- · 5 friends
-
I

அப்பா (குட்டிக்கதை)
'தினேஷ், எங்க போற'? கேட்டார் அப்பா.
'ஆபீஸ் போறேன் பா' பதில் அளித்தான் தினேஷ்.
'இன்னைக்கு வானிலை சரியா இருக்காதுன்னு செய்தில படிச்சேன் டா, இன்னைக்கு ஒரு நாள் வேணா விடுப்பு எடுத்துகோடா', அப்பா கூறினார்.
'அப்பா, ஏற்கனவே இந்த மாசம் நிறையா நாள் விடுப்பு எடுத்துட்டேன், அப்பறம் பாருங்க வானம் எவ்வுளவு தெளிவா இருக்கு. ஒன்னும் பிரச்சனை இல்ல.
'சரி, அப்ப ரெயின் கோட்டையாவது (rain coat) போட்டுட்டு போடா, சொன்னார் அப்பா.
உங்களை சமாளிக்க முடியாது அப்பா,..சரி நான் ரெயின் கோட் போட்டுட்டு போறேன், கிளம்பினான் தினேஷ்.
தினேஷ் தனது பைக்கில்(bike) ஏறி அலுவலகம் சென்றான். அவன் பயணித்த 10 நிமிடத்தில், தீடிரென மழை கொட்ட ஆரம்பித்தது. ரெயின் கோட் போட்டதுனால நனையாமல் அலுவலகம் சென்றான். அலுவலகம் சென்றடைந்தவுடன் தொலைபேசியில் அப்பாவை கூப்பிட்டு, 'உங்கள சமாளிக்க முடியாதுல'? என்று சிரித்தான். அப்பா சிரித்தார்.
ஆண்டுகள் கடந்தன.
ஒரு காலை தினேஷ் அலுவலம் கிளம்ப தயாரானான். 'இன்னைக்கு வானிலை நல்லா இருக்கு' என்று நினைத்துக்கொண்டு தனது வாகனத்தில் ஏறினான். அவன் பயணித்த சில நிமிடத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது.
மழையில் நனைந்து கொண்டே அலுவலகம் சென்றான். அலுவலகம் சென்று தனது நாற்காலியில் உட்காந்து, தனது சிறு தோள்பையை கழட்டினான்.
தனது தோள்பையில் இருந்த தனது அப்பாவின் சிறு புகைப்படத்தை பார்த்து சில வினாடிகள் புன்னகை செய்தான். அதன் பிறகு சில நிமிடங்கள் மெளனமாய் தனது தந்தையின் புகை படத்தை உற்று பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்த சில நிமிட மெளனங்கள் தான் இந்த கதையின் கருத்து.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·