள்ளது. நல்ல அமைதியான இடம்.நான்காவதாக, ஞான ஸ்ரீவள்ளிநாயகசுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவிலின் ராஜ கோபுரத்தின் வடக்கு வெளிப்பிரகாரத்திலுருந்து சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது.ஐந்தாவதாக, ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி சாலையில்... ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து ஆற்றைக்கடந்து நடந்தோ.. அல்லது ஆட்டோவிலோ ஆழ்வார்தோப்பு என்னும் ஊருக்கு செல்லவேண்டும். அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புறம் நடந்து சென்றால் அருகிலேயே இருக்கும்.முதல் மூன்று சமாதியை அதிக முறை கோவிலுக்கு சென்றவர்கள் பாத்திருக்கலாம். மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும். நான்காவது பலருக்கும் தெரியாது . தெரிந்த சிலர் மட்டுமே அதுவும் உள்ளூர்வாசிகளே போவர். ஐந்தாவது ஜீவசமாதி இருக்கும் இடம் பலருக்கும் தெரியாது. கோவில் வரலாறு தெரிந்த சிலருக்கு தான் தெரியும். ஆனாலும் யாரும் செல்வதில்லை.அடியாருக்கு அடியார் கந்தக் கடவுள் கோவில் திருப்பணியை செய்தவர்களை தரிசிக்கும் பாக்கியம் எல்லோருக்கும் அமைவதில்லை. இவர்களை தரிசனம் செய்பவர்கள் முருகனின் முழு அருளை முழுமையாக பெற முடியும்,
ஆன்மீகம் என்றால் நெற்றியில் விபூதி அணிந்து, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல.மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, "எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல்!" என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை. நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை. இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி.இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம் ஆகும். "கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார்!"என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
கங்கைக் கரையில் செருப்பு தைக்கும் செய்யும் ஒரு நல்ல கிழவன். தினமும் கங்காமாதாவை தூர இருந்து கண்ணால் பார்த்து வணங்குவதோடு சரி. தண்ணீரை தொட்டால் கொன்று விடுவார்களே. தீட்டு பட்டுவிடுமாம். சர்வ பாபங்களையும் போக்கும் கங்கை அந்த தாழ்ந்த வகுப்பு மனிதன் தீண்டினால் புனிதம் கெடுமாம். அந்த காலத்தில் இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் .ஒரு பண்டிதர் தினமும் மந்திரங்கள் ஜபித்துக் கொண்டே வருவார். கங்கையில் இறங்கி நீராடுவர். அனுஷ்டானங்கள் முடிந்து வெளியே வருவார். ''எவ்வளவு பாக்கியசாலி அவர்'' என்று அவரை தூர இருந்தே இரு கரம் கூப்பி செருப்பு தைக்கும் கிழவன் வேண்டுவான்.அவனைப் பார்த்தாலே தூர நகர்வார் அவர். அவனோடு பேசுவார். ஒருநாள் அவரது செருப்பு அறுந்து விட்டது. அதை கிழவனிடம் கொடுத்து சரிசெய்யச் சொன்னார். நன்றாக சரிசெய்து கொடுத்தான்.