- · 6 friends
- · 6 followers

மிரள வைக்கும் பீட்ஸா 3 தி மம்மி
பீட்ஸா திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தைத் தயாரிக்கவுள்ளதாக அறிவித்திருந்த சி.வி.குமார், அதன் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளார். 2012 ல் சி.வி.குமார் தயாரிப்பில் வெளியான பீட்ஸா திரைப்படம் அறிமுக இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் க்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. அடுத்த ஆண்டே பீட்ஸா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வில்லா என்ற பெயரில் இயக்குனர் தீபன் சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்தது. இந்த படம் முந்தைய பாகம் போல் வரவேற்பு கிடைக்காமல் தோல்வி படமாகவே அமைந்தது.
அதன்பின் 7 வருடம் கழித்து பீட்ஸா திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தைத் தயாரிக்கவுள்ளதாக தயாரிப்பாளர் சி.வி.குமார் அறிவித்திருந்தார். அந்த படத்திற்கு பீட்ஸா 3: தி மம்மி என்று பெயரிடப்பட்டது. பீட்சா படத்தின் மூன்றாவது பாகத்தில் பிரபல நடிகர் அஸ்வின் குமார் என்பவர் நடித்துள்ளார். இவர் தல அஜித் நடித்த வேதாளம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்குகிறார். அஷ்வின், காளி வெங்கட், ரவீனா தாஹா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை, கார்த்திக் சுப்பராஜ், பா ரஞ்ஜித், ராம் குமார் ஆகிய இயக்குநர்கள் வெளியிட்டனர். இந்நிலையில் பீட்ஸா 3 தி மம்மி படத்தின் முன்னோட்ட காட்சியை சி.வி குமார் வெளியிட்டார்.

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga
- ·
- · TamilPoonga
- · TamilNadu
- · 144 views
- ·
- · TamilPoonga
- · Sri Lanka News
- · 291 views
- ·
- · TamilPoonga
- · தாயகம் செய்திகள்
- · 254 views
- ·
- · TamilPoonga
- · Sri Lanka News
- · 182 views
- ·
- · TamilPoonga
- · தாயகம் செய்திகள்
- · 234 views