·   ·  984 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

உடல் நலத்துக்கு நல்லது காபியா டீயா - புதிய தகவல்கள்

ஆசிய நாடுகளில் டீயும், பிரிட்டனைத் தவிர்த்த பிற ஐரோப்பிய நாடுகளில் காபியும் ஆதிக்கம் செலுத்துவதாக ப்யூ ஆய்வு ஒன்று கூறுகிறது. பெரும்பாலான மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. இதை விட அது உடலுக்கு நல்லது என்றோ, குறைந்த அளவு தீங்கு விளைவிக்கக் கூடியதோ என்றோ அவர்கள் நம்புகிறார்கள். தனிப்பட்ட விருப்பத்தைத் தவிர தேநீரையோ காபியையோ தேர்வு தேர்வு செய்வதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று பார்ப்போம்.

டீ அல்லது காபியில் உள்ள காபீன் அளவு, அதன் திடம், வகை மற்றும் பக்குவப்படுத்தும் முறை ஆகியவற்றால் மாறுபடுகிறது. ஆயினும் டீயை விட காபியில்தான் அதிக காபீன் இருக்கிறது. காபீன் அதிகமாக எடுத்துக் கொண்டால், விழிப்பாக இருக்க முடியும் என்று பலரும் ஓர் ஊகத்தின் அடிப்படையில் நம்புகிறார்கள். அதற்காக காபி பிரியர்கள் இப்போதே கொண்டாடத் தொடங்கிவிட வேண்டாம். ஏனென்றால், இப்படி எளிதாக முடிவு செய்து விட முடியாது, வேறு சிலவற்றையும் கவனிக்க வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஒரு கோப்பை காபியில் உள்ள மிதமான அளவு (40-300mg) காபீன், விழிப்புணர்வு, கவனம், எதிர்வினையாற்றும் நேரம் ஆகியவற்றை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் நினைவாற்றல் மற்றும் முடிவெடுப்பதில் குறைவான தொடர் விளைவுகளையே காபி கொண்டிருக்கிறது.

ஒரு கோப்பை தேநீரில் உள்ள காபீனின் பண்புகள், எல் தியானைன் என்ற அமினோ அமிலத்தால் மேம்படுத்தப்படுகின்றன என்பதற்கு சான்றுகள் உள்ளன. கவனத்தை மாற்றுதல், கவனச்சிதறல் ஆகியவற்றைக் குறைக்கும் வகையில் எல் தியானைன் காபினுடனுடன் இணைந்து செயல்படுகிறது என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

 இந்த கூடுதல் விழிப்புணர்வுக்கு நமது உடல் ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. 5-6 மணி நேரத்திற்குப் பிறகு, நீங்கள் குடித்த காஃபீனில் பாதி அளவு உங்கள் உடலிலேயே தேங்கியிருக்கும். 10-12 மணி நேரத்திற்குப் பிறகு, அதில் கால் பகுதி இன்னும் இருக்கலாம் என்று தூக்கம் தொடர்பான ஆராய்ச்சியாளர் மாட் வாக்கர் கூறுகிறார்.

இதன் பொருள் என்ன? நீங்கள் தூங்கத் தொடங்குவதில் அல்லது ஆழமாகத் தூங்குவதில் டீயினால் சிக்கல் ஏற்படலாம். காஃபீன் உங்கள் ஆழ்ந்த உறக்கத்தின் அளவைக் குறைக்கும் என்கிறார் வாக்கர். "நீங்கள் மறுநாள் காலையில் எழுந்திருக்க முடியும், புத்துணர்ச்சியுடன் உணர முடியாது"

பிரிட்டன் சுகாதாரத் துறையின் அறிவுரையின்படி, சீரான உணவின் ஒரு பகுதியாக தேனீர் மற்றும் காபி குடிப்பது நல்லது. இருப்பினும், சில ஆராய்ச்சிகள் காபீன் கொண்ட பானங்கள் உடலில் சிறுநீரை விரைவாக உற்பத்தி செய்ய வைப்பதால், உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது என்று கூறுகின்றன.

தேநீர் மற்றும் காபி இரண்டிலும் பாலிபினால்கள் உள்ளன. அவை நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று உணவியல் நிபுணர் சோஃபி மெட்லின் கூறுகிறார். காபியில் தேநீரைக் காட்டிலும் அதிகமான பாலிபினால்கள் உள்ளன. அவை ஒரே மாதிரியானவை அல்ல என ஒரு ஆய்வு கூறுகிறது. டைப்-2 நீரிழிவு நோய்க்கான வாய்ப்பைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இரண்டு பானங்களிலும் உள்ளன. 

ஒரு நாளைக்கு நான்கு கோப்பை காபிக்கு மேல் குடிப்பது உங்கள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என பிரிட்டனின் NHS கூறுகிறது. சிலருக்கு காபீன் ஒத்துக் கொள்ளாது. மேலும் சிலருக்கு செரிமான பிரச்சனைகள், பதற்றம் அல்லது தூக்கமின்மை போன்ற ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படலாம். அவர்கள் காபிக்கு பதிலாக தேநீரை தேர்வு செய்யலாம்.

காபியைக் குறைக்க நீங்கள் முடிவு செய்தால், அதைப் படிப்படியாகவே செய்ய வேண்டும். இல்லாவிட்டால் விலகல் நோய்க்குறிகள் தோன்றக் கூடும். நீங்கள் எவ்வளவு காபீன் குடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இந்த அறிகுறிகளின் தீவிரம் அதிகரிக்கிறது. தேநீர் குடிப்பவர்களைவிட காபி குடிப்பவர்களுக்கு கூடுதல் அறிகுறிகளைக் கொண்டிருப்பார்கள் என்று கூறலாம். ஆயினும் அது எவ்வளவு குடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது.

  • 495
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்