அவனருகே ஒரு அணா காசு விட்டெறிந்தார். அருகே வந்து தரமுடியாதே. அவன் வணங்கி ''சுவாமி நான் உங்களிடம் காசு வாங்க மாட்டேன். நீங்கள் கங்கா மாதாவை அனுதினமும் வணங்கி மந்திரங்கள் ஜெபிப்பவர். உங்களுக்கு ஏதோ என்னாலான ஒரு சிறிய உதவி செய்தது என் பாக்யம்''.உன் காசு எனக்கு வேண்டாம். இதை என்ன செய்வது? நீ எனக்கு இலவசமாக சேவை செய்தால் அதை நான் ஏற்க முடியாது என்கிறார் அந்த பண்டிதர்.ஐயா இந்த ஏழைக்கு ஒரு உதவி நீங்கள் செய்வீர்களா? இதோ இந்த கங்காமாதாவை அனுதினமும் வணங்குகிறேன் என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. நான் அளித்த காணிக்கையாக நீங்களே அதை அவளுக்கு சமர்ப்பிக்க முடியுமா.?என்ன சொல்கிறாய். இந்த ஓரணாவை கங்கையில் நீ அளித்ததாக நான் எறிய வேண்டும் அவ்வளவு தானே? சரிபண்டிதர் கங்கையில் இறங்கினார் வணங்கினார். மந்திரங்கள் ஜெபித்தார். அம்மா கங்கா தேவி, இதோ இந்த ஓரணா கரையில் இருக்கும் செருப்பு தைக்கும் கிழவன் உன்னிடம் சமர்ப்பிக்க சொன்னது. ஏற்றுக்கொள் என்று சொல்லி வீசி எறிந்தார்.நுங்கும் நுரையுமாக ப்ரவாஹமாக ஓடிக்கொண்டிருந்த கங்கையிலிருந்து ஒரு அழகிய கை வெளியே தோன்றி அவர் வீசிய ஓரணா காசை ஆர்வமாக அன்பாக பெற்றுக் கொண்டது. கங்கையின் முகம் தோன்றியது பேசியது.பண்டிதரே, எனக்கு மிக்க மகிழ்ச்சி, இதோ இந்த பரிசை நான் கொடுத்ததாக அந்த கிழவரிடம் கொடுங்கள் என்று கங்கா தேவி ஒரு அழகிய கண்ணைப் பறிக்கும் வைர, நவரத்னக் கற்கள் பதித்து ஒளிவீசிய தங்க வளையலை, கொடுத்தாள். பண்டிதன் அசந்து போனான். ஆச்சர்யத்தில் நடுங்கினான்.அதை தனது மேல் துண்டில் பத்திரமாக முடிந்து வைத்து கொண்டான். கிழவினிடம் ஒன்றுமே அது பற்றி சொல்லவில்லை. வீட்டிற்கு போய் மனைவிடம் '' கமலா, இதோ பார்த்தாயா, நான் எதற்குமே பிரயோஜனம் இல்லை, ஏட்டுச் சுரைக்காய் என்பாயே'' இன்று என்ன நடந்தது தெரியுமா உனக்கு?''என்ன பெரிதாக சாதித்து விட்டீர்கள்? உங்களை போல் உதவாக்கரைகளுடன் பேசிவிட்டு தேங்காய் மூடி வாங்கி கொண்டு வந்திருப்பீர்கள். சீக்கிரம் கொடுங்கள். இன்றைய பொழுது துவையலிலாவது கழியட்டும். '' என்றாள் மனைவி.''அசடே, இதைப் பார். என் வேதத்தை மதித்து கவுரவித்து அதால் பெற்றது. உனக்காக நான் சம்பாதித்தது'' என்று கங்காதேவி தந்த வளையலை தந்தான் பண்டிதன். கமலாவுக்கு தன்னையோ, தன் கண்களையோ நம்ப முடியவில்லை. கையில் போட்டு அழகு பார்த்தாள். மின்னியது. கண் கூசியது. என்ன ஒருவளையல் தானா? இன்னொன்று?''''அடுத்த முறை கங்கையை கேட்டு வாங்கி தருகிறேன்'' என்று சமாளித்தான் பண்டிதன். இந்த ஒன்று எதற்கும் உதவாதே . நாமோ ஏழைகள். திருடர்கள் கொள்ளையர்களால் இதனால் உயிர் போனாலும் போகலாம். எனவே அவன் மனைவி கெட்டிக்காரி என்ன சொன்னாள்?''