Ads

வாழ்க்கை வாழ்வதற்கே

0 0 0 0 0 0
  • 572
Info
Title:
வாழ்க்கை வாழ்வதற்கே
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Duration:
02:13
Category:
Created:
Updated:
 ·   · 1 videos
  •  · 4 friends
  •  · 4 followers
Comments (0)
வாழ்க்கை வாழ்வதற்கே
Empty
typing a message...
Connecting
Connection failed
Ads
Latest Videos
Advertisement
Ads
Featured Videos (Gallery View)
Ads
***இன்று உனக்கு ஏற்பட்ட துன்பங்களுக்காக வருந்தாதே ஏனெனில் அதுதான் உனக்கு வருங்காலத்தில் எதையும் தாங்கும் வல்லமையான இதயத்தை அளிக்கப்போகிறது ***
  • 43
  • 44
  • 45
  • 50
Added a news 
கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் முற்றுகை பல லீற்றர் கசிப்பு, கோடா, உபகரணங்கள் மீட்பு ஒருவர் கைது!கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் குளத்தின் கரையோர பகுதியில் இரகசியமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை 24.10.2021 இன்று அதிகாலை 2.00 மணியளவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை மேட் கொண்ட நேரத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன். 14 பெரல்களில் கசிப்பு உற்பத்திக்கு தயாரான நிலையில் காணப்பட்ட 1620 லீற்றர் கோடாவையும் கசிப்பு வடித்து கொண்டிருந்த 540 லீற்றர் கோடாவையும் வடித்த நிலையில் காணப்பட்ட 120 லீற்றர் கசிப்பும்,கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணம் என்பவற்றை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மீட்டனர்.இதன் போது 33 வயதுடைய இரன்டு குழந்தையின் தந்தை பெரிய குளம் கட்டைக்காட்டைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்தனர். குறித்த சந்தேக நபர் கிளிநொச்சி மாவட்டம் முழுவதும் பல பகுதிகளுக்கு கசிப்பை விநியோகித்து வந்தவர் என பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.குறித்த சந்தேக நபரையும் மீட்கப்பட்ட கோடா, கசிப்பு, உபகரணம் என்பவற்றையும் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்க உள்ளார்கள்.
  • 68
Added a news 
கிளிநொச்சி  பூனகரி அன்பு புரம்  பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைப்பதில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா அன்பு புரம் கிராமத்தில் கூடுதலாக குடிநீர் கிணறுகள் உவர் நீராக காணப்படுவதனால் இந்தப் பிரதேச மக்கள் தமக்குத் தேவையான குடிநீரை வேறு இடங்களில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது.அந்த வகையில் தற்போது குறித்த பிரதேசத்தில் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊடாக குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த குடிநீர் வினியோகமானது வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரமே வழங்கப்படுவதாகவும் ஏனைய நாட்களில் குடிநீர் இல்லாத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள பிரதேச மக்கள் தங்களுக்கு வழங்கப்படுகின்ற குடிநீரானது ஓரிரு நாட்களுக்கு தேவையான நீராக இருப்பதாகவும் ஏனைய நாட்களில் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் குடிநீரை பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
  • 71
Added a news 
கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை தென் கடல் பகுதியில் இறங்குதுறை  ஒன்றை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை பிரதேச கடற்தொழிலாளர்கள் முன்வைத்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெளதாரி முனை மற்றும் கல்முனைப் பகுதியில் அதிகளவானகுடும்பங்கள் கடற்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.  குறிப்பாக கௌதாரிமுனை பகுதியில் தென் கடல் பகுதியில் ஆழ் கடல் தொழிலுக்கு செல்ல கூடிய பகுதியாக காணப்படுவதனால் குறித்த பிரதேசத்தில் படகுத்துறை ஒன்றை அமைத்து தருமாறு பிரதேச கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • 77
Added a news 
கிளிநொச்சி அக்கராயன் ஆற்றின் துப்பரவுப் பணிகள் அடுத்த  வாரமளவில் ஆரம்பிக்கப்பட்டு அதன் வேலைகள் ஒரு மாத காலத்துக்குள் நிறைவுறுத்தப்படும் என கிளிநொச்சி மாவட்ட பிரதி  நீர்ப்பாசன பொறியியலாளர் ராஜகோபு தெரிவித்துள்ளர்.கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசனகுளங்களில் ஒன்றாகக் காணப்படுகின்ற அக்கராயன் குளம் வான் பாயும் போது ஏற்படுகின்ற வெள்ளப் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் அக்கராயன் ஆற்றில் காணப்படுகின்ற பற்றைகளை அகற்றுகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளது. அதாவது ஆறுகளைப் பாதுகாப்போம்‘ என்ற அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் கிளிநொச்சி அக்கராயன் ஆற்றைப் புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இந்தத் திட்டத்துக்காக சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான 4,113,105.00 ரூபாவை வழங்க திறைசேரி அனுமதி பெறப்பட்டிருப்பதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜெயசிங்க ஊடாக அன்மையில் மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனுக்கு தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்ததுஅதற்கமைய குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்குரிய கேள்வி கோரல்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான வேலைகள் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்பட்டு அதன் வேலைகள் ஒரு மாத காலத்துக்குள் நிறைவுறுத்தப்படும் என கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் ராஜகோபு தெரிவித்துள்ளர்.அக்கராயன்குளம் வான்பாயும்போது வழிந்தோடும் நீர் பெருக்கெடுத்து ஒவ்வொரு வருடமும் பெருமளவு வயல்நிலங்கள் அழிவடைவதைத் தடுக்கும் வகையில், வழிந்தோடும் நீர் பாயும் அக்கராயன் ஆற்றைப் புனரமைப்பதற்காக இந்தத் திட்டம் தீட்டப்பட்டதாக மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் ராஜகோபு மேலும் தெரிவித்துள்ளதுடன் . இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால், எதிர்வரும் காலங்களில் அக்கராயன்குளம் பெருக்கெடுக்கும்போது பயிர்ச்செய்கை நிலங்கள் வெள்ளப் பாதிப்புக்கு உட்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
  • 69
Added a news 
ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றன.  இந்த நிலையில், அவர்களை கட்டுப்படுத்த சவுதி தலைமையிலான கூட்டணி படையினர் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள மாரிப் பகுதியில் சவுதி தலைமையிலான கூட்டணி படையின் போர் விமானங்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்காக கொண்டு குண்டுகளை பொழிந்து வருகின்றன.  இதனால் அந்த பகுதியில் அவர்களுடைய ஆதிக்கம் குறைந்து வருகிறது.அவர்கள் முன்னேறி செல்வதும் தடுக்கப்பட்டு உள்ளது.  கடந்த சில நாட்களில் கிளர்ச்சியாளர்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர் என உள்ளூர் ராணுவம் தெரிவித்து உள்ளது.
