- · 5 friends
-
I

மனநலம் காக்கும் மந்திர சொற்கள்
காலையில் நடைப்பயிற்சி செல்லும்போது ஒரு பெரியவரை தினமும் பார்த்து வணக்கம் சொல்வது வழக்கம். வணக்கம் சொல்லும் அனைவருக்கும் “மகிழ்ச்சி” என்ற வார்த்தைதான் அவரிடம் இருந்து பதிலாக வரும்.
முதல் தடவை கேட்கும்போது இவர் என்னடா பதில் வணக்கம் சொல்லாமல் மகிழ்ச்சி என்கிறாரே என்று நினைக்கத் தோன்றியது. ஆனால் தொடர்ந்த நாட்களில் மகிழ்ச்சி எனும் வார்த்தையைக் கேட்கும்போது நம்மை அறியாமல் மனதுக்குள் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்வதை உணர முடிந்தது.
இவரைப் பார்க்கும்போது மற்ற சிலரும் நினைவில் வந்தனர்.
சிறு வயதில் மளிகைக் கடைக்கு செல்ல நேரும். அங்கு கல்லாவில் உட்கார்ந்து இருக்கும் அண்ணன் நாம் எது கேட்டாலும் அவர் வாயிலிருந்து ’சிறப்பு’ என்ற வார்த்தை வரும். அதைக் கேட்கும்போது சிரிப்புதான் வரும் அப்போது. ஆனால் பிறகுதான் தெரிந்து கொண்டேன். அவர் வாழ்வு எவ்வளவு சிறப்பாக மாறியதென்று. ஆம். சிறப்பு என்ற மந்திர வார்த்தையை உச்சரித்த அவர் மிகச்சிறந்த செல்வந்தராக மட்டுமில்லாமல் சேவையாளராகவும் எங்கள் பகுதி மக்கள் மனதில் இடம் பிடித்தார். கடைசி வரை சிறப்பு என்ற சொல்லும் அவரை விட்டுப் போகவில்லை. அவரைத் தேடி வந்த சிறப்புகளும் குறையவில்லை.
இந்த இரண்டு மதிப்பிற்குரிய நபர்களிடமும் கற்றுக்கொண்டது நாம் உச்சரிக்கும் வார்த்தைகளின் மகிமையைத்தான். வார்த்தைகளுக்கு நம் மனநலன் காக்கும் சக்தி இருக்கிறது என்பதை உளவியலாளர்களும் ஒப்புக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
நம்பிக்கை தரும் வார்த்தைகளை மட்டும் பேசுவோம். ‘ஆஹா’ ’சிறப்பு’ ’மகிழ்ச்சி’ ’நன்றி’ ’சூப்பர்’ போன்ற மனம் மகிழும் மந்திர வார்த்தைகளை உபயோகித்து நம் மனநலனுடன் நம்மை சுற்றி இருப்பவர்களின் மன நலமும் பேணுவோம்

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·