·   ·  1863 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

தருமரும் குதிரைக்காரனும் (குட்டிக்கதை)

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்!

எவனோ குதிரைக்காரனாம்! அவனிடம் இருந்த குதிரைகளை விலை பேசினார்களாம் இவரின் சகோதரர்கள். ஆனால் அவனோ ‘குதிரைகளுக்கு விலையாகப் பொன்-பொருள் எதுவும் வேண்டாம். எனது கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும். அதே நேரம்… சரியான பதிலைச் சொல்லாவிட்டால், நான் போடும் வட்டங்களுக்குள் நீங்கள் அடைபட வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தானாம்!

இதற்கு ஒப்புக் கொண்ட தருமரின் சகோதரர்கள் நால்வரும் சரியான பதில் சொல்லத் தெரியாமல், அவனிடம் சிக்கிக் கொண்டனராம்!சேவகன் ஒருவன் மூலம் தகவல் அறிந்த தருமர் பதைபதைத்து போனார்; சகோதரர்களை மீட்பதற்கு விரைந்தார்! அரண்மனை வாயிலில், நிபந்தனை வட்டங்களுக்குள் பரிதாபமாக நிற்கும் சகோதரர்களைக் கண்டு மனம் கலங்கினார் தருமர். தன் சகோதரர்களை விடுவிக்குமாறு குதிரைக்காரனிடம் வேண்டினார்.

அவனோ, ”எனது நான்கு கேள்விகளுக்கு பதில் கூறினால், தங்களது சகோதரர்களை விடுவிக்கிறேன்!” என்றான். தருமரும் ஒப்புக் கொண்டார்.

குதிரைக்காரன் முதல் கேள்வியைக் கேட்டான்: ”இந்தக் குதிரையை ஓட்டி வரும் வழியில், பெரிய கிணறு ஒன்றைக் கண்டேன். அதன் விளிம்பில் காசு ஒன்று தொங்கியது. அந்த காசைப் பற்றியபடி மிகப் பெரிய குன்று (மலை) ஒன்று தொங்கியது. என்ன அதிசயம்… இத்தனை பளுவிலும் காசு கிணற்றுக்குள் விழவில்லை. எப்படி?”

உடனே தருமர், ”கலிகாலம் வந்து விட்டதன் அடையாளம் இது. மக்கள் அறநெறிகளில் இருந்து விலகுவார்கள். சிறிய காசு அளவுக்கே தர்மம் செய்வர். பெரிய மலையளவு பாவச் செயல்கள் புரிவர். காலப்போக்கில் அவர்கள் சிறிதளவே செய்த தர்மத்தின் பலனும் நசிந்து போகும். அப்போது, மலையளவு பாவச் சுமையை சுமந்தபடி நரகில் விழுந்து உழல்வர்!” என்றார்.

”மிகச் சரியான பதில்!” என்ற குதிரைக்காரனின் முகத்தில் பிரகாசம். பீமனை விடுவித்தவன், 2-வது கேள்வியைக் கேட்டான்: ”வழியில் ஐந்து கிணறுகளைப் பார்த்தேன். நடுவில் ஒன்றும் அதைச் சுற்றி நான்குமாக அமைந்திருந்த அந்தக் கிணறுகளில் நீர் பொங்கி வழிந்தது. மற்ற நான்கு கிணறுகளில் நீர் குறைந்தால், நடுவில் இருக்கும் கிணறு தன்னிடம் உள்ள நீரால் அந்தக் கிணறுகளை நிரப்பும். ஆனால் நடுவில் இருக்கும் கிணற்றில் நீர் குறைந்தால், மற்றக் கிணறுகள் நீர் கொடுக்காது. இதன் பொருள் என்ன?”சற்று யோசித்த தருமர், ”இதுவும் கலியின் கோலமே! நடுவில் உள்ள கிணறு தந்தை. சுற்றி இருக்கும் கிணறுகள் மகன்களைக் குறிக்கும். மகன்களைப் பாடுபட்டுக் காப்பாற்றுவார் தந்தை. ஆனால், தந்தை தளர்வுற்ற பிறகு, மகன்கள் அவரை புறக்கணிப்பர். இதையே, அந்த ஐந்து கிணறுகளும் உணர்த்துகின்றன!” என்றார்.

