·   ·  2139 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ஜெயிச்சி காட்டுவோம் (குட்டிக்கதை)

நண்பன் ஒருவன் பிஸினஸ் முயற்சி தோற்றதில் வருத்தத்தில் இருந்தான். பணநஷ்டம் அதிகமில்லை, தோல்வியால் வந்த மனக் கஷ்டம்தான் அதிகம்.

பணம், காசு தருகிறோமோ இல்லையோ கஷ்டத்தில் இருக்கிறவனை நேரில் பார்த்து ஆறுதலாகவோ, ஊக்குவிக்கிற மாதிரியோ நாலு வார்த்தை பேசுவது அவர்கள் கஷ்டத்திலிருந்து மீண்டு வருவதற்கு உதவியாக இருக்கும். போனேன்.

ஒரு மாதமாகச் சிரைக்காத முகம். அழுக்கு லுங்கி, கிழிசல் பனியன் என்று சோகக் காட்சிக்கு ஏற்ற தோற்றம்.

ஆல் இண்டியா ரேடியோவில் பெரிய தலைவர்கள் செத்துப் போகும் போது வாசிக்கும் தில்ரூபாவைப் பின்னணி இசையாகப் போட்டால் .. மிக பொருத்தமாக இருக்கும்.

‘எல்லாம் என் தலைவிதி, இப்படியெல்லாம் ஆகணும்ன்னு இருக்கு. அதை எப்படி மாத்த முடியும்?’ என்று நொந்து கொண்டான்.

சோகக் காட்சியில் நடிக்கும் மௌலி போல பேச்சுக்கு நடுவே அவ்வப்போது மூக்கை மட்டும் உறிஞ்சிக் கொண்டான். ‘போகட்டும் விடு, வந்தவனுக்கு ஒரு காபி தர மாட்டியா?’ என்றேன் சிரித்துக் கொண்டே.

‘சாரி டா. வய்ஃப் ஊர்ல இல்லை. எனக்கு காஃபி போடத் தெரியாது…’ என்று இழுத்தான்.

‘கிச்சன்ல எது எங்கே இருக்குன்னு சொல்லு, ரெண்டு பேருக்கும் நான் காபி போடறேன்’ என்று காபி போட்டுக் கொண்டே அவனோடு பேசினேன்.

‘உன் கேரியர் நல்லா இருந்தது. ஃ பைனான்ஷியலா உனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. நீ _ _ _ _ _ கம்பெனியிலேதான் முதல்லே வேலைக்குச் சேர்ந்தே இல்லே? அங்கே வேலை கிடைக்கிறது ரொம்ப சிரமம்ன்னு சொல்வாங்களே?’ என்று பழசைக் கிண்டினேன்.

‘முப்பது பேர் வந்திருந்தாங்க... ரிட்டன் டெஸ்ட்டுக்கு’ என்று உற்சாகமாக ஆரம்பித்தான்.’

முப்பதில மூணு பேரைத்தான் இண்டர்வியூவுக்கு செலக்ட் பண்ணாங்க. இ ஈஸ் ஈக்வல் டு எம் ஸி டி ங்கிற ஈக்வேஷன் தந்திருந்தாங்க. அதைப் பத்தி பிரமாதமா எழுதினது நாந்தானாம்!

கம்பெனி எலட்ராலிஸிஸ் கம்பெனி ஆச்சே, செலக்ட் ஆய்ட்டேன்’ ‘எப்படி உனக்கு ஸ்ட்ரைக் ஆச்சு?

நீ படிச்சது மெக்கானிக்கல் ஆச்சே?’ ‘கரெக்டு. மூணு ஆப்பர்ச்சூனிட்டி போயாச்சு. இந்த வேலையை எப்படியாவது பிடிச்சிடனும்ன்னு உள்ளே ஒரு உத்வேகம்.

மூளையை கசக்கிக்கிட்டு யோசிச்சேன். பத்தாங்கிளாஸ்ல படிச்சது ஞாபகம் வந்தது” ‘ம்ம்ம்.. குட். பை தி வே, கிச்சனை நல்லா நீட்டா வச்சிருக்கா உன் வய்ஃப்’ ‘கிச்சனை மட்டுமா? மொத்த வீட்டையும், என்னையும் கூட நல்லா வச்சிருக்கா’

‘யு ஆர் லக்கி டு ஹேவ் சச் அ வய்ஃப்’ ‘லக்கியா! இவளை லவ் பண்ண நான் என்னல்லாம் பண்ணேன்னு உனக்குத் தெரியுமில்லே?

எத்தனை எதிர்ப்பு, எவ்வளவு தடங்கல்! அவ்வளவையும் ஜெயிச்சி வெற்றி வீரனா இவளைக் கல்யாணம் பண்ணிகிட்டேன். லக்கின்னு அஞ்சு எழுத்தில சொல்லிட்டே?’

‘தலைவிதின்னா என்னடா மாப்ளே?’ என்றேன் காபியை தந்து கொண்டே.... ‘முன்னரே விதிக்கப்பட்டது. இதிது இப்படி இப்படித்தான் நடக்கணும்ன்னு’

‘உனக்குக் கிடைச்ச வேலையும், மனைவியும் உன் திறமைக்குக் கிடைச்சதாத்தானே சொல்றே? தலைவிதின்னா சொல்றே?’ ‘எவனாவது நல்ல வேலை கிடைக்கிறப்போ என் தலைவிதி, நல்ல வேலை கிடைச்சிடிச்சுன்னு சொல்வானா?

என்ன பேசறே நீ? பைத்தியக்காரத்தனமா இருக்கே?’ ‘கெடுதலை மட்டும்தான் கடவுள் விதிக்கிறாரா?

நல்லதை எல்லாம் தானே உருவாக்கிக்கிற சர்வ வல்லமை படைச்சவனா நீ?’

‘அப்படீன்னா?’

‘விதியை நம்பினேன்னா, நல்லது, கெட்டது ரெண்டுமே விதிக்கப்பட்டதுன்னு நம்பணும். முயற்சியை நம்பினேன்னா தோல்விகளுக்கும் காரணம் நாமதான்னு ஒத்துக்கணும்.

தோத்தா விதி, ஜெயிச்சா நானுங்கிறது டுபாக்கூர் ஃபார்முலா’

‘நீ என்ன சொல்ல வர்ரே?’

‘விதி, முயற்சி ஏதாவது ஒரு ரூட்ல போ. ரெண்டுமே ஓக்கேதான். இதுவுமில்லாம அதுவுமில்லாம நடுவில நடந்தா ஊர்போய்ச் சேர முடியாது.

ஏன்னா நடுவில ரூட்டே இல்லை’ நாம் எதற்கெல்லாம் கிரெடிட் எடுத்துக்கொள்கிறோமோ அதற்கு ஈடான எதிர்வினைகளுக்கும் நாமே டெபிட் எடுத்தாகவேண்டும்...

என்ன நான் சொல்றது சரிதானே?

வாங்க தோல்வியில் இருந்து வெளியே வாங்க.. உங்களுக்காக உலகம் உற்சாகத்தோட காத்திருக்கிறது.. நீங்களா அதான்னு ரெண்டுல ஒன்னு பார்த்திடுவோமா?

சுறுசுறுப்பாக கிளம்பி வாங்க.. ஜெயிச்சி காட்டுவோம்.... என்றேன் நண்பனைப் பார்த்து.

  • 664
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங