Feed Item

புங்குடுதீவு 12 வட்டார பகுதியில் சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்ட 20 கிலோ மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவல் துறை பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர் 57 வயதுடைய நபர் என பொலிசார் தெரிவித்தனர்.கைப்பெறப்பட்ட குறித்த மாட்டு இறைச்சி, உணவுக்கு உகந்தது இல்லை என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • 560