- · 5 friends
-
I

ராஜா சொன்ன உத்தி (குட்டிக்கதை)
ஒரு ராஜாவுக்கு தன் பட்டத்து யானை கஜேந்திரன் மேல ரொம்ப பிரியம் !!
ஒவ்வொரு போரின் போதும் பட்டத்துயானை கஜேந்திரன் தான் முன்களத்தில் நிற்க்கும்.
எப்பவும் ராஜாவுக்கு வெற்றிதான் !!
கஜேந்திரன் துணையிருக்கும் போது,
ராஜாவுக்கு ராஜா தான்.
போர் முரசு ,கேட்ட அடுத்த நிமிடமே போருக்கு தயார் ஆகிடும் !!
எதிர் நாட்டு ராஜாவுக்கு இந்த யானையை பார்த்தாலே , கை கால் எல்லாம் நடுங்கிடும் !!
ஒரு படைத் தளபதிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கஜேந்திரனுக்கும் ராஜா கொடுத்தார் .
பட்டத்து யானைமீதேறி ராஜா நகர் வலம் வரும்போது தெய்வமே நேரில் காட்சி தந்தது போல் மகிழ்ச்சியுடன் மக்கள் வரவேற்று உள்ளம் மகிழ்வார்கள் !!
அரண்மனை போன்ற பெரிய வளாகம் கட்டி ,வேண்டிய வசதிகள் செய்து கொடுத்து பட்டத்து யானையை ராஜாவும் போற்றி பாதுகாத்து வந்தார் .
எல்லோருக்கும் முதுமை வருவது போல் இப்ப பட்டத்து யானைக்கும் வயதாகிவிட்டது .
எதிர் நாட்டு படை தொந்தரவு இல்லாததால் போர் இல்லாமல் நாடு அமைதியாக இருந்தது .
கஜேந்திரன் யானைக்கு முன்னாடி மாதிரி சுறுசுறுப்பா இயங்க முடியல !
சோர்வா இருந்துச்சு !!
அவருடைய அழகும் கம்பீரமும் ,முன்புபோல இருக்கணும்னு ராஜா ஆசைப்பட்டார் !
ஆனா வயசு ஆயிடுச்சே !
புத்தி நல்லா இருந்தாலும் சக்தி குறையுதே !!
பட்டத்து யானைக்கு ,வேண்டிய சத்தான உணவுகள் மருத்துவஉதவிகள்,பயிற்சிகள் குறைவில்லாமல் பார்த்துக்கொள்ளனும்
ராஜா உத்தரவு போட்டார் .
தினசரி அதிகாலையில் குளத்தில் குளிக்க வேண்டியது ,
அங்குள்ள தாமரை மலரை பறித்து இறைவனை வணங்கிவிட்டு ,ராஜாவுக்கு தரிசனம் தந்து , சாப்பிட வேண்டியது பின் தூங்க வேண்டியது .
இதுதான் பட்டத்து யானையின் வேலை !!
அன்றைக்கு காலையில குளிக்கப்போன பட்டத்து யானைக்கு போதாத நேரம் !!
குளித்துவிட்டு , படித்துறைக்கு சற்று தள்ளி பூத்திருந்த தாமரையை பறிக்கப் போனது யானை .
குளத்துக்குள் இருந்த சேற்றில் கால் வைத்துவிட்டது .
சேற்றிலிருந்து காலை எடுக்க முடியவில்லை .
எவ்வளவு முயன்றும் முடியவில்லை .
ராஜாவுக்கு தகவல் போனது !
பட்டத்து யானையைசேற்றிலிருந்து மீட்க ஆணையிட்டார் !
நூற்றுக்கணக்கான படைவீரர்கள் ,பழக்கிய யானைகளின் துணையுடன் முயன்று பார்த்தார்கள் முடியவில்லை .
மீட்புக் குழுவினருக்கு நம்பிக்கை குறைந்து விட்டது .
ராஜாவிடம் எப்படி சொல்வது !
ராஜா கவலையடைவாரே !
பட்டத்து யானையை இழப்பது நாட்டுக்கே பெரிய அபசகுணம் அல்லவா !!
வேறு வழியில்லை !
அமைதியாகச் சொல்லிவிட வேண்டியதுதான் !
ராஜாவிடம் சொன்னார்கள் !
ராஜா பதட்டப்படாமல் கேட்டார் !!
பட்டத்து யானை கஜேந்திரன் மீண்டு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது .
அதனுடைய ஆற்றலும் அறிவும் விவரிக்க முடியாதது !!
நீங்கள் அதை புரிந்து செயல்படுத்துவீர்கள் என்று நினைத்து உங்களிடம் அதை மீட்கும் பொறுப்பை கொடுத்தேன் .
நீங்கள் அதை சரியாக புரிந்து கொள்ளவில்லை !!
அதன் பலம் உங்களுக்கு தெரியவில்லை !!
நெருப்பின் வெளிப்பாடு , உரசும் கல்லைப் பொறுத்தே அமைகிறது .
இன்னும் சற்று நேரத்திலேயே பட்டத்து யானை கஜேந்திரன் மீண்டு வரும்.
அதற்கான உத்தியை சொல்கிறேன்!
உடன் செய்க !!
போர்முரசு ஒலிக்கட்டும் !,
படைவீரர்களின் உற்சாக துந்துபிகள் முழங்கட்டும் !
வாள்களும் வேல்களும் கூர்செய்யும் சப்தங்கள் இடைவிடாது கேட்கட்டும் .
ஆணையிட்டார் ராஜா !!
போர் முரசு ஒலித்தது !
படைவீரர்கள் உற்சாக சப்தம் எழுப்பினர் !
மங்கல வாழ்த்துக்கள் ,மத்தள ஓசை, வாள் வேல் ,வீர மகளிர் வெற்றித் திலகமிடும் பாடல்கள் ,பறையோசை !!
எங்கும் கேட்டது .
எல்லோருக்கும் ஆச்சரியம் !வியப்பு !!,மகிழ்ச்சி ,உற்சாகம் !!! ஆனந்தம் !!!
பட்டத்து யானை கஜேந்திரன் சேற்றிலிருந்து காலை தானாக எடுத்து வெளியே வந்தது !!
நடையில் தளர்வு இல்லை !
முகத்தில் சோர்வில்லை !!
வயோதிக பாவமில்லை !!
படைத் தளபதியின் மிடுக்கோடு,
முறுக்கேறிய உற்சாகத்தோடு,
புது வெள்ளம் கரை திரண்டு அணை உடைக்க துடிப்பது போல்,
புது களம் காண போர்களம் செல்ல எழுத்து வந்தது,
சந்தோசத்தில் யானையின் கால்களை பிடித்துக்கொண்டார் ராஜா !!
அதன் பிடரியின் மீது ஏறிஊர்வலம் போனார் !!!
எல்லோருக்கும் பெரிய ஆச்சரியம் !!
ராஜா எவ்வளவு பெரிய அறிவாளி !!
எது செய்தால் ,எது நடக்கும் எப்படி தெரியும் ?
நமக்கு ஏன் புரியவில்லை !!
அது புரிந்ததால் தான் ,
அவர் ராஜா !!

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·