Feed Item
·
Added a post

* சாபம் நீக்கும் தை அமாவாசை எப்படி, எந்த நேரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.?*

நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாட்களில் ஒன்றாக ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்கள் கருதப்படுகிறது. சிறப்பு மிகுந்த இந்த நாட்களில் ஒன்றான தை அமாவாசை நாளை வருகிறது. இந்த நாளில் மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது.

*தர்ப்பணம்:*

அமாவாசை நாட்களில், காலை வேளையில் ஆறு, கடல் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மூதாயதையர்களை, வயதான காலத்தில் சரிவர கவனிக்காமல் இருந்தால் பெரும் பாவமாக கருதப்படுகிறது. இந்நிலையில், தை அமாவாசை நாளில் மூதாயதையர்களை வழிபட்டு திதி கொடுத்தால் பாவம் நீங்கும் என்று நம்பப்படுகிறது. 

தை அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களுக்கு திதி எனப்படும் தர்ப்பணம் அளிப்பதற்கு காலை 6.17 மணி முதல் அன்று நள்ளிரவு அதாவது 22-ந் தேதி அதிகாலை 2.22 மணி வரை உகந்த நேரம் ஆகும். இந்த நேரத்தில்தான் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க வேண்டும். நாம் இந்த தை அமாவாசை நாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதால் அவர்களது ஆன்மா சாந்தியடையவதாக நம்பப்படுகிறது.

நீரில் இருந்தபடியே கரையில் தர்ப்பணம் கொடுக்க கூடாது. கரையில் இருந்தபடியே நீரில் தர்ப்பணம் கொடுக்க கூடாது. மேலும் கிழக்கு திசை பார்த்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

அமாவாசையன்று தர்ப்பணம் கொடுப்பவர்கள் விரதம் இருக்கலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும்போது எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். தர்ப்பணம் கொடுத்தபின் வழ்க்கம்போல் வீட்டில் சமைத்த உணவை சாப்பிடலாம்.

தை அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது போல, ஏழை,எளிய மக்களுக்கு தானம் செய்ய வேண்டியதும் கட்டாயம் ஆகும். தானத்தில் சிறந்த தானமான அன்னதானம் செய்வது மிகவும் நல்லதாகும். 

இந்த தை அமாவாசை தினத்தில் நாம் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புத்தாடைகள் ஆகியவற்றை நாம் தானமாக அளிப்பதன் மூலமாக நம் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 

தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு வந்து காலம் கடந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து, தர்ப்பணம் கொடுத்தவர் தெற்கு பார்த்து நின்று சந்தனம், குங்குமம் வைத்து வழிபடுதல் சிறந்தது.

  • 361