இதோ பாருங்கோ, இந்த ஒண்ணை வச்சுண்டு என்ன பிரயோஜனம். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அழகான ஒத்தை வளை கையில் போட்டுக் கொண்டு அலைந்தால் எல்லாரும் சிரிப்பார்கள். பேசாமல் இதை ராஜாவிடம் கொடுத்துவிட்டு ஏதாவது காசு கொடுத்தால் வாங்கி வாருங்கள். கொஞ்சகாலம் நிம்மதியாக சௌகர்யமாக வாழலாம்.ராஜாவிடம் சென்றான். கொடுத்தான். ராஜா வாங்கி பார்த்து மகிழ்ந்தான். ஒரு பை நிறைய பொற்காசுகள் கொடுத்தான். ராணியிடம் ஆசையோடு அந்த வளையலை கொடுத்தான். மிக்க மகிழ்ச்சி அந்த ராணிக்கு. அவள் கைக்கு அது பொருத்தமாக அமைந்தது. அப்போது தான் அவளுக்கு தோன்றியது. ''இன்னொன்று எங்கே?''ராஜாவிடம் ''இன்னொன்றும் வேண்டுமே எங்கே'' என்று கேட்டாள் . ராஜா ஆட்களை அனுப்பி பண்டிதனை அழைத்து வர செய்தான்.''ஹே ப்ராமணா. இன்னொரு வளையல் எங்கே? ஏன் அதை தரவில்லை? வீட்டில் வைத்திருந்தால் கொண்டு வந்து உடனே கொடு. ராணி கேட்கிறாள்''பிராமணன் தயங்குவதை பார்த்த ராஜாவுக்கு கோபம் வந்தது. ''என்ன விளையாடுகிறாயா என்னிடம். இன்னும் ரெண்டு மணிநேரத்தில் இன்னொரு வளையலுடன் நீ வரவில்லை என்றால் உன் உயிர் உனதல்ல .ஜாக்கிரதை'' என்றான். ராஜாவின் கட்டளை பண்டிதனுக்கு எம பயத்தை தந்ததால் ஓடினான். எங்கே? கங்கைக்கரைக்கு.அந்த கிழவன் வழக்கம்போல் அதிகாலையில் கங்கைக் கரைக்கு தூர நின்று இரு கரம் கூப்பி கண்களை மூடி கங்கையை வணங்கினான். அருகிலே தேங்கி நின்ற நீரில் கொஞ்சம் எடுத்து தலையில் ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டான். அது தான் அவனுக்கு கங்காஜலம். செருப்பு தைக்க தேவையான ஜலத்தை ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு அமர்ந்தான்.திடீரென்று தன முன்னே பண்டிதன் ஓடிவந்து நின்றதும் வணங்குவதும் அவனுக்கு ஏதோ ஒரு அதிர்ச்சியை தந்தது.''சாமி நீங்க என்ன செய்றீங்க?"' என்ன ஆச்சு உங்களுக்கு? நான் தானே உங்களை எப்போவும் வணங்கறது?''''என்னை மன்னிச்சுடுப்பா. நான் துரோகி. கங்கா மாதா உனக்கு கொடுத்த பரிசை திருடி வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போனவன் அதை வித்து ராஜாகிட்ட நிறைய பணம் வாங்கினேன். இப்போ என் உயிரே காற்றிலே ஊசல் ஆடுது என்று விஷயத்தை சொன்னான் பண்டிதன்.''ஆஹா அப்படியா. நமக்கு யார் உதவி செய்வாங்க இப்போ ? எப்படி இன்னொரு வளையல் கிடைக்கும்? கங்காமாதாவையே கேட்போம்.கிழவன் கண்ணை மூடினான். தனக்கு எதிரே இருந்த அழுக்கு பாத்திரத்தில் நிரம்பிய நீரை வேண்டினான். அம்மா கங்கா நீ எனக்கு பரிசாக ஒரு வளை கொடுத்ததற்கு நான் எத்தனையோ ஜென்மம் கடமைப் பட்டிருக்கிறேன் தாயே. பாவம் இந்த பண்டிதரின் உயிரைக் காப்பாத்து தாயே. இன்னொரு வளையலும் தா. அவர் பிழைக்கட்டும்'' என்று தனது கையை அந்த ஜலத்தில் விட்டான்.