(01) வாங்கிய கடனையோ பொருளையோ திருப்பி செலுத்த இயலாமல் இருந்தாலும், உரியவருக்கு பொறுப்பாக பதில் சொல்லுங்கள், அது கூடுதல் முரண்பாட்டைக் குறைக்கும்.
(02) யாராவது ஒருவர் உங்களுக்கு உணவருந்த அழைத்தால் விலையுர்ந்த உணவை தெரிவு செய்யாதீர்கள், தெரிவை அவர்களிடமே விட்டுவிடுங்கள்....
(03) ஒரு முறை உங்கள் நண்பன் உங்களுக்காக பணம் செலுத்தினால் அடுத்த முறை அவர்களுக்காக நீங்கள் செலவிட தயாராக இருங்கள்.
(04) ஒரு நிகழ்விலோ அல்லது வரிசையிலோ உங்கள் பின்னால் வருபவர்களுக்கு எப்போதும் கதவைத் திறந்துவிடுங்கள். அது ஒரு பையனா அல்லது பெண்ணா, மூத்தவரா அல்லது இளையவரா என்பது முக்கியமில்லை. பொது இடத்தில் ஒருவரை நன்றாக நடத்துவதன் மூலம் நீங்கள் நல்ல மரியாதை தெரிந்தவராக தெரிவீர்கள்.
(05) எப்போது குழந்தை, எப்போது திருமணம், எப்போது புதுவீடு கட்டப்போகிறீர்கள் என உங்களுக்கு பயனே இல்லாத கேள்விகளை இன்னொருவரிடம் அநாகரீகமாக கேட்காதீர்கள்.
(06) அறிவு, நிறம், வசதி, எடை, உடல் குறைபாடு இவற்றையெல்லாம் கொண்டு நீங்கள் சொல்வது நகைச்சுவை அல்ல அது மற்றவரை உங்கள் முன் தாழ்த்திப்பேசுவது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(07) சிறியதேனும் எப்போதும் நன்றி சொல்வதற்கு மறந்துவிடாதீர்கள்.
(08) பொதுவில் வாழ்த்தப் பழகுங்கள், தனியாக குறைகளை சுட்டிக்காட்டுங்கள்.
(09) இந்த புகைப்படத்தைப் பார் என ஒருவர் உங்களிடம் அவருடைய தொலைபேசியை தந்தால் அந்த புகைப்படத்தை மட்டுமே பாருங்கள் அடுத்த புகைப் படத்தை நகர்த்தாதீர்கள்.
(10) எனக்கு இன்று மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என உங்களிடம் யாராவது சொன்னால் “ஏன், எதற்கு என அவர்களின் நோய்கள் குறித்து அலசி ஆராயாதீர்கள்? கேட்காதீர்கள்! மாற்றாக எல்லாம் சரியாகும், கவனமாக சென்று வாருங்கள் எனக் கூறுங்கள்.
(11) வேலை செய்யுமிடத்தில் முகாமையளரோ உயர்பதவியோ சீனியரோ யூனியரோ சக ஊழியரோ அல்லது துப்பரவு செய்பவரோ அனைவருக்கும் சமனான மரியாதையை கொடுங்கள், அதுதான் உங்களுக்கும் திரும்பி வரும்....
(12) உங்களிடம் ஒருவர் நேராக பேசும் பொழுது கையடக்கத்தொலைபேசியை பார்த்து பதில் சொல்லாதீர்கள்...
எதைப் பின்பற்றுகிறீர்களோ அதுவே உங்கள் முன் பிரதிபலிக்கும். (கண்ணாடியைப் போன்று)
- 96