Support Ads
Main Menu
 ·   · 234 posts
  •  · 2 friends
  •  · 3 followers

சிந்திப்போமா?

கடைசியாக இரவு 9 மணி  அதிகபட்சம்

10 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது என உங்களுக்கு  நினைவிருக்கிறதா.?


கடந்த 10 ஆண்டுகளில் நாம் தூங்கச் செல்லும் நேரத்தின் சராசரி அளவு

தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதைக்

கவனித்து இருக் கின்றீர்களா?


இரவு 8 மணிக்கு உணவு முடித்து,


8:30-க்கு

வெளிச்சம் அணைத்து,


பேசிக் கொண்டே படுக்கையில் விழுந்தால்,


9 மணிக்குள் உறங்கிப் போவோம்....


அது ஒரு காலம்.


9 மணி

தூக்கம் என்பது,


10 மணியாகி,


நள்ளிரவாகி,


இப்போது

அதிகாலை வரை வந்துவிட்டது.


அதிகாலை

3 மணி,

4 மணி வரை கூட விழித்திருக்கிறார்கள்.


இரவு

வேலையின் காரணமாக

கண் விழிப்பது,


என்றோ ஒருநாள் தூக்கம் வராமல்

இப்படி ஆவது என்பது எல்லாம் தனி.


எந்த உடனடி காரணமும் இல்லாமல்,

தொடர்ந்து இரவுகளில் கண் விழிப்போர் பெருகிக் கொண்டிருக் கின்றனர்.


இதன் விளைவு தான்,


இந்த

20 ஆண்டுகளில்

புதிது புதிதாகப் பெருகிப் பெருக்கெடுக்கும் நோய்கள்.


இரவுத் தூக்கம் தள்ளிப் போவதற்கும், நோய்களின் வருகைக்கும்

நேரடியானத்

தொடர்பு உண்டு.


தவறான

வாழ்வியல் முறைகளால் ஏற்படும் ,

புற்றுநோய்

இதயநோய்

உடல் பருமன்

பக்கவாத நோய்

சர்க்கரை நோய்

போன்றவற்றால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகு வேகமாக அதிகரித்து வருகிறது.


நம் இரவுத் தூக்கம் எதனால் தள்ளிப் போகிறது?


நமக்கு ஏன் தூக்கம் வருவதில்லை?


இதற்கு நமது உடல் பிரச்னைகள், மனக் கவலைகள் தான் காரணம் என நினைக்கிறோம்.


இது முழு உண்மை அல்ல.


உண்மையில் நாம் உறக்கத்தைத் தள்ளிப் போடும் ஒவ்வொரு நிமிடத்திலும்,


பல நிறுவனங்கள் பல கோடிகளுக்கு அதிக வருமானம் பார்க்க ஆரம்பித்து விட்டன. இரவு சந்தையில் தான், இப்போது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு "கோடி"கள் புரள்கின்றன.


இரவுச் சந்தை என்பது, முழுக்க முழுக்க டிஜிட்டல் சந்தை.


அந்த 

மாய உலகத்தில் விரியும் வண்ண

வண்ணக் காட்சிகளில் மனம் மயங்குகின்றனர்....


இளம் வயதினர் மட்டுமின்றி, பலரும் ஸ்மார்ட் போனில்


பேஸ்புக்


வாட்ஸ்அப்


என மூழ்க ஆரம்பித்து விடுகிறார்கள்.....


சமூக வலை தளங்கள் எனும்

மாய உலகத்துக்குச் சென்று விட்டால்,


அங்கு அதற்கான வேடம் தரித்து பலர் பிஸியாகி விடுகிறார்கள்.


முன்னர் எல்லாம் இரவு உணவு முடித்ததும் திண்ணையில் ஓரிரு மணி நேரம் நண்பர்களோடு உட்கார்ந்து

பேசி விட்டே உறங்கச் செல்வார்கள்.


நேற்றைய வீட்டுத் திண்ணை,

இன்றைய வாட்ஸ்அப் ஆனது.


வாட்ஸ்அப் உரையாடலில்

நேரம் போவதே தெரிவதில்லை.


சொந்த வீட்டில் இருப்பவர் களுடன் கூட, வீட்டில் இருந்து கொண்டே

சமூக வலை தளங்களின் வழியே

தொடர்பு கொள்பவர்களும் இருக்கிறார்கள்.


இது உண்மை.


தினமும்

நள்ளிரவைத் தாண்டிய சாட்டிங்குக்குப் பிறகு "குட்மார்னிங்"

சொல்லி விட்டுத் தான் படுக்கைக்கே செல்கிறார்கள்.


இரவு உறங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென எழுந்து


ஃபேஸ்புக்கில்

போட்ட போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ்?


வாட்ஸ்அப்பில்

மெசேஜ் வந்திருக்கிறதா?’


என அடிக்கடி செக் செய்து கொண்டே இருப்பதை


"கம்பல்சிவ் பிஹேவியர்"


எனச் சொல்லும் ஒருவகையான

மன நலப் பிரச்னை என்றும்,


"கண்டிஷனல் இன்சோம்னியா"


எனும்

தூக்கமின்மை நோய் என்றும்

இன்றைய

மருத்துவர்கள் சொல்கிறார்கள்.


பலர்

தினமும் காலையில் விழித்து எழுந்ததும் செய்யும்

முதல் வேலை

என்ன தெரியுமா?


தலையணை

அருகே இருக்கும் மொபைலை எடுத்து இன்டர்நெட்டை

ஆன் செய்து,


வாட்ஸ்அப்பில்

ஏதேனும் மெசேஜ் வந்திருக்கிறதா?

எனப் பார்ப்பது தான். 


நாம்

எவ்வளவு தூரம்

சமூக வலை தளங்களுக்கு அடிமையாகி வருகிறோம்....

என்பதை

உணர வேண்டிய அவசியமான  தருணம் இது .

0 0 0 0 0 0
  • 265
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
*தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
அதிபத்த நாயனார்  குருபூஜை
அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
பக்தி
பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
குட்டி கதை - வாழ்வியல் நீதி
எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
Ads
Latest Posts
கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள் விவசாயிகள் வருடந்தோறும்  பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வன்னியை பொறுத்த வரையில் கால்நடை வளர்ப்பும் விவசாயமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த வாழ்வாதாரத் தொழில்களாக  காணப்படுகின்ற போதும் கால்நடைகளுக்கான மேச்சல்
வன்னில் மிகவும் பழமை வாய்ந்த பல விவசாயக்கிராமங்கள் காடுகளாகவும் காட்டுவிலங்குகளின் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி வருகின்றன.
மக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அவர்கள் தங்களின் தேவைகளை நோக்கி நகர்வதன் மூலம் வன்னில் மிகவும் பழமை வ
இன்றைய தினம் மிலாது நபி
இன்றைய மிலாது நபி கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துக் கொள்வோமா?https://www.youtube.com/watch?v=HFQRPPJfWyc
இறை பக்திக்கு எது முக்கியம்?
முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளிய
இது கதை அல்ல...... நிஜம்
இந்த எழுபது வயதில் இதெல்லாம் தேவையா என்று உடல் கெஞ்சியது.  ஆனாலும் சிறு வயது தொட்ட நினைவுகள் பீறிட்டு எழ மனம் இருபது வயதாய் துள்ளியது.அக்ரஹாரத்தில் ஒவ
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.மாதந்தோறும் இருமுறை – வளர
Ads