மீண்டும் பிரகாசமான தங்க வைர கற்கள் பதித்த இன்னொரு வளையல் அந்த கிழவனின் அழுக்கு பாத்திரத்திலிருந்து தோன்றியது.அப்புறம் என்ன நடந்ததா??பண்டிதன் ராஜாவிடம் அதை எடுத்து போகவில்லை. தனது உயிரைப் பற்றி கவலைப் படவில்லை. வீடு, கமலா எல்லாவற்றையும் மறந்தானா , துறந்தானா எதுவோ ஒன்று. அங்கேயே கிழவனின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு கண்ணீரால் அவற்றை நனைத்து அபிஷேகம் செய்தான். சீடனாக அருகில் அமர்ந்தான். விஷயம் பரவியது. ராஜாவும் அவன் மனைவியும் ஓடி வந்தார்கள். கிழவனை வணங்கினார்கள். அரண்மனைக்கு கூப்பிட்டார்கள்.என் கங்காமாதா தரிசனம் ஒன்றே போதும் என்று அவர்களை திரும்பி வணங்கினான் செருப்பு தைக்கும் கிழவன்.உண்மையான பக்தி என்பது ஆத்மார்த்தத்தில் நம் உள்ளே இருப்பது.வெளியே காட்டிக்கொள்ளும் சடங்குகளிலோ.. சம்பிரதாயங்களிலோ.. அறிவிலோ.. பணத்திலோ.. அளவிலோ.. ஆடம்பரத்திலோ.. ஒருபோதும் இல்லை..கட...உள்..= "கடந்து" போ "உள்ளே" என்பதுதான் கடவுள்.. அதை. நமக்குள் வெடிக்க வைப்பதுவே கோயில்களும்.. சம்பிரதாயங்களும்..நிலக்கடலையில் தோலை தின்றுவிட்டு.. கடலையை தூக்கி எரிகிற மனிதர்களுக்கு என்றைக்கும் கதி மோட்சம் இல்லை!
இது சுந்தர் பிச்சை அவர்கள் கூறிய யோசனை.தன் வாழ்வில் நிகழ்ந்ததை பற்றி இக்கேள்விக்கு விடையளித்துள்ளார்.நான் ஒருமுறை விடுமுறை நாளில் ஒரு குளம்பியகம் (Cofee shop) சென்றிருந்தேன்.காபி குடித்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராமல் எங்கோ இருந்து திடீரென பறந்து வந்த கரப்பான்பூச்சி அங்கிருந்த ஒருவர் மீது அமர்ந்தது.அவர் அதை தட்டி விட்டார்.பின்னர் அது ஒருவர் மீது ஒருவராக சென்று அமர ஒவ்வொருவரும் தட்டி விட்டனர்.அப்போது அந்த அறையிலிருந்த ஒரு பெண் மீது அமர அவர் பதட்டத்தில் கத்தி விட்டார்.இதனால் அந்த அறையே சிறிது நேரம் சலசலப்புடன் காணப்பட்டது.அவர் பதட்டத்தால் உடல் நடுங்க அந்த உயிரினம் பறந்து சென்று அந்த கடையின் பணியாளர் ஒருவர் மீது அமர்ந்தது.அவர் பதட்டப்படவில்லை.நிதானித்தார்.உயிரினத்தின் நடமாட்டத்தை கண்காணித்தார்.அது ஓரிடத்தில் நின்ற போது அதை பிடித்து சாளரம் (ஜன்னல்) வழியே வெளியில் வீசி எறிந்தார்.அப்போது என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது.அந்த பெண்களின் இந்த செய்கைக்கு அந்த உயிரினம் தான் காரணம் என்றால் ஏன் அப்பணியாளர் பதட்டமடையவில்லை?அப்போதுதான் எனக்குள் ஒன்று புரிந்தது.நமக்கு பிரச்சினைகள் வரும்போது அதைக் கண்டு பயப்பட கூடாது.பதட்டமடையாமல் அடுத்து என்ன செய்யலாம்? என யோசித்தால் வழி கிடைக்கும்.சிக்கலான சூழ்நிலையில் பதட்டப்படாமல் நிதானமாக சிந்தித்தால் அதிலிருந்து விடுபட வழிகள் பிறக்கும்.எனவே எந்த சூழலிலும் பதட்டப்படக் கூடாது.
