Feed Item

 

Free vector infinite space background.இன்றைய ராசி பலன் – மார்ச் 23, 2023

 

தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 9ஆம் திகதி.

Aries

மேஷம்

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் புகழ் அதிகரிக்கும்.

Taurus

ரிஷபம்

பெரியவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும். வீடு வாங்க மற்றும் விற்பதற்காக எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

Gemini

மிதுனம்

உங்களின் தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணமொன்றால் ஆதாயம் கிட்டும். குடும்பத்தினர்களின் குறைகளை தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சுதந்திரமாகச் செயல்படுவீர்கள்.

cancer

கடகம்

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். வீட்டை அழகாக வைத்திருப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். எடுத்த முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு.

leo

சிம்மம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். செலவுகள் அதிகரிக்கும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

virgo

கன்னி

இன்று மனக்குழப்பம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.

Libra

துலாம்

எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் நாள். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகி மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

Scorpio

விருச்சிகம்

கல்யாண வாய்ப்புகள் கைகூடும். தன்னம்பிக்கை யோடும், தைரியத்தோடும் செயல்படுவீர்கள். விட்டுப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு கிடைக்கலாம். மகிழ்ச்சியான நாள்.

Sagittarius

தனுசு

முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மாற்றலாமா என்பது குறித்து சிந்திப்பீர்கள்.

Capricorn

மகரம்

தேக நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்து சேரும் வாய்ப்பு உண்டு. கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச்சமாளிப்பீர்கள்.

Aquarius

கும்பம்

பிரச்சினைகள் அகலும் நாள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரலாம். ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். இல்லத்தில் மங்கலஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

Pisces

மீனம்

விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். பழைய வாகனத்தை கொடுத்துப் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் கொடுப்பார்கள்..

 

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 217