Ads
Updated Albums
$25.00 CAD STONE WORKED FRONT_SLIT KURTIS
$25.00 CAD STONE WORKED FRONT_SLIT KURTIS SIZE CHART〰〰〰〰M - H44"/B36"L - H44"/B38"XL- H44"/B40"XXL-H44"/B42"
$25.00 CAD STONE WORKED FRONT_SLIT KURTIS
STONE WORKED FRONT_SLIT KURTISPRINAL BRANDFabric: RAYONAVAILABLE SIZESM_L_XL_XXL
$25.00 CAD பூந்தமிழ் புடவைகள்
Poonthamil Silk SareesA type of Banaras art silk,Grand border on double side,Chit Pallu,Complete 3d embossed, Running blouse.
$35.00CAD Kanchi soft silk sarees
Kanchi soft silk sareesCopper Zari Buttas weaving..Grand Border View..Gold Zari weaving Contrast Grand pallu..Texture: very soft.. Excellent quality
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் புயலும் இல்லத்தில் முன்னாள் போராளியும் மாவீரர்களின் பெற்றோருமான பஷீர் காக்கா ஏற்றி வைத்தார்
- ·
- · வன்னி
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் புயலும் இல்லத்தில் முன்னாள் போராளியும் மாவீரர்களின் பெற்றோருமான பஷீர் காக்கா ஏற்றி வைத்தார்.
புலோலி விக்னேஸ்வரா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு பதிவுகள்
- ·
- · வடமராட்சி
புலோலி விக்னேஸ்வரா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு பதிவுகள்
கம்பர்மலை முன்பள்ளியில் நடைபெற்ற சிறுவர்தின இவ்நிகழ்வுக்குஅனுசரணை வழங்கியவர்கள்
- ·
- · வடமராட்சி
கம்பர்மலை முன்பள்ளியில் நடைபெற்ற சிறுவர்தின இவ்நிகழ்வுக்குஅனுசரணை வழங்கியவர்கள்1.சுப்பிரமணியம் ரகுநாதன்2.சுந்தரம்பிள்ளைபுனிதா3.பசுபதி குழந்தைவேல்4.சிறப்புரை வழங்கியவர்கள் வல்வெட்டித்துறைப் பொலிஸ்ஓய்வுநிலை அதிபர் !சுவிஸ்நாட்டில் வசிக்கும் சயந்தனுக்குஅனுசரணை வழங்கி உள்ளார்.
அல்வாய் மனோகரா முன்பள்ளியின் விளையாட்டு விழா
- ·
- · வன்னி
அல்வாய் மனோகரா முன்பள்ளியின் விளையாட்டு விழா பதிவுகள்
கார்த்தி நடிக்கும் ‘விருமன்
- ·
- · TamilPoonga
கார்த்தி தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயம்
- ·
- · TamilPoonga
புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா
Featured Albums
Ads
Popular Cameras
Empty
Added article
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளியாகி உள்ள இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 30
Added a news
னது கொள்கைகள் இல்லாத அனைவரும் எனது எதிரிகள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.அண்மையில் கொழும்பு கங்காராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் எம்.பி.தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எனது கொள்கைகள் இல்லாத காரணத்தினால் நான் அவர்களுக்குப் பொது எதிரியாகியுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் வினவிய போது, முன்னாள் ஜனாதிபதியை சந்தித்து தேநீர் அருந்தியதாக தெரிவித்தார்.எவ்வாறாயினும், மறைந்த பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 64 ஆவது நினைவேந்தலில் செவ்வாய்க்கிழமை (26) இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் ஒருவரையொருவர் சந்தித்தனர்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் என்ற வகையில் நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம், எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் எம்.பி தயாசிறி ஜயசேகர தொடர்பில் வினவியபோது, அவருக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று சபையினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்..“நாங்கள் நீதிமன்ற வழக்குகளை தாக்கல் செய்யவில்லை, ஆனால் தயாசிறி ஜயசேகர எமக்கு எதிராக நீதிமன்றம் சென்றவர். “எனவே அவர் வழக்கை வாபஸ் பெற்று எம்முடன் பேச முடியும். குற்றப்பத்திரிகையில் உள்ள உண்மைகளை அவர் தீர்த்து வைத்து மீண்டும் எம்முடன் இணைந்து செயற்பட ஆரம்பிக்க முடியும். அதற்கு எந்த தடைகளும் இல்லை” என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
- 31
Added a news
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருவதாக தெரிவித்த பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் கூறினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜேர்மன் விஜயம் நிறைவடைந்தவுடன், இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான செயற்குழு இணக்கப்பாட்டினை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த பதில் அமைச்சர்,"நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் பங்கேற்புடன் அண்மையில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனும் பிரதிநிகள் குழு நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டது. இதுவரையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் மற்றும் நீடிப்பு செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்த சர்வதேச நாணய நிதியக் குழுவினர், அந்த செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது மக்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கும் பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்குழு மட்டத்திலான இணக்கப்பாட்டினை விரைவில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு உள்ளதாகவும், அதற்காக வரி சேகரிப்பு செயற்பாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்த்திருத்தங்கள் மற்றும் வரி செலுத்தாமல் இருப்போரை கண்டறிவதற்கான வேலைத்திட்டம் என்பன குறித்தும் ஐ.