Support Ads
Main Menu
 ·   · 234 posts
  •  · 2 friends
  •  · 3 followers

தாம்பூலம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்

தாம்பூல_பை ! இது கீழ்க்கண்ட பொருட்களை உள்ளடக்கியது.


1. வெற்றிலை 2. பாக்கு 3. மஞ்சள், குங்குமம், 4. சீப்பு 5. முகம் பார்க்கும் கண்ணாடி 6. வளையல் 7. மஞ்சள் கயிறு 8. தேங்காய் 9. பழம் 10. பூ 11. மருதாணி 12.கண்மை13. தட்சணை14. ரவிக்கைத்துணி அல்லது புடவை. 


இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு.


தாம்பூலம் என்பது வெற்றிலை,பாக்குக்கு வழங்கப்படும் பொதுப் பெயர். 


வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர்.


மஞ்சள்,குங்குமம்,மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது. 


சீப்பு, கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக, 


கண்ணாடி, கணவனின் ஆரோக்கியம் காக்க, 


வளையல், மன அமைதி பெற‌ 


தேங்காய், பாவம் நீங்க, ( மட்டைத் தேங்காய் அளிப்பதே சிறந்தது ஆனால் அதை உரிக்கும் எந்திரம் பல வீடுகளில் இல்லாத நிலையில், உரித்ததேங்காய் கொடுப்பதே_நல்லது.)


பழம்,அன்னதானப் பலன் கிடைக்க, 


பூ, மகிழ்ச்சி பெருக, 


மருதாணி, நோய் வராதிருக்க, 


கண்மை ,திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க,  


தட்சணை_லக்ஷ்மி கடாக்ஷம் பெருக,


ரவிக்கைத்துணி அல்லது புடவை வஸ்திர தானப் பலன் அடைய‌ வழங்குகிறோம்.


மனிதர்களிடையே பிறர்க்குக்கொடுத்து மகிழும்வழக்கம். 

வரவேஇம்மாதிரி சம்பிரதாயங்கள் ஏற்பட்டன.காலப் போக்கில்,ஆடம்பரத்திற்காகவும், தங்கள் வசதியைப் பிறருக்குக்காட்டவும் கொடுப்பதாக மாறி விட்டது. 


சோகமே. 


தாம்பூலம்வழங்குவதன் நோக்கம் அம்பிகையைத்திருப்தி செய்வதே.


 அனைவருக்கும் தாம்பூலம் வழங்கும் போது அம்பிகையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்துதாம்பூலம் பெற்றுக்கொண்டு நம்மைவாழ்த்துவாள். 


தேவிஎந்தரூபத்தில்வேண்டுமானாலும் வரலாம். 


நமக்குப் பூக்கள் தரும் பூக்காரி, நம் வீட்டுப் பணிப்பெண், ஏன், தெருவில் குப்பைகள் சுத்தம் செய்பவர் இப்படி_யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். 


அப்படி இருக்க, தாம்பூலம்தருவதில் பேதம்பார்ப்பது,தேவியை_அவமதிப்பது போலாகும்.  


வயதான சுமங்கலிகள், பெண்கள், குழந்தைகள் என்பது ஒப்புக்கொள்ளக்கூடிய பிரிவினை.  இது தவிர்த்து,அந்தஸ்துவேறுபாடு,பழையகோபதாபங்கள் இவற்றை மனதில் வைத்துத் தரும் தாம்பூலங்களுக்கு எந்தப்பலனும்_இல்லை. 


மேற்குறிப்பிட்ட எல்லாப் பொருட்களையும் வசதியுள்ளவர் தரலாம்.  இல்லாதோர் வருந்த_வேண்டியதில்லை. 


நம் எல்லோர் இதயத்துள்ளும்இருக்கும் தேவி,எல்லாம் அறிவாள். பக்தியுடன் தாம்பூலம் கொடுக்கிற சுமங்கலியும் வாங்கும் சுமங்கலியும் இந்த முறைகளை கடைபிடிக்கும் போது மூன்று தேவியரின் அருள்  பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.


இந்த முறையை நானும் தெரிந்து உங்களுக்கும் பகிர்ந்து கொண்டது அம்பாளின் அனுக்கிரகம் என்றே சொல்லலாம்.


நாமும் சந்தோஷமாக இருப்போம்.நம்மை சுற்றி உள்ளவர்களையும் சந்தோஷப்படுத்துவோம்.

0 0 0 0 0 0
  • 214
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
*தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
அதிபத்த நாயனார்  குருபூஜை
அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
பக்தி
பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
குட்டி கதை - வாழ்வியல் நீதி
எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
Ads
Latest Posts
கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள் விவசாயிகள் வருடந்தோறும்  பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வன்னியை பொறுத்த வரையில் கால்நடை வளர்ப்பும் விவசாயமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த வாழ்வாதாரத் தொழில்களாக  காணப்படுகின்ற போதும் கால்நடைகளுக்கான மேச்சல்
வன்னில் மிகவும் பழமை வாய்ந்த பல விவசாயக்கிராமங்கள் காடுகளாகவும் காட்டுவிலங்குகளின் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி வருகின்றன.
மக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அவர்கள் தங்களின் தேவைகளை நோக்கி நகர்வதன் மூலம் வன்னில் மிகவும் பழமை வ
இன்றைய தினம் மிலாது நபி
இன்றைய மிலாது நபி கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துக் கொள்வோமா?https://www.youtube.com/watch?v=HFQRPPJfWyc
இறை பக்திக்கு எது முக்கியம்?
முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளிய
இது கதை அல்ல...... நிஜம்
இந்த எழுபது வயதில் இதெல்லாம் தேவையா என்று உடல் கெஞ்சியது.  ஆனாலும் சிறு வயது தொட்ட நினைவுகள் பீறிட்டு எழ மனம் இருபது வயதாய் துள்ளியது.அக்ரஹாரத்தில் ஒவ
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.மாதந்தோறும் இருமுறை – வளர
Ads