கண் திருஷ்டி, நெகட்டிவ் எனர்ஜி மூலம் ஒரு மனிதனுக்கு பாதிப்பு ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் தெரியுமென்றால், எப்போதும் உடல் சோர்வாகவே இருக்கும். தூக்கமாக வரும். ஒரு நிமிடத்திற்குள் இரண்டு அல்லது மூன்று முறை கொட்டாவி விடுவார்கள். உடம்பு அடித்துப் போட்டது போல வலி இருக்கும். ஆனால் மருத்துவரிடம் சென்றால் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்பார்கள். சில பேருக்கு தலைவலி அதிகமாக இருக்கும். கண்ணுக்கு கீழே கருவளையம் தெரியும். அவர்களால் வேலையில் கவனம் செலுத்த முடியாது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் தொடர்ந்து ஒரு மனிதனுக்கு இருந்து வந்தால் அவனுக்கு ஏதோ ஒரு நெகட்டிவ் எனர்ஜியினால் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்று நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட தாந்திரீக ரீதியாகவும், ஆன்மீகத்திலும் நிறைய பரிகாரங்கள் உள்ளது. கண் திருஷ்டியில் இருந்து விடுபட செய்ய வேண்டிய பரிகாரம்: அதிகாலை வேளையில் எழுந்து கல் உப்பு, மஞ்சள் பொடி, கோமியம் கலந்த தண்ணீரில் தலைக்கு குளித்து விடுங்கள். பிறகு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு பழமையான கோவிலுக்கு சென்று அந்தக் கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து மனதை அமைதிப்படுத்தி தியானம் செய்ய வேண்டும். கோவிலுக்கு சென்றோம் வந்தோம் என்று இருக்கக் கூடாது. ஒரு 30 நிமிடங்கள் வரையாவது அந்த நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் கோவிலில் அமரும்போது, உங்கள் உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றலானது நிச்சயமாக நீங்கிவிடும். இது முதல் வழி. இரண்டாவதாக நாம் பார்க்கப் போவது ஒரு ஹீலிங் நம்பர். இந்த நம்பர் நம்மை பொல்லாத கண் திருஷ்டியில் இருந்தும் காப்பாற்றும். பொல்லாத நபர்களுடைய வயிற்றெரிச்சலிருந்து காப்பாற்றும். அதோடு மட்டுமில்லாமல் பிளாக் மேஜிக் என்று சொல்கிறார்கள் அல்லவா. ஏவல், பில்லி, சூனியம், போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நம்மை காப்பாற்றும். அது என்ன நம்பர் அந்த நம்பரை நாம் எப்படி பயன்படுத்துவது. நெகட்டிவ் எனர்ஜியை விரட்டி அடிக்கும் ஹீலிங் எண் இதுதான். ‘69900’. ஒரு சின்ன பேப்பர் எடுத்துக்கோங்க. அந்த பேப்பரில் இந்த நம்பரை எழுதி விட்டு நான்காக மடித்து உங்களுடைய பர்ஸில் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது உங்கள் கையில் எப்போதும் இந்த பேப்பர் இருக்க வேண்டும். ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள்ளலாம். பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். இந்த நம்பர் உங்களோடு இருந்தால் எந்த ஒரு நெகட்டிவ் எனர்ஜியினாலும் உங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. நீங்கள் ஒரு பாதுகாப்பு வட்டத்திற்குள் இருப்பீர்கள். சில குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் துருதுருவென இருக்கும். நன்றாக படிக்கும். இப்படிப்பட்ட பிள்ளைகளை பார்க்கும்போது அவர்கள் மீதும் கண் திருஷ்டி விழும். இதே போல ஒரு பேப்பரில் நம்பரை எழுதி உங்களுடைய பிள்ளைகள் பேக்கில் வைத்து விடுங்கள். எந்த கண் திருஷ்டியும் விழாது. அடிக்கடி இந்த பேப்பரை மாற்ற வேண்டும் என்று அவசியம் இல்லை. பேப்பர் ரொம்பவும் பழசாகி கிழிந்து போகும் நிலைமையில் இருக்கும்போது, பழைய பேப்பரை எடுத்து போட்டுவிட்டு புதுசாக ஒரு பேப்பரை எடுத்து அதில் நம்பரை எழுதி வைத்துக் கொள்ளவும். உங்களுடைய கைபேசிக்கு பின்னால் கவர் இருக்கும் அல்லவா அதில் இந்த நம்பரை எழுதி சொருகி வைத்துக் கொண்டால் கூட ரொம்ப ரொம்ப நல்லது. கையோடு இந்த நம்பர் இருக்க, எந்த ஒரு நெகட்டிவ் எனர்ஜியாலும் உங்களுக்கு பாதிப்பு இருக்காது என்பது நம்பிக்கை.