மேஷம்வியாபாரப் பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்க்கவும். கால்நடை செயல்களில் சற்று கவனம் வேண்டும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சிந்தனைப் போக்கில் மாற்றமான சூழல் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மெரூன் ரிஷபம்கணவன், மனைவிக்கிடையே வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்கள் நன்மையை தரும். சில நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பனிப்போர்கள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும். ஆதாயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மிதுனம்ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். செல்வச் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் கைகூடும். இணையம் துறைகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் கடகம்தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். விளையாட்டுப் போட்டிகளில் விவேகம் வேண்டும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். தகவல் தொடர்பு துறைகளில் புதுவிதமான சூழல் ஏற்படும். வியாபார இடமாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். பயணம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : ஊதா சிம்மம்கணவன், மனைவிக்கு இடையே இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த உதவிகள் சாதகமாகும். புதியவர்களின் நட்பின் மூலம் உற்சாகம் ஏற்படும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். மனதளவில் தெளிவும், புத்துணர்ச்சியும் ஏற்படும். பணி சார்ந்த பழைய பிரச்சனைகள் குறையும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை கன்னிவியாபார பணிகளில் பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்துகொள்ளவும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். அரசு பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். பயண செயல்களில் சில மாற்றம் ஏற்படும். மனதிலிருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் சிந்தித்துச் செயல்படவும். தாமதம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : நீலம் துலாம்காணாமல் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பிறமொழி மக்களின் அறிமுகம் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை உணருவீர்கள். போட்டி தொடர்பான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். நெருக்கமானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். முயற்சி ஈடேறும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : ஊதா விருச்சிகம்விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் புதுமையான சூழல் ஏற்படும். வாகனத்தில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். வீடு மாற்றுவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படலாம். சக ஊழியர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை தனுசுமனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். மனதில் புதுமையான சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஆன்மிகம் தொடர்பான புரிதல்கள் மேம்படும். நுண் கலை சார்ந்த தேடல்கள் உண்டாகும். எதிர்பாராத வரவுகள் கிடைக்க பெறுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மகரம்தாய் வழி உறவுகள் இடத்தில் மதிப்புகள் உண்டாகும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலகலப்பான பேச்சுகளால் நட்பு வட்டம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். வாகன மாற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். கனிவு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை கும்பம்கடினமான விஷயங்களை சாதாரணமாக முடிப்பீர்கள். குழந்தைகளால் மதிப்புகள் மேம்படும். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வுகள் உண்டாகும். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நிலுவையில் இருந்துவந்த பழைய சரக்குகள் விற்பனை ஆகும். திட்டமிட்ட காரியம் கைகூடி வரும். கருத்துக்களுக்கு ஆதரவுகள் மேம்படும். நிம்மதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பச்சை மீனம்கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவீர்கள். சுபகாரிய செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகத்தில் மறைமுகமான தடைகள் தோன்றி மறையும். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
குரோதி வருடம் தை மாதம் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 4.2.2025சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.இன்று காலை 07.54 வரை சஷ்டி. பின்னர் சப்தமி . இன்று அதிகாலை 02.30 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
புதிய வரி திருத்திற்கமைய, முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டியேற்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலோன் மோட்டர் டிரேடர்ஸ் ஒழுங்கமைப்பின் தலைவர் என்ரூ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி 3 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உந்துருளி ஒன்று இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதுடன் விதிக்கப்பட்ட வரி காரணமாக 7 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கும் என குறிப்பிட்டார். அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட முச்சக்கர வண்டி ஆறரை இலட்சம் ரூபாவால் அதிகரிக்கக் கூடும். அதேநேரம், இரண்டு அல்லது 3 மில்லியன் ரூபாய்களுக்கு இருந்த வாகனங்கள், 7 மில்லியன் ரூபாய் வரைக்கும் அதிகரித்துள்ளது. இறக்குமதி தடை நீக்கப்பட்டதன் பின்னர் பல்வேறு வகையான வரிகள் அமுலாக்கப்படுகின்றன. இதன் காரணமாக வாகனங்களின் விலைகள் 160 முதல் 260 சதவீதம் வரையில் அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் தற்போதைய நிலையில் வாகனங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாகப் பொதுமக்கள் தங்களது நிதிநிலைமைகளைக் கருத்திற் கொண்டே தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்000