-
- 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 11.4.2025
மேஷம்
குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமின்றி முடியும். வாகன பராமரிப்பு செலவு உண்டாகும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு ஏற்படும். பெற்றோர்கள் வழியில் ஆதரவு பெருகும். வியாபாரம் சிறப்பாக அமையும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பணி சார்ந்த அலைச்சல்கள் ஏற்படும். கேளிக்கை செயல்களில் ஆர்வம் உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த சில விரயம் உண்டாகும். பங்குதாரர்களிடம் விழிப்புணர்வுடன் இருக்கவும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
தாய்வழி உறவுகளிடத்தில் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் குறையும். புதிய வேலைகள் சாதகமாக அமையும். குழந்தைகள் வழியில் அலைச்சல் ஏற்படும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். சக ஊழியர்களால் மன அமைதி உண்டாகும். பயணங்களால் அனுபவம் மேம்படும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கடகம்
எதையும் சமாளிக்க கூடிய சாமர்த்தியம் பிறக்கும். உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். அலுவலகத்தில் சில நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிந்தனை திறனில் சில மாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
சிம்மம்
மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். பொருளாதாரம் சார்ந்த நிலையில் மேன்மை உண்டாகும். பயணத்தால் லாபம் அடைவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். உங்கள் பேச்சுக்கு குடும்ப உறுப்பினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். வெளியூர் பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி
உடன் இருப்பவர்களால் புதிய அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் தோன்றி மறையும். கடன் சார்ந்த உதவிகளில் அலைச்சல் உண்டாகும். செயல்களில் உள்ள மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். அலுவல் சார்ந்த பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம்
மறைமுகமான வருமானங்கள் மூலம் சிலருக்கு ஆதாயம் உண்டாகும். காலம் தவறிய உணவுகளை தவிர்ப்பது நல்லது. சமூகம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நிதானமான பேச்சுக்களின் மூலம் நம்பிக்கை உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விருச்சிகம்
தன வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகம் சார்ந்த பணிகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அனுபவம் அதிகரிக்கும். வியாபாரம் சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
தனுசு
குடும்பம் பற்றியதான சிந்தனை அதிகமாகும். பெரியோர்களின் சந்திப்பால் மனமாற்றம் ஏற்படும். கடினமான வேலைகளையும், எளிதில் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வியாபாரத்தின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். மனதில் இருந்துவந்த சஞ்சலம் குறையும். சகோதரிக்கு சுபகாரியம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள். பயம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர்
மகரம்
பண வரவு தாமதமாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வாகன பயணத்தில் விவேகம் வேண்டும். வியாபாரத்தில் மறைமுகமான போட்டிகள் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் நெருக்கம் மேம்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
கும்பம்
வேகத்தை விட விவேகத்தை கையாளுவது நல்லது. நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். வரவைவிடச் செலவுகள் மேம்படும். உத்தியோகத்தில் சிறு சிறு இடர்பாடுகள் ஏற்பட்டு நீங்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைப்பதற்கு காலதாமதமாகும். வியாபாரத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதரர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். சுபமுயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·