·   ·  1015 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுநோய் செல்களை தடுக்கும். 

மஞ்சள் பாலில் சேர்க்கப்படும், ஏலக்காய், மிளகு, ஆகியவை செரி மானத்தை எளிதாக்குகிறது. உடலில் பித்த உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம்  செரிமான கோளாறுகளை நீக்குகிறது. மஞ்சள் பாலில் சேர்க்கப்படும் இஞ்சி மற்றும் பிற பொருட்கள் உடலில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி குடல் இயக்கத்தைத் தூண்டுகிறது. மஞ்சளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் செரிமான அமைப்பை சீராக வைக்கும்.

இரத்தத்தை சுத்திகரிக்கிறது

இரவில் ஒரு கிளாஸ் சூடான பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது உடலில் இருந்து அனைத்து நச்சுகளையும் வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும் உதவுகிறது.

மூட்டு வலி குறையும்

மஞ்சளில் உள்ள குர்குமின் வீக்கம் மற்றும் மூட்டு வலியையும் எதிர்த்துப் போராட உதவுகிறது. கீல்வாதம் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மஞ்சள் பால் குடிப்பது பயன் தரும். பாலில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது. எனவே மஞ்சள் பால் எலும்பு வலியைக் குறைப்பதில் மட்டுமல்லாமல் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

நரம்பு மண்டலம்

மஞ்சள் பாலில் சேர்க்கப்படும் ஏலக்காய், மஞ்சள் ஆகியவை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி தூக்கமின்மை மற்றும் பதட்டத்தை குறைக்கின்றது.

நன்றாக தூங்க உதவுகிறது

படுக்கை நேரத்தில் மஞ்சள் பால் குடிப்பது  தூக்கமின்மையால் போராடுபவர்களுக்கு நன்மை கிடைக்கும். தூக்கத்தைத் தூண்டும் அமினோ அமிலமான டிரிப்டோபான் பாலில் உள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமின்  மன அழுத்தத்தை குறைத்து  இரவு தூக்கத்தை எளிதாக்குகிறது. நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு ஒரு கிளாஸ் சூடான மஞ்சள் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு ஏலக்காய் தூள் கலந்து குடித்தால் தூக்கம் உங்கள் கண்களை தழுவும்.

மாதவிடாய் பிடிப்பை நீக்குகிறது

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் பிடிப்பை அனுபவிக்கும் பெண்களுக்கு, மஞ்சள் பால் பயனளிக்கும், மஞ்சள் ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகளை கொண்டுள்ளதால் இது மாதவிடாய்   வலியையும் தீவிரத்தையும் குறைக்க உதவுகிறது.  மாதவிடாய் தொடங்கும் சில நாட்களுக்கு முன்பு  மஞ்சள் பாலை குடிக்கத் தொடங்க பரிந்துரைக்கப்படுகிறது.

மஞ்சள் பால் செய்வது எப்படி?

ஒரு கப் பால் எடுத்து ஒரு கொதிக்க  வைக்கவும். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் சிறிது சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்க்கவும். நீங்கள் தூங்குவதற்கு சற்று முன்பு அதை சூடாகவோ குடிக்கவும். மஞ்சள் பாலில்  ஒரு சிட்டிகை கருப்பு மிளகு தூள் சேர்ப்பது  தொண்டை புண் மற்றும் தொற்றுநோய்களை தடுக்க உதவும்.

  • 660
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்