  • 77
Added a news 
அனலில் தவிப்பவர்களை நெருப்பில் தள்ளிவிட்ட கதையாக விவசாயிகளின் நிலை மாறியுள்ளதென நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.ராகலையில் நேற்று (25) இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "ஏற்கனவே அதிகரிக்கப்பட்ட அரிசி விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதிகரிக்க போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே அதிகரிக்கப்பட்ட கேஸ் விலை மீண்டும் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிகரிக்கப்பட்ட சீனி விலை மீண்டும் அதிகரிக்கப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஏற்கனவே அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், தற்போது 5/- ரூபா ஐ.ஓ.சி நிறுவனம் அதிகரித்துள்ளது. இது ரெயிலர் மாத்திரமே. மெயின் பிக்சர் வர இருக்கிறது. அதில் பெட்ரோல், டீசல் விலை 20/- முதல் 30/-ரூபா வரை அதிகரிக்கப்பட உள்ளது.சேதன பசளை என்பது நல்ல திட்டம். அதை நாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் அதனை ஓரே இரவில் நிறைவேற்ற நினைப்பது. முட்டாள்தனம். படிப்படியாகவே அதனை செய்ய வேண்டும்.ஆனால் இந்த அரசாங்கம் தங்களது சுயலாபத்திற்காக இரசாயன உர இறக்குமதியை தடை செய்து ஒட்டுமொத்த விவசாயிகளையும் பள்ளத்தில் தள்ளியுள்ளது.இதனால் மலையகத்தில் சிறிய மற்றும் பெரிய அளவு விவசாயம் செய்யும் இளைஞர்கள் பெரிதும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இது போதாத குறைக்கு கடந்த நாட்களில் பெய்த கடும் மழையால் விவசாய பயிர்கள் அழிவடைந்துள்ளன.எனவே, மலையக இளைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரம் பற்றாக்குறை பிரச்சினைக்கு விரைவில் உரிய தீர்வு காணப்பட வேண்டும். இன்று ஆசிரியர் அதிபர்களின் சம்பள பிரச்சினை பெரும் போராட்டமாக மாறியுள்ளது.ஆசிரியர்கள் அதிபர்களின் போராட்டத்தை பெற்றோர் கையிலெடுத்து நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்." என மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
  • 75
Added a news 
மன்னாரில் இன்று விவசாயிகள்  போராட்டம்-பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு.மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தினர் இன்று  திங்கட்கிழமை (25) காலை 10 மணிக்கு மாபெரும்  போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ள நிலையில்,அனைத்து விவசாயிகளும் குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.குறித்த போராட்டமானது மன்னார் - உயிலங்குளம் கமநல சேவை திணைக்களத்தின் முன்பாக இடம்பெறவுள்ளது.'தற்போது காலபோக நெற்செய்கை ஆரம்பித்துள்ளது. அரசின் திட்ட மிடாத நடவடிக்கை காரணமாக இந்த நாட்டில் பாரிய உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்த அரசு உடனடியாக விவசாயிகளுக்கு உரத்தை வழங்குமாறு கோரி நடைபெற உள்ள இந்த போராட்டத்துக்கு அனைத்து விவசாயிகளையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ. சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
  • 74
Added a news 
அதிவேக நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான மின்னணு கட்டணத் திட்ட (ETC) முற்கொடுப்பனவு அட்டைகளை வாகன உமிழ்வு சோதனை நிலையங்களில் விநியோகிக்க முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர். டபிள்யு. ஆர். பிரேமசிரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.மின்னணு கட்டண முறை தற்போது கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சசாலையில் மட்டுமே பயன்படுத்தப்படுவதால், ETC முற்கொடுப்பனவு அட்டைகள் தற்போது சீதுவ, ஜா-எல மற்றும் களனி ஹொரன சந்தியில் உள்ள நெடுஞ்சாலை அலுவலகங்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன. எதிர்காலத்தில், கெரவலப்பிட்டி உள்ளக பரிமாற்றம் மற்றும் ஏனைய நெடுஞ்சாலைகளில் உள்ள உள்ளக பரிமாற்றங்களில் மின்னணு கட்டண முறைகள் (ETC) நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வாகன உமிழ்வு சோதனை நிலையங்களில் முற்கொடுப்பனவு அட்டைகளை எளிதாகப் பெற முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.தினமும் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோர் மத்தியில் மின்னணு கட்டண ETC முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நெடுஞ்சாலைகளில் வெளியேறும் வாயில்களுக்கு அருகில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வாய்ப்பாகும் என்றும் அமைச்சர் கூறினார்.
  • 76
Good Morning....
