அறிவியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்
14.03.1879 ஆம் திகதி ஜெர்மன் நாட்டில் பிறந்த அறிவியல் விஞ்ஞானியான ஐன்ஸ்டீனுக்கு சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் என்றாலே பிடிக்காது. அவருக்கு சில வார்த்தைகளை கோர்வையாக எழுத படிக்க வருவதில்லை. இதனை அந்தப் பாடசாலை அவரது தந்தையிடம் தெரிவித்திருக்கின்றது.
அப்போது அவருடைய தந்தை எனது பையனை குறை கூறாதீர்கள். அவன் ஏதாவது ஒரு துறையில் திறமையாக வருவான் என நம்பிக்கையுடன் கூறி இருக்கிறார். பின்னர் ஐன்ஸ்டீனுக்கு விஞ்ஞானத்தில் ஆர்வம் அதிகம் என அறிந்து அவருடைய நண்பர்கள் இருவரின் வீட்டிற்கு ஐன்ஸ்டீனை அழைத்துச் செல்கிறார். ஐன்ஸ்டீனின் தந்தையின் நண்பர்கள் இருவரும் விஞ்ஞானத் துறையில் அதிக ஆர்வம் உடையவர்கள் அத்தோடு விஞ்ஞானம் சம்பந்தமான அதிக புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்கள். அங்கு ஐன்ஸ்டின் விஞ்ஞான புத்தகங்களை விரும்பி படிக்கிறார். பின்னர் விஞ்ஞானத்தோடு சேர்ந்து கணிதத்தையும் விரும்பி கற்கிறார்.
Physics, maths இந்த இரண்டையும் தான் ஐன்ஸ்டீன் விரும்பிப் படிப்பார். மற்ற பாடங்களில் ஃபெயில் கூட ஆகி இருக்கிறார். இவருடைய பள்ளிப்படிப்பு முடியும் தருவாயில் ஜெர்மனியில் இளம் பராயத்தினர் இராணுவத்தில் இணைய வேண்டும் என ஜெர்மன் அரசு அறிவிக்கிறது. இதனால் ஐன்ஸ்டீனை அவரின் வேண்டுகோளுக்கிணங்க அவரது தந்தை சுவிஸ்லாந்துக்கு படிப்பதற்கு அனுப்புகிறார்.
சுவிஸ்லாந்து படிப்பதற்காக சென்ற ஐன்ஸ்டீன் அங்கு இவரை போலவே மேத்ஸ் , பிசிக்ஸ் விரும்பிப் படிக்கின்ற மிலோவா என்கிற பெண்ணை திருமணம் செய்கிறார். இருவரும் ஆசிரியர்களாக வரவேண்டும் என்பது அவர்களின் கனவு ஆனால் இறுதியில் ஐன்ஸ்டீன் ஒரு கிளார்க்காக ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறார்.
மிகப்பெரிய விஞ்ஞானியான ஐன்ஸ்டீனுடைய முதல் வேலை கிளார்க். பின்னர் 24 வயதிலேயே 4 Theory களை முன்வைக்கிறார். இதனை இவர் சார்ந்த விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன் இவரின் கண்டுபிடிப்புகளையும் மதிக்கவில்லை. இந்த கண்டுபிடிப்புகளுக்கு இவரின் மனைவி பெரும் பக்கபலமாக இருக்கிறார். ஆனால் ஐன்ஸ்டீன் மனைவியை ஒருபோதும் கவனிப்பதில்லை. ஒரு சாதாரண பெண்ணாக வீட்டையும் தன்னையும் குழந்தைகளையும் கவனிக்கும் ஒருவராகவே நடத்தி இருக்கிறார்.
இந்த காரணங்களால் இருவருக்கும் விவாகரத்தாகி அதன் பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் ஐன்ஸ்டீன். இப்படி இருக்கையில் முதலாவது உலகப் போர் வருகிறது. அதில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருக்கிறார். இது போல இரண்டாவது உலகப் போரிலும் நியுகிளியர் வெடிகுண்டு தயாரிப்பதற்கு அமெரிக்காவிற்கு சப்போர்ட்டாக இருக்கிறார். இதனால் கோபமடைந்த ஜெர்மனி ஐன்ஸ்டீன் ஜெர்மன் வந்தால் அவருடைய தலையை கொண்டு வருபவருக்கு 5000 டொலர் பரிசு எனவும் அறிவித்தது.
பின்னர் 1920 ஆம் ஆண்டு இவருடைய கண்டுபிடிப்புகளுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசும் ஐன்ஸ்டீனுக்கு கிடைக்கிறது. இந்த நோபல் பரிசு தனக்கும் உரித்தானது என அறிவிக்குமாறு இவருடைய முதல் மனைவியான மிலோவா ஐன்ஸ்டீனை கேட்கின்றார். அவ்வாறு முடியாது என மறுத்த ஐன்ஸ்டீன் அந்த நோபல் பரிசில் வந்த பணத்தை தனக்கு தருமாறு மிலோவா கேட்க அந்த பணத்தை அவருக்கே கொடுத்துவிடுகிறார்.
இப்பேர்பட்ட மிகப்பெரிய விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் அவருடைய இறுதிக் காலத்தில் அடுத்த ஜென்மத்தில் நீங்கள் என்னவாக இருக்க ஆசைப் படுகிறீர்கள் என்று கேட்டதற்கு தான் ஒரு ப்ளம்பராக இருக்க ஆசைப்படுகிறேன் என்று பதில் கூறியிருக்கிறார் . ஜெர்மனியில் ஐன்ஸ்டீன் வாழ்ந்த காலத்தில் ப்ளம்பருக்கே அதிக சம்பளம்.
ஆனாலும் இப்பேர்ப்பட்ட மிகப்பெரிய நோபல் பரிசு வென்ற அறிவியல் விஞ்ஞானி தான் அடுத்த ஜென்மத்தில் ப்ளம்பராக இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறுகிறார் என்றால் அவரது வாழ்க்கையில் அவர் எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பார். ஐன்ஸ்டீன் தனது வாழ்க்கைக் காலத்தில் தன்னுடைய புரோபஷனல் வாழ்க்கைக்கு கொடுத்த முக்கியத்தை அவருடைய பர்சனல் லைப்பிற்கு கொடுக்கவில்லை இதனால் குடும்பத்தில் புரிந்துணர்வு இல்லாமல் போய் விவாகரத்து வரை போய் விட்டது .