- · 17 friends
-
S
தனுஷ் - மாளவிகா மோகனன் நடிக்க உள்ள புதிய படம்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடிக்க உள்ள புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம்வரும் தனுஷ், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்துள்ள கர்ணன், ஜகமே தந்திரம் போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்காக காத்திருக்கின்றன.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். அதேபோல் பிரபல பாடலாசிரியர் விவேக் இப்படத்தில் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி உள்ளார். இந்நிலையில், தனுஷ் நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்க உள்ளார்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·