எம்.எப் குழுவினர் ஆலோசனைகளை வழங்கியிருந்தனர். மேலும் இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பிலான தவறான எண்ணங்களை பரப்ப சிலர் முயற்சித்து வருவதாகவும், மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் இன்னும் பல செயன்முறைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைத் தலைமைத்துவம் வகிக்கும் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் இலங்கைக்கு சில நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று போலியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் பலவும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் முன்னேற்றகரமான பேச்சுவார்த்தையில் தொடர்ச்சியாக பங்களிப்புச் செய்து வருகின்றன. மறுமுனையில், நாட்டின் பணவீக்கம் 1.3 ஆக குறைவடைந்துள்ளமை மற்றும் கையிருப்பு அதிகரித்துள்ளமை, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பணம் அனுப்பும் செயற்பாடுகள் சுமூகமான நிலைக்குத் திரும்பியுள்ளமை, நாட்டின் அடிப்படைக் கணக்கின் வைப்புத் தொகை அதிகரித்துள்ளமை என்பன மகிழ்ச்சிக்குரியது இருப்பினும் அரசாங்கத்தின் வருமானம் 48% ஆக அதிகரித்துள்ள நிலையில், செலவீனம் 38% ஆக அதிகரித்துள்ளது. கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் இடம்பெற்று வரும் காலப்பகுதியில் கடன் செலுத்துவதற்கு தவணைகளை செலுத்துவதற்கு மாறாக பெருமளவில் வட்டி பணத்தை செலுத்த நேர்ந்துள்ளமையே அரச செலவீனங்கள் அதிகரிக்க காரணமாகியுள்ளன. எவ்வாறாயினும், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழான பொருளாதார மறுசீரமைப்புக்களின் பலனாக எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலைமையை அடையும் என்றும் நம்பிக்கை உள்ளது.தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார மறுசீரமைப்புக்களை 20 வருடங்களுக்கு முன்பாகச் செய்திருக்கும் பட்சத்தில் நாடு வலுவான நிலைமை அடைந்திருக்கும். அதன்படி அபிவிருத்தி அடைந்த நாடுகள் பின்பற்றிய அனைத்து படிமுறைகளையும் அரசாங்கம் பின்பற்றி வருகின்றது. இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் இந்நாட்டில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டால், அதனால் தமது அரசியல் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என கருதுகின்ற சிலர் தவறான கருத்துக்களை பரப்ப முற்படுகின்றனர். ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவனை கடன் இலங்கைக்கு கிடைக்காது என எவரும் குறிப்பிடவில்லை. மறுமுனையில் பொருளாதாரத்திற்கான இயற்கை வளங்கள் அற்ற நாடுகளின் வரி அறவீட்டு குறிகாட்டியில் இலங்கை மிக குறைந்தளவில் வரி அறவிடும் நாடாக பெயரிடப்பட்டுள்ளதால், வரி அறவீட்டுக்கான (RAMIS) மென்பொருளை புதுப்பித்து வரி சேகரிப்பு பணிகளை சீரான முறையில் முன்னெடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
- 31
Added a news
இஸ்லாம் மார்க்கத்தின் இறைத் தூதரான முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் இலங்கைவாழ் முஸ்லிம் மக்களுக்கும், உலக வாழ் முஸ்லிம் மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.அனைத்து மனிதகுலத்திற்கும் அன்பு மற்றும் அமைதியின் செய்தியைப் பரப்பிய இஸ்லாத்தின் தூதரான முஹம்மது நபி அவர்கள், அல்லாஹ்வின் கடைசி இறைத் தூதராவார்.அன்றைய சமூகத்தில் இஸ்லாத்தின் தூதை முன்வைப்பதில் நபிகளார் முகங்கொடுத்த கடினமான அனுபவங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப்பட்ட தருணத்திலும் பொறுமையும் மௌனமும் தான் அவரின் கூரிய ஆயுதங்களாக இருந்தன. நம்பிக்கை மற்றும் மனிதநேயத்திற்காக அவர் செய்த அளவற்ற தியாகத்தின் விளைவாக, அவர் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடிந்தது.பரஸ்பர புரிதல், சகோதரத்துவம், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தல், நேர்மை என அவர் வாழ்நாள் முழுவதும் காத்து வந்த பண்புகள், நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் நாம் நமது நம் வாழ்வில் இலட்சியமாகக் கொள்ள வேண்டும். மேலும், அவரது தத்துவத்தை மேலும் சமூகமயமாக்கவும், நல்லிணக்கத்தை உருவாக்கவும் பணியாற்றுவது அவருக்கு செய்யக்கூடிய மிக உயர்ந்த மரியாதை என்று நான் நம்புகிறேன்.நபிகள் நாயகம் காட்டிய விழுமியங்களுக்கு ஏற்ப நாடு எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் முறியடித்து 2048 ஆம் ஆண்டளவில் வளர்ந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான பாதையை வலுப்படுத்த அனைத்து இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இனிய மீலாதுன் நபி தின வாழ்த்துக்கள்!
- 32