- · 5 friends
-
I

Poena cullei சடங்கு
Poena Cullei என்பது பண்டைய ரோமானியர்களின் சட்டத்தின் படி வழங்கப்படும் ஒரு கொடூரமான தண்டனை முறையாகும். ஆனால் அக்கால மக்கள் இந்தத் தண்டனை முறையைக் குறிப்பாகத் 'தன் தந்தையைக் கொன்ற' மகனுக்கான சடங்காகப் பாவித்தார்கள்.
Poena cullei என்றால் சாக்குத் தண்டனை (அ) சாக்கு சடங்கு என்றும் அழைப்பார்கள். Poena Cullei தண்டனையின் போது, குற்றவாளியை ஒரு பெரிய அடர்த்தியான எளிதில் வெளியேற முடியாத பெரிய சைஸ் பையில் அடைப்பார்கள். அந்தக் குற்றவாளியுடன் சேர்த்து ஒரு வெறி நாய், விஷப் பாம்பு மற்றும் சண்டைக் கோழி போன்றவற்றைச் சேர்த்து அடைப்பார்கள்.
இவ்வாறு, குற்றவாளி மற்றும் அந்தக் கொடிய விலங்குகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு, பையுடன் ஒரே இடத்தில் அடைக்கப்படுவர். பின்னர், பையை நதியில் அல்லது கடலில் வீசி எறிவார்கள், இதனால் குற்றவாளி நிச்சயம் சாவதைத் தாண்டி, கொடுமையான முறையில் துன்பத்தை அனுபவிப்பதை உறுதி செய்தனர். இந்தத் தண்டனை முறையின் நோக்கம், தந்தையைக் கொன்றது ஒரு மிகக் கொடூரமான பாவம் என்பதைக் குற்றவாளிக்கும் மற்றவர்களுக்கும் உணர்த்துவது.
கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் இருந்து கான்ஸ்டாண்டைன் மன்னர் ஆட்சி அதிகாரத்திற்கு வரும்வரை இந்தத் தண்டனை முறை அமலில் இருந்தது.. பின்னர்க் கான்ஸ்டாண்டைன் மன்னர் இந்த முறையில் சில மாற்றங்களைச் செய்து, தணடனை பையில் குற்றவாளியுடன் விஷப் பாம்புகளை மட்டும் சேர்க்கும்படி செய்தார்.
அதற்குப் பிறகு 200 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜஸ்டினியன் மன்னர் Poena Cullei தண்டனையில் பழைய முறையான வெறி நாய், விஷப் பாம்பு, கோழி ஆகிய விலங்குகளுடன் ஒரு குரங்கையும் சேர்த்துப் பையில் அடைக்கச் செய்தார்.
பிற்காலத்தில் இந்தச் சடங்கு முறையானது தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையோ அல்லது தன்னுடைய எஜமானனையோ கொலை செய்த குற்றவாளிகளைச் சிங்கம் அல்லது ஓநாய் போன்ற கொடூர விலங்குகளுடன் ஒரே கூண்டில் அடைக்கும் முறையாக மாற்றம் அடைந்தது.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·