Support Ads
Main Menu
 ·   · 284 posts
 •  · 2 friends
 •  · 6 followers

கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது

அன்பர்கள் நண்பர்களிடம் விசாரித்தேன் . 


ஊர் எல்லையில் உள்ள மலைமீது இருக்கிறார் கடவுள் என்று தகவல் கிடைத்தது . 


வெறுங்கையோடு போகாதே ! 

ஏதாவது கொண்டு போ என்றார்கள் .


இருந்ததை எடுத்து கொண்டு கிளம்பினேன் . 


மலையை பார்த்து , மலைத்து நின்றேன் , மலை அடிவாரத்தில் ! 


ரொம்ப உயரம் போலவே ! 

ஏற முடியுமா என்னால் ? ! ? ! 


மலையைச் சுற்றிலும் பல வழிகள் ! 

மேலே போவதற்கு . . . 


அமைதி வழி , 

ஆடம்பர வழி , 

பக்தி வழி , 

தியான வழி , 

சாஸ்திர வழி , 

சம்பிரதாய வழி , 

வழிபாடு வழி , 

மந்திர வழி , 

தந்திர வழி , 

கட்டண வழி , 

கடின வழி , 

சுலப வழி , 

குறுக்கு வழி , 

துரித வழி , 

சிபாரிசு வழி , 

பொது வழி , 

பழைய வழி , 

புதிய வழி , 


இன்னும் , இன்னும் , கணக்கிலடங்காத வழிகள் . . . 


அடேயப்பா !   

எத்தனை வழிகள் ! 


ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி ! 


கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள் ! 


என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை !  ஒதுக்கினர் சிலர் . 


நான் கூட்டிப் போகிறேன் வா ! 

கட்டணம் தேவையில்லை . 

என் வழியி்ல் ஏறினால் போதும் . 

எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு ! 

என கை பிடித்து இழுத்தனர் சிலர் ! 


மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம் , 

உனக்கு பதில் நான் போகிறேன் , 

கட்டணம் மட்டும் செலுத்து ! 

என்றனர் சிலர் . 


பார்க்கணும் அவ்ளோதானே ! 

இங்கேயிருந்து காட்டுகிறேன் பார் ! 

அது போதும் . . . 

அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும் ! 

ஆணவத்துடன் சிலர் .


அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது . 

உன்னால் ஏறமுடியாது . 

தூரம் அதிகம் . திரும்பி போ . 

அவரை எதுக்கு பார்க்கணும் ? 

பார்த்து ஆகப்போறது என்ன ? 

அதைரியப்படுத்தினர் சிலர் . 


உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை , ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும் ! 

அது ஒரு வழிப்பாதை ! 

ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது ! 

அப்படியே போக வேண்டியதுதான் ! 

பயமுறுத்தினர் சிலர் . 


சாமியாவது , பூதமாவது ! 

அது வெறும் கல் ! 

அங்கே ஒன்றும் இல்லை ! 

வெட்டி வேலை ! 

போய் பிழைப்பை பார் ! 

பாதையை அடைத்து வைத்து பகுத்தறிவு பேசினர் சிலர் . 


என்ன செய்வது ? 

ஏறுவதா , 

திரும்பி போவதா ? 


குழம்பி நின்ற என் முன்னால் ,  

வயதான கிழவி , மெலிந்த கரங்களை நீட்டி , " பசிக்குது ஐயா !  சாப்பிட எதாவது குடு சாமீ ! "  என்றாள் . 


கடவுளுக்கென்று கொணர்ந்ததை

அந்த கைகளில் வைத்தேன் . 


மகராசனா இரு என்று வாழ்த்தினாள் . 


வாழ்த்திய முகத்தினை பார்த்தேன் . 


நன்றியுடன் என்னை நோக்கிய அந்த பூஞ்சடைந்த கண்களிலிருந்து புன்னகைத்தார் கடவுள் ! 


இங்கே என்ன செய்கிறீர்கள் ? 


நான் இங்கே தானே இருக்கிறேன்


அப்போ அங்கிருப்பது யார் ?

மலை உச்சியை காட்டினேன் . 


 உம்...அதுவும் நான்தான்  

அங்கேயும் இருக்கிறேன், 

இங்கேயும் இருக்கிறேன் , 

எங்கேயும் இருப்பவன் அல்லவா நான் 

இங்கே என்னை காண முடியாதவர்கள் அங்கே வருகிறார்கள் . 

