எந்தச்சோதனைகளிலிருந்தும்
ஒரு தீர்வைப்பெறமுடியும்.
சோதனைகளுக்கான
காரணங்களைத் தேடாமல்
சோதனைகளின் உள்ளிருக்கும் உண்மைத்தன்மையை
உணர்ந்திட உறுதி கொள்ளுங்கள் .
நடந்ததும் , நடப்பதும் நன்மைக்கே.
எந்த நட்டத்திலும்
ஒரு லாபமிருக்கும்
சோதனை நேரங்களில்
ஏன் இப்படி என்று நமக்கு? என்று
தடுமாறுவது இயல்புதான்.
அதனைப்பெரிதாகக் கொள்ளாதீர்கள்.
நிதானத்தோடு
மனதில் சூழும் கவலைகளை, எதிர்மறை சிந்தனைகளை எடுத்தெறிந்து வீசிவிட்டு
நேர்மறை சிந்தனைகளோடு நிமிர்ந்து நில்லுங்கள்.
என்றென்றும்
உங்களுக்குத்/நமக்குத்
துணை நல்லறமும் நல்லெண்ணமும்.
- 113