Feed Item
Added article 

அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ’வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

சற்று முன்னர் யூடியூப் இணையதளத்தில் இந்த பாடல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடல் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பதும் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே அனைவரையும் கவர்ந்து விட்டது.

அம்மா சென்டிமென்ட் பாடல் இதுவரை தமிழ் திரையுலகில் தோல்வி அடைந்ததாக வரலாறு இல்லை என்ற அளவில் இந்த பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும்.

வீடியோ இதோ.....

https://youtu.be/auBq_Z6zWSE

  • 364