- · 1 friends
-

எது வெற்றி?
ஓட்டலுக்கு போன் பண்ணி 2 ஆயிரம் ரூபாய்க்கு கேஷ் ஆன் டெலிவரியில ஆர்டர் பண்ண பொண்ணு ஒருத்தி, கரெக்ட்டா வெயிட் பண்ணி சமைச்சி முடிச்சதும் கேன்சல் பண்ணிட்டா. நொந்து போன ஓட்டல் முதலாளி மறுநாள் அவளுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினாரு:
அன்புள்ள எவ்லின்,
நேத்து ராத்திரி ஒரு பெரிய ஆர்டர் குடுத்துட்டு கேன்சல் பண்ணிட்டு வந்து வாங்கிக்கவே இல்ல. போனையும் ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டீங்க. உங்களுக்காக ரொம்ப நேரம் சமையல் பண்ணி மளிகை காய்கறிக்கெல்லாம் செலவு பண்ணி மனசு வருத்தமா போச்சு. எங்க ஓட்டல் கொள்கையே "வெற்றி இங்கே" அப்படிங்குறதுதான்.
So, நீங்க எங்களுக்கு பண்ணதை மறந்து உங்களுக்கும் வெற்றி வந்து குவியட்டும்னு வாழ்த்தறோம். அப்பயாவது இனி வேறெங்கும் இந்த விளையாட்டை ஆட மாட்டீங்கன்னு நம்பறோம். உங்களால நேத்து இரவு ஒரு அருமையான மகிழ்ச்சியான இரவா மாறுச்சு. ஏன்னா, ராபின்ங்குறவரு ஓட்டலுக்கு வந்து செஞ்ச காரியம் இருக்கே... அது வெற்றின்னா என்னன்னு புரிய வெச்சுது. உங்களுக்காக நேத்து காத்திருந்த நேரத்துல ராபின் ஓட்டலுக்கு வந்தாரு. சாப்பிட எதாவது கிடைக்குமா? என்னை நம்பி வீட்ல ரெண்டு சின்ன வயசு பேத்திங்க சாப்பாட்டுக்காக காத்துகிட்டு இருக்காங்கன்னு சொன்னாரு. அவரு ஆக்சுவலா போன
1 ஆம் தேதிதான் வேலைக்கு சேர்ந்திருக்காரு. இன்னும் அவருக்கு சம்பளம் வரல. ஆனா, நேத்து ராத்திரி பேத்திங்களுக்கு சாப்பாடு கொண்டு போகணும். எதாவது வேலை இருந்தா குடுங்கன்னு கேட்டாரு. இதைக் கேட்டதும் கண்ணு கலங்கி போச்சும்மா. உடனே துளிக் கூட தயங்காம நீ வாங்காம விட்ட உணவுகளை அப்படியே அவருக்கு குடுத்துட்டேன். நான் வேணா என் மொபைலை அடமானமா தர்றேன். சம்பளம் வந்ததும் திரும்பி வாங்குகிறேன்னு சொன்னாரு. ஆனா, நான் வாங்கிக்கல. அது மட்டுமில்லாம அடுத்து ஒரு மாசத்துக்கு வேண்டிய ஒட்டு மொத்த மளிகை சாமானையும் அவருக்கு குடுத்து விட்டேன். அம்மா அப்பா இல்லாத பேத்திங்களுக்காக வாழற அந்த உழைப்பாளிக்கு நான் உதவ முடிஞ்சது உன்னாலதான் எவ்லின். அவரு முகத்துல மலர்ந்த அந்த சந்தோஷம் இருக்கே... கோடி ரூபாய் குடுத்தாலும் பாக்க முடியாது எவ்லின. என்னை பொறுத்த வரை அதுதான் வெற்றி
எவ்லின். உனக்கு நன்றி.