Support Ads
 ·   ·  984 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ஆசியாவிலேயே பெரிய அன்னதான கூடம்

திருமலையில் நித்ய அன்னதானம் மிகச்சிறப்பாக கோடானு கோடி பக்தர்களுக்கு வயிறார சாப்பாடு போடப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் பக்தர்கள் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய நிலை ஏனெனில் முன் பந்தியில் குறைந்த அளவே மக்கள் அமர்ந்து சாப்பிடும் அளவில் மண்டபம் அமைந்து இருந்தது.
நம் கருணைக்கடல் திருவேங்கடவன் மெய் சிலிர்க்கும் ஓர் அற்புத நாடகத்தை நடத்தினார்.
ஒருநாள் மதியம் 2.00 மணி அளவில் திருமலை E.O அலுவலகத்திற்கு ஒருவர் வந்தார் .
அங்கிருந்த உதவி செயலாட்சி தலைவரிடம்இ அய்யா ஒரு வேண்டுகோள், இங்கு ஸ்ரீனிவாசனை தரிசனம் செய்த பக்தர்கள் அன்னதான கூடத்தில் நீண்ட நேரம் காத்து இருக்கிறார்களே கொஞ்சம் பெரிய மண்டபம் இருந்தால் இன்னும் நிறைய பேர் சாப்பிட முடியும் அல்லவா என்று கூறினார். அதற்கு அவர் நீங்கள் வரிசையில் நின்று சாப்பிட முடிந்தால் சாப்பிடலாம் இல்லை என்றால் செல்லுங்கள் என்று சற்று கோபத்துடன் கூறினார். ஐயையோ ! நான் எனக்காக சொல்லவில்லை ஸ்ரீனிவாசனின் பக்தர்களுக்காகத்தான் கூறினேன் என்றார். அப்படி என்றால் நீங்களே ஒரு மண்டபம் கட்டி கொடுங்கள் அதில் நீங்கள் சொன்னபடி சாப்பாடு போடலாம் என்றார்.
உடனே அந்த பக்தர் சரி புதிய அன்னதான கூடம் கட்டுவதற்கு என்ன செலவு ஆகும் என்றார். அந்த அதிகாரி மிகுந்த கோபத்துடன் ஓஹோ அப்படியா ஒரு 25 கோடி கொடுங்கள் பெருசா மண்டபம் கட்டி உங்கள் பெயரிலேயே சாப்பாடு போடலாம் போய் வேலைய பாருங்க சார் என்றார். உடனே அந்த பக்தர் தான் வைத்திருந்த கைப் பையில் இருந்த காசோலை புத்தகத்தை எடுத்து 25 கோடிக்கு ஒரே காசோலையாக திருமலை தேவஸ்தானத்தின் பெயரில் எழுதி அந்த அதிகாரியிடம் கொடுத்தார்.
ஆனால் அந்த உதவி செயலாட்சி தலைவர் வாயடைத்து போய் மிகுந்த அதிர்சியுடன் வேர்த்து விருவிருக்க விரைந்து சென்றுசெயலாட்சி தலைவரை அழைத்து வந்து நடந்தவற்றை கூறினார்.அவரும் ஆடிப்போனார். 
பின்னர் தாங்கள் யார் என்று மிகுந்த மரியாதையுடன் அவரை அமர வைத்து கேட்டார்.அவர் அய்யா நான் ஆரம்ப காலத்தில் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் ஒரு வேலை சாப்பாட்டுக்கே கஷ்டபட்ட குடும்பம். அப்படி இருந்தும் எழுமலை ஆண்டவன் மீது மிகுந்த பாசத்துடன் பக்தியும் வைத்து இருந்தேன் .
திருமலைக்கு ஒவ்வொரு முறையும் நடந்தே வருவேன் தர்ம தரிசனத்தில்எவ்வளவு நேரம் ஆனாலும் என் அப்பன் ஏழுமலையானை பொறுமையுடன்தரிசனம் செய்து, எனக்கு ஒருவழி காட்டி நேர்மையுடன் நான் வாழ ஒரு தொழில் வேண்டும் அதில் உனக்கு லாபத்தில் சரி பாதி உன்னிடம் சேர்க்கிறேன் தந்தையே என்று வேண்டி பின்னர் இலவச சாப்பாடு வரிசையில் நின்று என் வயிறார நான் சாப்பிட்டு செல்வேன்.