  • 69
Added a news 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 24.32 கோடியாக அதிகரித்துள்ளது.அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46,174,547 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 753,747 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 35,898,041 என்பதும் குறிப்பிடத்தக்கது.பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,697,341 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 604,764 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 20,875,999 என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,142,441 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 453,076 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 33,506,817 என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • 131
Added a news 
உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களில் மிகவும் பிரபலமானது I-phone.விலை உயர்ந்த ஐ-போனை கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்துள்ளார்.அவருக்கு ஐ – போனுக்குப்பதில் ரூ.5 ரூபாய் நாணயமும் சோப்புக்கட்டியும் அனுப்பியதால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
  • 123
Added a post 
 பூஜை சாமான்களை எவர்சில்வர் தட்டுக்களில் வைக்கக்கூடாது. வெள்ளி பித்தளை, செம்பு, வெண்கலம் ஆகிய தட்டுகளிலேயே வைக்க வேண்டும். வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே அணைய வேண்டும். நாம் அணைக்கக் கூடாது.திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை, கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.எலுமிச்சை விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது.நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச்செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது. பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது. செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல், வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.இறந்த முன்னோர்களின் படங்களை சாமி படங்களுடன் வைத்து வணங்குதல்கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம்.வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம். கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது. சிதம்பரத்தைத் தரிசித்தாலும், காசியில் இறந்தாலும், திருவாரூரில் பிறந்தாலும், திருவண்ணாமலையை நினைத்தாலும் மோட்சம் கிட்டும் என்பது ஆன்றோர் முடிவு.விநாயகனை ஒருமுறை வலம் வரவேண்டும். சிவபிரானை மூன்று முறையும், அம்பாளை நான்கு முறையும், முருகனை மூன்று முறையும் சுற்றி வழிபாடு செய்தல் வேண்டும். காலையில் படுக்கையில் இருந்து கண் விழித்தெழுந்ததும் அவரவர் உள்ளங்கையில் கண் விழிப்பதே நற்பலன்களை தரும் என்பது சாஸ்திரம் நெறியாகும்.
  • 131
Added article 
வசந்த பாலன் இயக்கத்தில் உருவான படம் ஜெயில், ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். மேலும் நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒருசில காரணங்களால் இப்படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் முடங்கி உள்ளது.ஜெயில் படத்தின் முக்கிய அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டு உள்ளார். அதன்படி இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர். விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  
  • 128
Added a news 
இந்தியாவிலிருந்து பசளைக் கொள்வனவு செய்வதற்காக அரச வங்கி ஒன்றில் தனிப்பட்ட கணக்கொன்றை ஆரம்பித்தல் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் முன்வைத்த கருத்தை மேற்கோள்காட்டி, ஒருசில ஊடகங்கள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டுள்ள பொய்யான செய்தியை ஜனாதிபதியின் செயலாளர் முற்றாக மறுத்தார்.அந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது மற்றும் உண்மைக்குப் புறம்பான வகையில் உருவாக்கப்பட்டதாகும். அரச வங்கியொன்றில் கணக்கொன்றை ஆரம்பித்தல் என்பது, குறித்த வங்கிக்கும் கணக்கு உரிமையாளருக்கும் இடையிலான செயற்பாடாகும்.இதில், உரிய விதிமுறைகளுக்கமைய செயற்படுவது வங்கியின் பொறுப்பாகும். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் முன்வைத்த கருத்தை மேற்கோள்காட்டி தன்னை இலக்கு வைத்து திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொய்ப் பிரச்சாரம் தொடர்பாக, ஏற்கனவே கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்தார்.
