Feed Item
Added a news 

'உங்களில் ஒருவன் பதில்கள்' என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வீடியோ மூலம் உற்சாகமாக பதிலளித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், ஆளுநர் அளித்த தேநீர் விருந்து, கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம், இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு என பல அரசியல் வினாக்களுக்கு பதில் அளித்துள்ளார். அதில், ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த நீங்கள், அவர் கொடுத்த தேநீர் விருந்தில் கலந்து கொள்வதா? இது பின்வாங்கல் இல்லையா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.


இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. அன்று அவர் படித்தது அரசின் உரை. ஆகவே அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரையை எந்த மாற்றமும் இல்லாமல், அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய தீர்மானம். அந்த தீர்மானம் ஏற்கப்பட்டு அவையின் மாண்பும், மக்களாட்சி தத்துவமும் நிலைநாட்டப்பட்டது.


குடியரசு தின தேநீர் விருந்து என்பது காலங்காலமாக இருக்கின்ற நடைமுறை மரபு. குடியரசு தினத்தன்று அதில் பங்கேற்றது மக்களாட்சியின் மாண்பை காப்பதற்கான பண்பே தவிர, இதில் அரசியல் பின்வாங்கலும் இல்லை. முன்வாங்கலும் இல்லை. எந்த சமரசமும் இல்லை என தெரிவித்தார்.

 

  • 293
Comments
Info