Feed Item
Added article 

ஞானவேல் ராஜா தயாரிப்பில் கிருஷ்ண இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் படம் 'பத்து தல'. இந்த படத்தில் சிம்புக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கிறார். மேலும், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 



இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் இன்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், டிரெய்லரை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் படக்குழுவின் சூப்பர் அப்டேட் சிம்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • 91
Comments
Info