  • 126
Added article 
பிரபல நடன கலைஞரும் நடிகையுமான சுதா சந்திரன், 1981ம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் தனது காலை இழந்தார். இதனால் செயற்கைக் கால் பொருத்தி தனது கலைப் பயணத்தை தொடர்கிறார். தமிழ், இந்தி சீரியல்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருவதோடு நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார்.இந்நிலையில், சுதா சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், பாதுகாப்பு சோதனைகளுக்காக எப்போதும் எனது செயற்கை கால் விமான நிலைய அதிகாரிகளால் சோதனை செய்யப்படுவதும், ஒவ்வொரு முறையும் செயற்கை காலை கழற்றி காட்டுவதும் வேதனையாக உள்ளது என கூறி உள்ளார்.‘நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு இது எனது தனிப்பட்ட கடிதம். மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை. நான் சுதா சந்திரன், நான் ஒரு நடிகை, நாட்டியக் கலைஞர். செயற்கைக் கால்களைக் கொண்டு நடனமாடி வரலாறு படைத்திருக்கிறேன். எனது நாடு என்னை நினைத்துப் பெருமிதம் கொள்ளுமாறு செய்திருக்கிறேன்.ஆனால், தொழில்முறைப் பயணமாக நான் ஒவ்வொரு முறை விமானம் ஏறுவதற்கு முன்பும், விமான நிலையத்தில் என்னைப் பாதுகாப்பு சோதனையில் தடுத்து நிறுத்தும்போது எனது செயற்கைக் காலை வெடிகுண்டு பரிசோதனைக் கருவியை வைத்துப் பரிசோதிக்கும்படி மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரிடம் கேட்கிறேன். ஆனால், அவர்கள் எனது செயற்கைக் காலை கழற்றி காட்டச் சொல்கின்றனர்.மோடி அவர்களே, இது மனிதச் செயல்தானா? இதுதான் நமது தேசம் பேசுகிறதா? இந்தச் சமூகத்தில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்குத் தரும் மரியாதை இதுதானா? மோடி அவர்களே, மூத்த குடிமக்கள், அவர்கள் மூத்தவர்கள்தான் என்பதைத் தெரிவிக்கும் வண்ணம் ஒரு அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.” என சுதா சந்திரன் கூறியிருந்தார்.சுதா சந்திரனின் வீடியோ பதிவு வைரலான நிலையில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக மத்திய பாதுகாப்புப் படை டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.“உங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு மிகவும் வருந்துகிறோம் சுதா சந்திரன். விதிமுறைகளின் படி, குறிப்பிட்ட சில சமயங்களில் மட்டுமே செயற்கை உறுப்பு பாகங்களை நீக்கிப் பரிசோதிக்க வேண்டும். உங்களை ஏன் அப்படிச் செய்யச் சொன்னார் என்று, சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியை நாங்கள் விசாரிக்கிறோம். இதுபோன்று எந்தப் பயணிக்கும் அசவுகரியம் ஏற்படாது இருப்பதை உறுதி செய்வோம்” என மத்திய தொழிலக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
  • 208
Added a news 
ஆபத்தான நுண்ணுயிர்கள் உள்ளடங்கியதாக உறுதி செய்யப்பட்ட கரிம உரத்தை பலவந்தமாக நாட்டிற்கு வழங்குவதற்காக சீன நிறுவனத்தின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.நேற்று (23) இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.இதேவேளை, குறித்த கப்பலை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம் என துறைமுக ஆணையக தலைவருக்கு விவசாய அமைச்சின் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
  • 210
Added article 
திரைப்பட மற்றும் நாடக நடிகையான விசாகா சிறிவர்தன காலமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதார். அவர் தனது 64 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
  • 210
  • 213
Added a news 
ஈகுவடார் நாட்டை சேர்ந்த தடகள வீரர் அலெக்ஸ் குயினோன்ஸ் (வயது 32).  உலக தடகள போட்டியின் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்றவர். இந்த நிலையில், அவர் குவாயாகில் பகுதியில் உள்ள தெருவில் இறந்து கிடந்துள்ளார் என அந்நாட்டு விளையாட்டு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.அவரது மறைவை தொடர்ந்து, பார்சிலோனா கால்பந்து கிளப் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியது.  அவர்களுடைய தடகள குழுவின் உறுப்பினர்களில் குயினோஸ்சும் ஒருவர் ஆவார்.
