"நவராத்திரி" ஆரம்பம். இக்காலத்தில் "நவராத்திரி விரதம்" மேற்கொள்ளும் முறைகளை பற்றி தெரிந்து கொள்வோமா.?
நாளை "நவராத்திரி" ஆரம்பம். இக்காலத்தில் "நவராத்திரி விரதம்" மேற்கொள்ளும் முறைகளை பற்றி தெரிந்து கொள்வோமா.?புராண காலத்தில் மகிஷாசுரன் என்கிற அரக்கன் பூலோகம் மட்டுமல்லாது தேவலோகத்தையும் கைப்பற்றி பல அராஜகங்களை செய்து வந்தான். அவனது அக்கிரமங்களை பொறுக்க முடியாத தேவர்கள் சக்தியாகிய அன்னை பார்வதியிடம் முறையிட்டனர். இதையடுத்து துர்க்கை அம்மன் வடிவெடுத்த பார்வதி தேவி மகிஷாசுரனுடன் 9 நாட்கள் போரிட்டு, அவனை துர்க்கை வதம் புரிந்ததை நவராத்திரி விழாவாக அனைவரும் கொண்டாடுகின்றனர். தீமைகளை எப்போதும் இறைசக்தி வெல்லும் என்பதை குறிக்கும் விழாவாக நவராத்திரி விழா இருக்கிறது.தெய்வீக தன்மை வாய்ந்த இந்த ஒன்பது தினங்களாகிய நவராத்திரி விழாவின் மகிமை குறித்தும், அப்போது அனுஷ்டிக்க வேண்டிய “நவராத்திரி விரதம்” குறித்து இங்கு விரிவாக அறிந்து கொள்ளலாம்.நவராத்திரி எனப்படும் இந்த ஒன்பது தினங்களும் புனித vதினங்களாகும். இந்த 9 நாட்களும் பெண் தெய்வங்களுக்கு விரதமிருந்து வழிபடுவதை நவராத்திரி விரதம் என அழைக்கின்றனர். இராமாயணத்தில் “ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியும்”, “மகாபாரதத்தில்” பஞ்ச பாண்டவர்களும் இந்த நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து தங்களின் எதிரிகளை வென்று, தாங்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்றனர். இந்த விரதத்தை நாம் மேற்கொள்வதால் நமது கர்ம வினைகள் நீங்கும், பொருளாதார கஷ்டங்கள், கடன் பிரச்சனைகள், உடல்நல பாதிப்புகள், குழந்தை sபேறில்லாமை, திருமண தாமதம் போன்ற அனைத்தும் எல்லாமாக இருக்கும் அன்னையின் அருளால் நிச்சயம் நீங்கும்.நவராத்திரி ஆரம்பிக்கும் முதல் தினம் தொடங்கி 9 நாட்களும் காலை 9 மணிக்குள்ளாக குளித்து விட வேண்டும். பூஜையறையில் சென்று “சரஸ்வதி, லட்சுமி” போன்ற பெண் தெய்வங்களின் படத்திற்கு பூக்களை சமர்ப்பித்து, கற்கண்டு பழம் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து அப்பெண் தெய்வங்களுக்குரிய மந்திரங்களை கூறிவனங்க வேண்டும் உடலில் எந்த விதமான நோய், நொடி பாதிப்பும் இல்லாதவர்கள் இந்த 9 நாட்களும் திட உணவுகளை தவிர்த்து, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றோடு பழ சாறுகளை மட்டும் அருந்தி விரதம் இருக்க வேண்டும். இந்த விரத முறை கடுமையாக இருப்பதாக கருதுபவர்கள் mஒரு வேளை திட உணவையாவது தவிர்த்து பருப்புகள், நீராகாரம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.இந்த 9 நாள் விரத காலத்திலும் முடி, நகங்கள் வெட்டுவது போன்றவை கூடாது. பிறர் வீடுகளில் தங்க கூடாது. வீட்டை முடிந்த வரை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மது, புகைபிடித்தல், புலால் உணவுகளை அறவே நீக்க வேண்டும். மனதை எல்லாவித கவலைகள், வருத்தங்கள் போன்றவற்றிலிருந்து விலக்கி சக்தி தேவியை மட்டுமே தியானிக்க வேண்டும். இந்த 9 நாள் காலத்திலும் ஏழை பெண்களுக்கு உங்களால் முடிந்த தான தர்மங்களை செய்வது இந்த விரதத்தின் பலனை மேலும் அதிகரிக்கும். இறுதி நாளான 9 ஆம் தினம் 3 கன்னிகைகளுக்கு அன்னதானம் அளித்து, ரவிக்கை துண்டு, பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி, சீப்பு போன்ற சீர்வரிசை அளிக்க வேண்டும். இந்த தானம் உங்கள் குடும்பத்திற்கு அல்லது பரம்பரைக்கு பெண் சாபம் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் அதை போக்கும். மிகுந்த பலனளிக்கும் இந்த நவராத்திரி விரதத்தை குழந்தைகள், நோயாளிகள், முதியோர்கள் தவிர்த்து ஆண் – பெண் பேதமின்றி அனைவரும் மேற்கொள்ளலாம்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·