·   ·  984 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

60 வயதுக்கு மேல் உள்ள நண்பர்களுக்கு மட்டும் ஒரு சில முன் எச்சரிக்கைகள்.

சுவற்றில்  ஒட்டடை அடிக்கிறேன், ஆணி அடிக்கிறேன், மேலே அலமாரியில், பரணில் ஏதோ தேடி எடுக்கிறேன் என்று ஒரு நாற்காலி, ஸ்டூல் மேலே ஏறினால்  கீழே விழ  நூற்றுக்கு ஆயிரம் மடங்கு வாய்ப்பு அதிகம். கால்களை நம்பாதீர்கள். அப்புறம்  எதிலும் ஏற முடியாது. ஜாக்கிரதை.

மாடிப்படி ஏறும்போது கைப்பிடியை பிடித்துக்கொண்டு  ஒவ்வொரு படியிலும் ரெண்டு காலை வைத்து ஏறுங்கள். மேலே பார்க்காமல் படியை ஒவ்வொன்றாக பார்த்து நடுப்படியில் காலை வையுங்கள். ஓரத்தில் வேண்டாம்.

டக்கென்று  பின்னால்  திரும்பி பார்க்காதீர்கள்.  அந்த காலம் மலையேறிவிட்டது. உடம்பையே திருப்பி பாருங்கள் அல்லது மெதுவாக தலையை திருப்புங்கள்.   டாக்டர்  காத்திருக்கிறார் எப்போது நீங்கள் வருவீர்கள் என்று. ஜாக்கிரதை.

பெரிய கால் நகத்தையோ,  ஐந்து விரலும் இருக்கிறதா என்று சோதிக்கவோ,  உடனே குனிந்து பார்க்க என்ன அவசரம்? . மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக குனியுங்கள்.  குப்புற தள்ளிவிடும்.ஜாக்கிரதை.

உள்  ஆடை, பேண்ட் அணிகிறேன் என்று நின்றுகொண்டே ஒரு காலை தூக்காதீர்கள். உங்களை தூக்க ஆள் வேண்டியிருக்கும். எங்காவது சௌகர்யமாக  உட்கார்ந்து கொண்டு  ஒவ்வொரு காலாக நுழைத்துக் கொள்ளுங்கள் .

மல்லாக்க படுத்து அப்படியே ஸ்ப்ரிங் மாதிரி எழுந்திருக்காதீர்கள்.  இடதோ வலதோ பக்கம் திரும்பி மெதுவாக படுக்கையை விடுங்கள்.

சினிமாவில், டிவியில்  வாட்ஸாப்ப்  முகநூலில் யாரோ செயகிறார்களே என்று உடல் பயிற்சி செய்கிறேன் என்று கையை காலை உடம்பை திருகி முறுக்கிக்  கொள்ளாதீர்கள். இப்போது உங்கள் எலும்புகள்  பிஸ்கட் பாக்கெட் போல நொறுங்கிவிடும்.  உங்கள் பர்ஸ்  சுளுக்கெடுத்துவிடும்  ஜாக்கிரதை.

பக்கெட்டில் தண்ணீர் பிடிக்கிறேன் என்று இடுப்பு குனிய  கனமான வஸ்துவை தூக்காதீர்கள்.  முழங்காலை  மடக்கி தூக்க முடிந்தால் நீங்கள் கெட்டிக்காரர். பிழைக்க தெரிந்தவர்.

நீங்கள் தான்  ஆபிசுக்கு , வேலைக்கு இப்போது போக வேண்டாமே .  எந்த  பஸ், ட்ரெயின்  பிடிக்க விருட்டென்று படுக்கையை விட்டு எழுந்து ஓடுகிறாய்?    ஐந்தாறு நிமிஷங்கள் அப்படி இப்படி புரண்டு விட்டு ஒருபக்கமாக மெதுவாக எழுந்திருங்கள்.

இத்தனை வருஷம் பிறருக்காக உழைத்த நீங்கள்  இனி உங்களுக்காக எஞ்சிய சில வருஷங்களை  வாழ முயற்சி செய்யுங்கள். பரோபகாரமாக ஏதாவது தினமும் செய்யுங்கள். 

கடைசியாக  ஒரே ஒரு வார்த்தை. நீங்கள் ஆரோக்யமாக இருப்பதாகவே உங்களை உணர்ந்துகொண்டு செயல்படுங்கள். மரணம் உங்கள் அருகில் இல்லவே இல்லை.  அதன் கைக்கெட்டும் தூரத்தில் தான்  நாம் எல்லோரும் எப்போதும்  இருக்கிறோம். அது அணைக்கும் நேரத்தில் நம்மை அதுவே வந்து அணைத்துக் கொள்ளட்டும்.    அதுவரை அற்புதமாக வாழ்வோம் !"

வாழ்க  நலமுடன்.

  • 303
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்