Feed Item
Added a post 

ராகு கேதுக்கள் 1, 2, 5, 7, 8, 12 ஆகிய இடங்களில் அமர்ந்தால் திருமணத் தடையை சிலருக்கு உருவாக்குகிறது. 1,7-2,8 மிட சர்ப்ப தோஷத்தின் வீரியம் அதிகம். எனவே இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். 5-ல் சர்ப்ப கிரகம் உள்ள ஜாதகத்திற்கு 5, 11-ல் சர்ப்பங்கள் இல்லாத ஜாதகத்தை இணைப்பது சிறப்பு.

திருமணத் தடையை சந்திப்பவர்கள் ராகு வேளையில் துர்க்கை அல்லது காளியை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும். 

ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 1, 5, 9 இந்த ஸ்தானங்களில் சனி, ராகு, கேது, போன்ற கிரகங்கள் இருக்கும் பொழுது அது நாகதோஷம் உடைய ஜாதகமாகிறது.

கால சர்ப்பயோகம் கொண்ட ஜாதகர்கள், ராகு காயத்திரியையும் கேது காயத்திரியையும் தினந்தோறும் படித்து வர தோஷங்கள் படிப்படியாக நீங்கும்.

தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூசித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம். 

  • 163