Feed Item
·
Added a news

சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவியேற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்னால் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

முதலில் அவருக்கு நுரையீரல் பாதிப்பு என்று கூறப்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் தெரியவந்ததை அடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

 

இந்த நிலையில் தற்போது அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகிவிட்டார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும் அவர் இருதய பாதிப்புக்காக தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 417