- · 6 friends
-
மேற்குலகின் சிம்மசொப்பனம் விளாடிமிர் புடின்!
மேற்குலக நாடுகளின் கொள்கைகளை எதிர்த்து ரஷ்யாவின் பாரம்பரிய கிறிஸ்தவக் கலாச்சாரத்தைக் காப்பவராகவும்,ரஷ்யாவின் மாபெரும் பாதுகாவலராகவும்,தன்னை முன்னிறுத்தி கொண்டுள்ள ரஷ்யாவின் நிரந்தர அதிபர் தான் விளாடிமிர் புடின்!இரண்டாம் உலகப்போருக்கு சரியாக ஏழு ஆண்டுகளுக்குப் பின் அக்டோபர் 7,1952ம் ஆண்டு Vladimir Spiridonovich Putin, Maria Ivanovna Shelomova தம்பதிகளின் மூன்றாவது மகனாக பிறந்தார் புடின்.
புட்டினின் தாத்தா லெனினிடம் சமையல்காரராக கடமையாற்றியவர்.தந்தை ராணுவத்திலும், தாயார் தொழிற்சாலையிலும் பணியாற்றினர்.
“The Shield and the Sword” என்கிற திரைப்படத்தில் வரும் உளவாளிக் கதாபாத்திரத்தால் கவரப்பட்டு தானும் ஒரு உளவாளியாக வேண்டும் என தீர்மானித்தார்.சட்டம் பயின்று முடித்தவுடன் 1975ஆம் ஆண்டு ரஷ்யாவின் உளவுத்துறையான KGB அலுவலகத்தில் பணியாற்ற தொடங்கினார்.
இன்று விளாடிமிர் புடின் ஓர் அசைக்கமுடியாத சக்தியாக விளங்குவதற்கு இந்த அமைப்பிடம் கற்ற பாடமே அடிப்படை.1991ல் சோவியத் உடைவுக்குப்பின்னர் அவரது பார்வை அரசியலை நோக்கி திரும்பவே மேயர் அலுவலகத்தின் வெளியுறவு அமைச்சகத்தின் தலைவராக பணியமர்த்தப்பட்டார்.
அரசியலில் படிப்படியாக உயர்வுகண்ட புடின் 2000ம் ஆண்டு ரஷ்யாவின் ஜனாதிபதியானார்.அன்று முதல் இன்று வரை ரஷ்யாவின் நிரந்தர அதிபர் என கூறிக்கொள்ளும் அளவிற்கு தன்னை உயர்த்திகொண்டார்.
அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகளின் தலையீடுகளை விரும்பாத புடின் எப்பொழுதும் தன்னிச்சையாக செற்படுவதையே விரும்பினார்.அதன் விளைவுகளில் ஒன்றுதான் யுக்ரேன் மீதான படையெடுப்பு.
மேற்குலக நாடுகளின் கைப்பாவையாக யுக்ரேன் செயற்படுதல்,NATO நாடுகளுடனான இணைவு போன்ற காரணிகளை சுட்டிகாட்டி,வருங்காலத்தில் மேற்குலக நாடுகள் ரஷ்யாவை தாக்குவதற்கு யுக்ரெனை பகடை காயாக பயன்படுத்தலாம் என்பதினாலேயே யுக்ரேன் மீது தாம் படையெடுப்பதாக அறிவித்துள்ளார்
“வெளியிலிருந்து வேறு யாரேனும் இந்த போர்தொடுப்பு விவகாரத்தில் தலையிட்டால் வரலாற்றில் இது வரை சந்தித்திராத பாரிய விளைவுகளை சந்திப்பீர்கள்” என முழு உலகத்திற்கும் பகிரங்கமாக சவால் விடுத்துள்ள பலே கில்லாடி தான் இந்த விளாடிமிர் புடின்!
உலக நாடுகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டம் காட்டிகொண்டிருக்கும் புடின், யுக்ரேனுக்கு எதிரான இந்த யுத்தத்தில் மட்டும் வெற்றி பெற்றுவிட்டாரெனில் லெனினை போல,ஸ்டாலினை போல ரஷ்யாவின் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்துவிடுவார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
படித்ததில் பிடித்தது.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·