இந்த பதிலும் குதிரைக்காரனுக்குத் திருப்தி யளித்தது. எனவே, இப்போது அர்ஜுனனை விடுவித்தான். அடுத்து 3-வது கேள்வியைக் கேட்டான். ”ஓரிடத்தில் குதிரையை அவிழ்த்து வைத்து விட்டு இளைப்பாறினேன். அப்போது… பசுமாடு, கன்றிடம் பால் குடிக்கும் அதிசயத்தைக் கண்டேன். இதன் கருத்து?”இதைக் கேட்டதும் தருமரின் கண்களில் நீர் வழிந்தது. வருத்தத்துடன் அவர் கூறினார்: ”கலி யுகத்தில் பெற்றோர் செய் யும் இழிச் செயல் இது! ஒரு குழந்தை பிறந்தால்… அதைக் காரணம் கூறி, உற்றார்- உறவினர்களிடம் பணம் பறிப்பர். இன்னும் சிலர், காசுக்காக குழந்தையைத் தகாதவர்களிடம் விற்பார்கள். நீ கண்ட காட்சி, இந்த அவலத்தையே உணர்த்துகிறது!”

”அருமையான விளக்கம்!” என்றபடி நகுலனை விடுவித்த குதிரைக்காரன், ”வழியில் மற்றோர் இடத்தில் சற்று கண்ணயர்ந்தேன்.

திடீரென ஏதோ சத்தம். விழித்துப் பார்த்தால், எதிரே விசித்திரமான ஒரு மிருகம்! கேட்க சகிக்காத இழிச் சொற் களைக் கூறிக் கொண்டிருந்த அந்த மிருகம், மலத் துவாரம் வழியே உணவு உட்கொண்டது! இந்த விபரீதம் உணர்த்துவது என்ன?” என்று தனது கடைசிக் கேள்வியையும் கேட்டான்.இதைக் கேட்டதும் குதிரைக்காரனாக வந்திருப் பது கலி புருஷனே என்பதை உணர்ந்து கொண் டார் தருமர்.

”குதிரைக்காரனாக வந்திருக்கும் கலிபுருஷனே! மகா பாவியான உன் கண்ணில் இதுபோன்ற விபரீத காட்சிகள் தென்பட்டதில் வியப்பு இல்லை. இனி இந்த உலகில் உனது ஆட்சிதான்! தர்மத்தின் வேர் அறுபடும். இலக்கியவாதிகள் அறநெறியைப் புறக்கணிப்பர்; புரட்சி, முற்போக்குச் சிந்தனை என்று பேசி மக்களது நல்வாழ்வை நாசமாக்குவர். பொய், களவு, வஞ்ச கம், கொலை… என்று பாதகங்கள் பெருகும்.

பேராசையும், பொறாமையும், போர் வெறியும் தலை விரித்தாடும்! வேதியர்களும் ஒழுக்க நெறி யில் இருந்து விலகி நிற்பர். ஆசிரம தர்மங்கள் சீர் குலையும். மழை பொய்க்கும். பஞ்சமும் வறுமையும் பெருகும். கொடிய நோய்கள் பரவும். அரசர்கள், வேத வல்லுநர்களை இகழ்ந்து பேசுவர்” என்று வேதனையுடன் தழுதழுத்த தருமர், ”ஐயோ போதும் இந்த வாழ்க்கை” என்று கண்ணீர் விட்டார்.

அவரை வணங்கிய கலிபுருஷன், ”தர்மாத்மாவே! உங்கள் ஆட்சி நடைபெறும் வரை நான் இங்கு வர மாட்டேன். ஆனால், தங்களது ஆட்சி முடிவுற்றதும் நான் வந்தே தீரவேண்டும். வேறு வழியில்லை” என்றவன் சகாதேவனையும் விடுவித்தான். பிறகு, மீண்டும் தருமரை வணங்கி விட்டு, அங்கிருந்து மறைந்தான்!

  • 379
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங