Support Ads
Main Menu
 ·   · 236 posts
  •  · 2 friends
  •  · 3 followers

திருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி?

முதன்முதலில் கிரிவலம் சென்றது யார்??  இதன் புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம். ஜோதியாக தோன்றி பிறகு மலையாக அமர்ந்த அண்ணாமலையாரே இங்கு கிரிவலத்தை தொடங்கி வைத்தார். அவர் நடத்திய ஒரு திருவிளையாடல்தான் கிரிவலம் தோன்ற காரணமாக அமைந்தது. அந்த திருவிளையாடலால் திருவண்ணாமலையில் முதன் முதலில் கிரிவலம் சென்றது பார்வதிதேவி ஆவார்.  


ஒரு தடவை கைலாயத்தில் சிவபெருமானின் இரு கண்களையும் பார்வதி தேவி மூடியதால் உலகம் இருண்டு உயிரினங்கள் அனைத்தும் தவிக்க நேரிட்டது. இதனால் பார்வதிதேவிக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்திற்கு பரிகாரம் தேட வேண்டிய நிலை ஏற்பட்டதால் பார்வதி தேவி திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்தார். அவர் தவத்தை கண்டு மனம் இறங்கிய சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்தார். வேண்டிய வரம் கேள் என்றார். அதற்கு பார்வதிதேவி உங்களை என்றென்றும் பிரியாது இருக்கும்படி உங்கள் உடலில் பாதியை தந்து அருள வேண்டும் என்றார்.


உடனே சிவபெருமான் அப்படியானால் நீ என்னை சுற்றி வர வேண்டும் என்று கூறினார். அதை ஏற்றுக்கொண்ட பார்வதிதேவி திருவண்ணாமலையில் ஈசனே மலையாக வீற்றிருப்பதால் அந்த மலையை சுற்றத் தொடங்கினார். மலையை வலம் வருதல் என்பது சிவபெருமானையே சுற்றி வருவதற்கு சமமாகும் என்பதை உணர்ந்ததால் அவர் தன் தலை மீது கை கூப்பியபடி வலம் வந்தார்.


அவருக்கு சிவபெருமான் கிரிவல பாதையில் நேர் அண்ணாமலை அருகே ரிஷப வாகனத்திலும், ஈசான்ய பகுதியில் ஒளி ரூபத்திலும் இரண்டு இடங்களில் காட்சி கொடுத்து ஆசீர்வதித்தார். பின்னர் தனது உடலின் இடபாகத்தை வழங்கி தன்னோடு ஐக்கியமாக்கி கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார். அப்போது பார்வதிதேவி, “நான் தங்களை சுற்றி வந்ததால் என்னை ஆசீர்வதித்ததை போல திருவண்ணாமலை மலையை கிரிவலம் வரும் ஒவ்வொரு பக்தனுக்கும் அருள் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு சிவபெருமான் சம்மதித்தார். இந்த முறையில்தான் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.


பார்வதி தேவியை தொடர்ந்து இதர கடவுள்கள், தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள், மகான்கள் என அனைத்து தரப்பினரும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து ஈசனாகிய அண்ணாமலையாரின் அருளை பெற்றனர். இதைத் தொடர்ந்து சித்தர்களின் வழிகாட்டுதலின் பேரில் சாதாரண மனிதர்களும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.

0 0 0 0 0 0
  • 347
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
*தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
அதிபத்த நாயனார்  குருபூஜை
அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
பக்தி
பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
குட்டி கதை - வாழ்வியல் நீதி
எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
Ads
Latest Posts
ஆன்மீகக் குறிப்புகள்
 பூஜை சாமான்களை எவர்சில்வர் தட்டுக்களில் வைக்கக்கூடாது. வெள்ளி பித்தளை, செம்பு, வெண்கலம் ஆகிய தட்டுகளிலேயே வைக்க வேண்டும். வீட்டு பூஜையில் கற்பூர தீபம
மதுரை மீனாட்சி அம்மன்
210 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன்...
கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள் விவசாயிகள் வருடந்தோறும்  பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வன்னியை பொறுத்த வரையில் கால்நடை வளர்ப்பும் விவசாயமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த வாழ்வாதாரத் தொழில்களாக  காணப்படுகின்ற போதும் கால்நடைகளுக்கான மேச்சல்
வன்னில் மிகவும் பழமை வாய்ந்த பல விவசாயக்கிராமங்கள் காடுகளாகவும் காட்டுவிலங்குகளின் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி வருகின்றன.
மக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அவர்கள் தங்களின் தேவைகளை நோக்கி நகர்வதன் மூலம் வன்னில் மிகவும் பழமை வ
இன்றைய தினம் மிலாது நபி
இன்றைய மிலாது நபி கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துக் கொள்வோமா?https://www.youtube.com/watch?v=HFQRPPJfWyc
இறை பக்திக்கு எது முக்கியம்?
முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளிய
Ads