Feed Item
Added a news 

கிளிநொச்சி  மாவட்டத்தில் கால்நடை அபிவிருத்தி செயல்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய ஆளணி வளம் இன்மையால் பெரும் கஸ்ரங்களை எதிர் கொள்வதாக மாவட்ட  கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைத்திணைக்களத்தின்; செயல்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய ஆளணி வளங்கள் இல்லாத நிலையினால் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் நெருக்கடிகள்  எதிர்கொள்வதாக மேற்படி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கால்நடை உற்பத்தி சுகாதாரத்தினைக்களத்திற்கு 07 வெளிக்கள அலுவலர்கள் தேவையான நிலையில் ஒருவர் மாத்திரமே உள்ளதாகவும் மேற்படி கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம் அண்மை நாட்களாக கால்நடைகளுக்கு ஏற்பட்ட பெரியம்மை என்ற வைரஸ் தொற்று நோயின் தாக்கம் குறைவடைந்து வருவதாகவும் அடுத்த சில வாரங்களில் இது பூரணமாக கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கான சூழ்நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • 359