- · 5 friends
-
I
தாய் பாசம் (குட்டிக்கதை)
ஒரு பெரிய பணக்காரர் வீட்டில் வசித்து வந்த தம்பதியர்களுக்கு பத்து வருடம் கழித்து குழந்தை பிறந்தது.
மிகவும் மகிழ்ச்சியில் தாய் அந்த குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டார்கள். ஒரு சமயம் தோட்டத்தில் மலர் பறிக்க சென்ற போது ! தோட்டத்தில் இருந்து ஒரு பாம்பு வந்து உறங்கி கொண்டிருந்த குழந்தையை தீண்டி விட்டது!
குழந்தையும் விஷத்தின் வலிமையால் உடனே நுரை தள்ளி இறந்தது! எமன் அந்த குழந்தையின் உயிரை எடுத்து சென்றான்!
அப்பொழுது பூ பறித்து உள்ளே வந்த தாய் குழந்தை இருக்கும் நிலையை பார்த்து சத்தம் போட்டு கதறி அழ! அப்ப பக்கத்து வீட்டு அம்மா அங்கே வந்து! உன் குழந்தையின் உயிரை இப்பொழுது தான் காலன் எடுத்து கொண்டு செல்கிறான்! சீக்கிரம் போனால் அவனிடம் கேட்டு உன் குழந்தையின் உயிரை திரும்பி வாங்கி வரலாம் என்று சொன்னாள்.
உடனே தாய் எமனை தேடி வெளியே தெருவில் ஓடினாள்!
ஓடினாள்! ஊருக்கு வெளியே வந்தாள்!
அப்பொழுது அங்கிருந்த ஒரு கள்ளி செடி பேசியது அம்மா எனக்கு தெரியும் உனக்கு என்ன நடந்தது என்று! உன் குழந்தையின் உயிர் வேண்டும் என்றால் நீ என்னை உன் குழந்தையாக நினைத்து கட்டி பிடித்து கொஞ்சி என்னை உன் குருதியால் நனைக்க வேண்டும்! என்று சொல்ல அந்த தாயும் அது போல் அந்த கள்ளி செடியை கட்டி பிடித்து குழந்தை போல் கொஞ்ச! அவள் உடம்பில் இருந்து குருதி வெளியேறி செடியை சிகப்பாக மாற்றியது. செடி சொல்லியது இன்னும் ஒரு மைல் தூரத்தில் இருக்கும் ஒரு கிணற்றில் உன் குழந்தையின் உயிர் இருக்கு போ! என்று சொல்லி அனுப்பியது.
தாயும், உடனே அந்த கிணறு இருக்கும் இடத்திற்கு ஓடினாள், இப்பொழுது கிணறு பேசியது, அம்மா நான் நீர் நிறைந்து இருக்கும் போது என்னிடம் எல்லாரும் வந்தார்கள், இப்பொழுது நீர் இல்லாததால் என்னிடம் யாரும் வருவது இல்லை! உனக்கு உன் குழந்தையின் உயிர் வேண்டும் என்றால்! உன் கண்ணீரால் இந்த கிணற்றை நிரப்பு என்று சொல்ல அந்த தாய் கிணறு சொன்ன மாதிரி தன் குழந்தையை நினைத்து கதறி அழ கிணறு கண்ணீரால் நிரம்பியது. இப்பொழுது கிணறு சொல்லியது இங்கே இருந்து ஒரு மைல் தூரத்தில் கழுகு மலை இருக்கு அங்கே செல் உன் குழந்தை உயிர் கிடைக்கும் என்று சொல்லியது!
தாயும் வேக வேகமாக அந்த மலையை நோக்கி ஓடினாள்!
அங்கே இருந்த கழுகு அம்மா உனக்கு உன் குழந்தை உயிர் வேண்டும் என்றால் உன் இரு விழி திரையும் எனக்கு கொடு! வயதாகி விட்டதால் என் பார்வை சரியாக இல்லை! நான் உனக்கு உன் குழந்தையின் உயிர் இருக்கும் இடத்தை சொல்வேன் என்றது!
மகிழ்ச்சியுடன் தாய் தான் ஒரு விழி திரையை கொடுத்தார்! இப்ப கழுகு சொல்லியது அருகில் இருக்கும் தோட்டத்தில் காலன் இருக்கிறான். போய் உன் குழந்தையின் உயிரை மீட்டு கொள் என்றது.
கண் பார்வை இழந்தும் தட்டு தடுமாறி அருகில் இருந்த தோட்டத்திற்கு சென்ற தாயை காலன் வரவேற்றான். தாய் காலனிடம் தன் ஒரே குழந்தையின் உயிரை திருப்பி கொடுக்க மன்றாடி கேட்க, அதற்கு காலன் தாராளமாக தருகிறேன்! இங்கே மொத்தம் ஆயிரம் பூக்கள் இருக்கிறது அதில் ஆயிரம் குழந்தைகளின் உயிர் இருக்கு! உனக்கு கண் பார்வை வேறு இல்லை முடிந்தால் கண்டு பிடித்து எடுத்து கொள் என்றான்.
தாய் உடனே ஒவ்வொரு பூவாக நுகர ஆரம்பித்த செல்ல ! முன்னூறு பூக்களை நுகர்ந்த பின் 301 பூவிடம் வந்தவள் , இதோ என் குழந்தை என்று அந்த பூவை கட்டி கொண்டு அழ! அந்த பூவில் இருந்த குழந்தை அம்மா என்று அழைத்தது.
இப்போ காலன் தாயிடம் எப்படி அது உன் குழந்தையின் உயிர் தான் என்று தெரிந்து கொண்டாய் என்று கேட்க அதற்கு அந்த தாய் பத்து மாதம் தவமிருந்து பெற்ற குழந்தையின் வாசம் தெரியாமல் எந்த தாய் இருப்பாள் என்று சொல்லி குழந்தையின் உயிரை பெற்று சென்றது.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·