  • 223
Added a news 
சீனாவின் வடக்கே இன்னர் மங்கோலியா சுயாட்சி பகுதியில் ரசாயன ஆலை ஒன்று அமைந்துள்ளது.  இதில், திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  3 பேர் காயமடைந்து உள்ளனர்.இந்த வெடிவிபத்து நேற்று (சனிக்கிழமை) காலை அணைக்கப்பட்டு உள்ளது.  இந்த நிறுவனத்தின் சட்டப்பூர்வ பிரதிநிதியை உள்ளூர் போலீசார் பிடித்து சென்றுள்ளனர்.  நிறுவன உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.  இந்த விபத்திற்கான காரணம் பற்றி மண்டல அரசு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
  • 223
Added a news 
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 40 லட்சத்து 86 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 79 லட்சத்து 71 ஆயிரத்து 298 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22 கோடியே 11 லட்சத்து 56 ஆயிரத்து 154 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 49 லட்சத்து 58 ஆயிரத்து 940 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • 224
Added a news 
இந்தியாவிலும் உலகின் பல பாகங்களிலும் பரவி வருவதாகக் கூறப்படும் கொவிட் -19 வைரஸின் ´டெல்டா பிளஸ் பிறழ்வு´ இலங்கையில் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் பரிசோதனைகளின் படி, இதுவரையிலும் இலங்கையில் டெல்டா பிளஸ் பரவி இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.இருப்பினும் இது பரவ ஆரம்பித்தால் இதை 100% தடுக்க முடியாது என்று சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.தொற்றுநோய் பரவல் ஆரம்பமாகியது முதல், இலங்கையில் பரவி வரும் கொவிட் -19 வைரஸின் பிறழ்வுகளை அடையாளம் காண்பதற்காக வைத்தியர் ஜீவந்தரவின் வழிகாட்டலின் கீழ் ஆய்வக அடிப்படையிலான மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அந்த பரிசோதனைகளின் படி இலங்கையில் பரவுகின்ற அல்பா மற்றும் டெல்டா வகைகள் தொடர்பான தகவல்கள் இதற்கு முன்னர் வெளிப்படுத்தப்பட்டன. இவற்றில் பி .1.617.2.28 என்ற மூன்று புதிய பிறழ்வுகளைக் கொண்ட டெல்டா வகை முக்கியமாக இலங்கையின் மேல் மாகாணத்தில் பரவியது என்று வைத்தியர் ஜீவந்தர குறிப்பிட்டார்.பயண கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களால் இந்த திரிபடைந்த வைரஸ் இலங்கையில் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.அல்பா பி 1.411 என்ற பிரழ்வும் இன்னும் சமூகத்தில் உள்ளது என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.இதேவேளை கொரோனாத் தடுப்பூசியின் மூலம் உடலில் அதிக அளவிலான நோய் எதிர்ப்புச் சக்திகள் உருவாகின்றன தெரியவந்துள்ளது.
  • 225
Added a news 
“நான் விவசாயிகளுக்கே முன்னுரிமை வழங்கினேன். அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை மீற மாட்டேன். விவசாயிகளான நீங்களே நல்லது கெட்டதை ஆராய்ந்து தீர்மானம் எடுங்கள். மனிதர்களைத் தூண்டும் அரசியலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். எதிர்காலச் சந்ததியினருக்காக ஒன்றிணையுங்கள்” என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.உடுபந்தாவ - புன்னெஹெபொல சேதனப் பசளை தயாரிக்கும் மத்திய நிலையம் மற்றும் சேதனப் பசளை பயிர்ச்செய்கை இடங்களைப் பார்வையிடுவதற்கு இலங்கை ஜனாதிபதி அவர்கள் நேற்று (23) முற்பகல் சென்றிருந்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.பசளை தயாரிக்கும் மத்திய நிலையத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி, சேதனப் பசளை உற்பத்தி செய்யப்படும் விதத்தைப் பார்வையிட்டதோடு, உற்பத்திகளின் தரத்தைப் பேணுவதற்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைமைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.பின்னர் பயிர்ச்செய்கை நிலத்துக்கு வருகைதந்த ஜனாதிபதி, அங்கு பயிரிடப்பட்டிருந்த மரக்கறிகள் மற்றும் ஏனைய பயிர்கள் தொடர்பாக தனது அவதானத்தைச் செலுத்தினார். உரத்தைப் பயன்படுத்தி மண்ணை வளப்படுத்தும் முறையையும் பார்வையிட்டார்.