சிரமப்பட்டு ! 


" ஆனால் , . . .  திணறினேன் .

" இது உமது உருவமல்லவே " 


அதுவும் எனது உருவமல்லவே 

எனக்கென்று தனி உருவமில்லை 

நீ என்னை எதுவாக / எதில் காண்கிறாயோ , அது நானாவேன் 


அப்படியென்றால் , 


பசித்த வயிறோடு கை நீட்டியவளும் நானே 


உணவளித்தவனும் நானே 


வாழ்த்திய கண்களில் உனக்கு தெரிபவனும் நானே 


தருபவனும் நானே 

பெறுபவனும் நானே


நான் எங்கும் எதிலும் இருக்கிறேன் 

என் தரிசனம் பெற கண் தேவையில்லை 

மனம்தான் வேண்டும் 


அப்போ உங்களை பார்க்க மலை ஏற வேண்டாம் என்கிறீர்களா ? 

குழப்பத்துடன் கேட்டேன் . 


தாராளமாக ஏறி வா 

அது உன் விருப்பம் 

அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே !

அங்கு வந்தாலும் என்னை பார்க்கலாம்


புரியாமல் முழித்தேன் , 

கடவுளே !  என்று தன்னிச்சையாக மனம் அழைத்தது . 


கடவுள் சொன்னார் , 

என்னை புரிந்து கொள்வதும் / பார்ப்பதும் அவ்வளவு கடினமல்ல 


உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால் , என்னை காண ,  நீ சிரமப்பட்டு மலையேறி உச்சிக்கு வரவேண்டும்


பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால் , நீ  இருக்குமிடத்திலேயே என்னை காண்பாய் . 

என்று சொல்லி , 

புன்னகைத்தார் கடவுள்

0 0 0 0 0 0
 • 137
Info
Category:
Created:
Updated:
Comments (0)
  Ads
  Featured Posts
  வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
  முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
  மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
  மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
  படித் *தேன்..* சுவைத் *தேன்*...! உடனே பகிர்ந் *தேன்*
  *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
  அதிபத்த நாயனார் குருபூஜை
  அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
  ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
  ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
  பக்தி
  பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
  Ads
  Latest Posts
  சுக்கிர யோகம் தரும் சுக்கிர வார சங்கடஹர சதுர்த்தி
  சங்கடஹர சதுர்த்தி நாளில், ஆனைமுகத்தானை வழிபடுவோம். நமக்கு சந்தோஷங்களையும் வெற்றிகளையும் தந்தருள்வார் பிள்ளையாரப்பன். சுக்கிர வாரம் என்று சொல்லப்படும்
  சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
  சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
  கதை- இதுதான் காரணமா?
  புருசன் செத்துட்டான் பொட்டப்புள்ளையை காப்பாற்ற புளியமரத்தடியில் நைட்டு டிபன் கடை போட்டாள் இளவயது ப்ரியா.கடைபோட்ட அன்னிக்கே ஒரு போலீஸ்காரன் வந்தான். பர
  முகம் பார்க்கும் கண்ணாடி?
  முதலாளி வேலைக்காரனிடம் ஒரு கண்ணாடி வாங்கி வர சொன்னார்.'' கண்ல போடுற கண்ணாடியான்னு கேட்டதும் முதலாளி கோபத்தில்...''யோவ் ஷேவ் பண்றதுக்குய்யா... என் முகம
  சிந்திப்போமா?
  நல்ல வேலை, அதிகாரத்துடன் கூடிய பதவி, பணம், புகழ்... எல்லாம் முக்கியம்தான். இவற்றையெல்லாம்விட வாழ்வது மிக மிக முக்கியம். ஏதோ ஒன்றைத் துரத்திக்கொண்டு, அ
  அருள்மிகு ஸ்ரீ உலகநாயகி அம்மன் திருக்கோவில்
  தேவி அம்பிகையின் சக்தி பீடங்களில் இது வீரசக்தி பீடமாக வழிபடப்படுகின்றது.சர்வ சக்தி பொருந்திய இந்த தேவி தன்னுடைய பதினெட்டுக்கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தி
  Ads