பின்னர் நடைபாதை வழியாக மலையிறங்கி வீட்டிற்கு செல்வேன்.நாட்கள் செல்ல செல்ல பின்னர் என் தொழில் வளர்ச்சி அடைந்து இன்று மிகப்பெரிய செல்வந்தனாக இருந்தாலும் இது எல்லாம் என் அப்பன் எழுமலையான் சொத்து.
இன்று வரை நான் தனியாகவே ஒவ்வொரு முறையும் நடந்தே மலைக்கு வந்து தர்மதரிசனத்தில் நின்று தரிசனம் செய்து அவருக்கு சேர வேண்டிய பங்கை உண்டியில் போட்டு விட்டு அன்னதான கூடத்தில் வரிசையில் நின்று ஆனந்தமாய் சாப்பாடு சாப்பிட்டு விட்டு செல்வேன் .
நீங்கள் பலமுறை தினசரி பத்திரிக்கையில் அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் உண்டியலில் இரண்டு கோடி ,மூன்று கோடி ஒரே பண்டிலாக போட்டுள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ளீர்கள் .
அதை நான் தான் போட்டேன் . ஏனென்றால் இதை தேவஸ்தான அதிகாரி வாயிலாக கொடுத்திருந்தால் என்னை மிகுந்த மரியாதை செய்து சிறப்பு தரிசனம் அளித்திருப்பார்கள். ஆனால் அதை நான் விரும்ப வில்லை . எந்த சூழ் நிலையிலும் என்னுடைய தந்தைக்கும் எனக்கும் உள்ள அந்த ஆரம்ப கால நினைவுகள் மாறிவிடக்கூடாது . இந்த பணம் என்னை என் பழைய வாழ்க்கையை மாற்றினாலும் நான் என்னுடைய நன்றியை மறக்காமல் இன்றும் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன் நான் எப்படி திருமலைக்கு வந்தேனோ அதை போலவே இன்றும் நடந்தே வந்து நடந்தே செல்கிறேன் .
என் நண்பர்களையோ என் உறவினர்களையோ நான் அழைத்து வந்தால்அவர்கள் எண்ணப்படி நான் மாற வேண்டும் .இவ்வளவு வசதி இருந்தும் நடந்து செல்வதா , தர்ம தரிசனத்தில் காத்து இருப்பதா இலவச சாப்பாட்டிற்காக வரிசையில் நிற்பதா என்று புலம்பி தள்ளுவார்கள்.அதனால் தான் எப்பொழுதும் தனியாகவே வருவேன் .இன்று தரிசனம் முடிந்து அன்னதான கூடத்தில் வரிசையில் நிற்கும் போது
நிறைய பேர் வரிசையில் காத்து நிற்பதை பார்த்து இன்று திடீரெனஎன் மனதில் இதை விட பெரிய மண்டபம் இருந்தால் ஒரே நேரத்தில் நிறைய பக்தர்கள் அமர்ந்து சாப்பிட முடியும் அல்லவா?
இந்த எண்ணத்தை என்னில் உருவாக்கியதும் என் தந்தை திருவேங்கடவன் தான் .அவர் சொல்ல சொல்ல அவரை சுற்றி இருந்த அதிகாரிகளின் கண்களில்நீர் அருவியாய் பெருகி பெருமாளின் லீலைகளையும் ,அவர் பக்தரின் பக்தியையும் பார்த்து வாயடைத்து அமைதியாய் நின்றிருந்தனர் .
அந்த அறையில் மின் விசிறியின் சப்தம் மட்டுமே இருந்தது.பின்பு தான் அவர் ஆந்திரமாநிலத்தில் ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று அறிந்து ஆச்சர்யத்துடன் அவரிடம் உங்கள் விருப்ப படி புதிய அன்னதான கூடம் கட்டி உங்கள் பெயரையே அதற்கு வைத்து விடலாம் என்றனர்.வேண்டாம்! வேண்டாம் ! சாதாரண ஏழை என்னை செல்வந்தனாக வாழவைத்தது இந்த திருமலை அப்பனே இந்த பணம் என்னுடையதல்ல எழுமலையானுக்கு சொந்தமானது.தேவஸ்தானம் விரும்பும் பெயரில் நடக்கட்டும் என்றதும்,அதிகாரிகள் மெய்சிலிர்த்து போனார்கள்.ஒரே வருடத்தில் கட்டப்பட்ட இந்த புதிய அன்னதான கூடம்ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு கட்டப்பட்டு அதற்கு "மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா" அன்னதான கூடம் என்று பெயரிடப்பட்டு உள்ளது . 
இது ஆசியாவிலேயே பெரிய அன்னதான கூடமாகும்.
  • 419
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்