உலகின் இரசாயன உர உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு வகையில் தூண்டுதல்களை மேற்கொள்வதன் மூலம் தடைகளை மேற்கொண்டாலும், அவை எவற்றுக்கும் தாம் அஞ்சப் போவதில்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், மக்கள் தம்மைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கே ஆகும் என்றும் குறிப்பிட்டார்.சேதன உரத்தைப் பயன்படுத்திப் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக ஜனாதிபதி இவ்விஜயத்தை மேற்கொண்டார்.அதன் பின்னர், உடுபந்தாவ பிரதேச சபை வளாகத்தில் உள்ள கழிவு மீள்சுழற்சி மத்திய நிலத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
  • 240
Added a news 
ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கல் தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கல் தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்று நிருபம் ஒன்றை இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ஐ. அன்ஸாரின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளரின் DGHS Covid-19/347/2021 ஆம் இலக்க 21.10.2021 ஆம் திகதிய கடிதம் மூலம் வழங்கப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஒப்புதலின் பிரகாரம், பள்ளிவாசல்களில் கூட்டு செயற்பாடான ஜும்ஆத் தொழுகையினை மாத்திரம் நடாத்துவதற்கு பின்வரும் கட்டாய நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் பிரகாரம் இலங்கை வக்பு சபை அனுமதியினை வழங்குகின்றது.1. இந்த அனுமதியானது ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் கண்டிப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பள்ளிவாசலிலும் இதற்காக எல்லா நேரத்திலும் கலந்து கொள்ளக் கூடிய அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை 50 ஆகும்.2. தொழுகையின் ஒரே ஒரு அமர்வு (வக்து) மாத்திரமே அனுமதிக்கப்படுகிறது.3. ஒரு வரிசை இடைவெளி விட்டு (ஒவ்வொரு மற்ற வரிசையிலும்) தொழுகைகள் நடாத்தப்படல் வேண்டும்.4. முகக்கவசம் அணிதல், 1 மீற்றர் இடைவெளி பேணல், சொந்தமான தொழுகை விரிப்பினை எடுத்து வருதல் மற்றும் வீட்டிலிருந்து வுழூ செய்து கொண்டு வருதல் என்பன கட்டாயமானதாகும்.5. சுகாதார / பாதுகாப்பு தரப்பினரின் ஏனைய அனைத்து விதிமுறைகள், வழிகாட்டல்கள் மற்றும் வக்பு சபையின் முன்னைய வழிகாட்டுதல்கள் மிகவும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படல் வேண்டும்.6. வேறு எந்த கூட்டு வணக்க வழிபாடுகள் அல்லது செயற்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதன்பிரகாரம்இ எந்தவொரு பள்ளிவாசலிலும் ஏனைய தொழுகைகள், குர்ஆன் மஜ்லிஸ், நிகாஹ் மஜ்லிஸ் போன்றவைகளுக்கு இந்த ஒப்புதல், அனுமதியானது நீக்கப்படமாட்டாது.7. பள்ளிவாசல்களில் ஏனைய அனைத்து தொழுகைகளையும் தனியாக தொழுவதற்கு மாத்திரம் எல்லா நேரத்திலும் 25 நபர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.8. பள்ளிவாசல்களில் உள்ள வுழூச் செய்யும் பகுதி மற்றும் கழிப்பறைகள் என்பன மூடப்பட்டிருத்தல் வேண்டும்.9. தனிமைப்படுத்தப்பட்டதாக அல்லது மட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்கள் அவ்வாறான தனிமைப்படுத்தல் மட்டுப்படுத்தல் காலம் வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருத்தல் வேண்டும்.10. மேற்குறிப்பட்ட நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்றுவது நடைமுறைச் சாத்தியமில்லை என கருதும் நம்பிக்கையாளர்கள் / பொறுப்பாளர்கள் ஜும்ஆத் தொழுகையை நடாத்தாமல் விடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.11. மேலுள்ள அல்லது ஏனைய கொவிட் 19 வழிகாட்டுதல்களில் ஏதேனும் மீறல்கள் இடம்பெற்றால் நம்பிக்கையாளர்கள் அல்லது பொறுப்பாளர்கள் மிகக் கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும் என்பதுடன், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 244