·   ·  194 posts
  •  ·  1 friends
  • 1 followers

உழைப்பின் பலன்

மன்னர் ஒரு முறை கிராமங்களை சுற்றிப் பார்க்க குதிரையில் கிளம்பிச் சென்றார்.

அப்போது வயலில் ஒரே ஒரு பெண் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். மன்னர் அவரிடம், ”மற்றவர்கள் எல்லாம் எங்கே?” என்று கேட்க, விசாரிப்பது மன்னர் என்பதை அறியாத அந்த பெண், ”அவர்கள் எல்லாம் மன்னரைப் பார்க்கப் போயிருக்கிறார்கள்,” என்று சொன்னார்.

”அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் போகவில்லை?” என்று மன்னர் கேட்டார்.

அதற்கு அந்தப் பெண், ”மன்னரைப் பார்ப்பதற்காக ஒருநாள் கூலியை இழக்கும் அளவிற்கு நான் முட்டாள் இல்லை. எனக்கு ஐந்து குழந்தைகள் அவர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது. அதனால் தான் போகவில்லை,” என்றாள்.

மன்னர் அவரது கையில் சில நூறு பவுண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு, ”உங்களது நண்பர்களிடம் சொல்லுங்கள். நீங்கள் எல்லாம் மன்னரைப் பார்க்க சென்றீர்கள். ஆனால் மன்னரோ என்னைப் பார்க்க வந்தார் என்று..” என கூறிவிட்டு சென்றார்.

உழைப்பின் பலன் உயர்வு தான். எதையும் தேடி செல்லாதே தகுதி இருந்தால் எல்லாம் உன்னை தேடி வரும்.

  • 20
  • More
Comments (0)
Login or Join to comment.