- · 5 friends
-
I
பிரம்ம காயத்ரி மந்திரம் (அவசியம் இந்த பதிவை முழுமையாக படிக்கவும்)
பிரம்ம முகூர்த்தத்தில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் கோடீஸ்வர யோகம் உங்கள் ஜாதகத்தில் இல்லாமலேயே நீங்கள் செல்வந்தர் ஆகலாம் தெரியுமா?
ஒருவருடைய சுய ஜாதகத்தை பொறுத்தே அவர் பிற்காலத்தில் செல்வந்தர் ஆகிறாரா? இல்லையா? என்பதை நிர்ணயிக்க முடிகிறது. ஒரு குழந்தை பிறக்கும் பொழுதே தங்க தாம்பூலத்தில் பிறக்கிறது. ஆனால் பெரும்பான்மையோர் தங்களுடைய கர்மாவின் படி அனைத்தையும் அனுபவித்து படிப்படியாக முன்னேற்றத்தை அடைய வேண்டி இருக்கிறது.
சிலருடைய ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் இப்படி கோடீஸ்வர யோகம் இல்லாமலேயே எப்படி நாமும் செல்வந்தர் ஆகலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் ஆன்மீக தகவல்களாக பார்க்க இருக்கிறோம்.
வேதங்களை உருவாக்கியவர் பிரம்மதேவர். இந்த பிரம்ம தேவரை முறையாக வழிபடுபவர்களுக்கு கோடீஸ்வர யோகமும், திடீர் அதிர்ஷ்டங்களும் வருமாம். படைப்பு கடவுளாக இருக்கும் இந்த நான்முகனுக்கு பல்வேறு பெயர்கள் இருந்தாலும் பிரம்மன் என்கிற பெயரே பிரசித்தி பெற்றது.
ஈசன் அழித்தல் தொழிலை செய்பவர் ஆவார், ஆனால் பிரம்ம தேவரோ உயிர்களை உருவாக்குபவராக இருக்கிறார். இதனால் ஆணவம் கொண்ட பிரம்மதேவர் ஒரு முறை ஈசனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். யார் பெரியவர்? என்கிற போட்டி எழுந்தது. இதில் ஈசனுடைய ஜடா முடியை கண்டால் நீரே பெரியவர் என்று வாதம் முடிந்தது.
பிரம்மர் ஜடாமுடியை கண்டதாக பொய் உரைத்து, இனி உனக்கென தனி கோவில்கள் பூலோகத்தில் இருக்கப் போவதில்லை என்ற சாபத்தை வாங்கி கட்டிக் கொண்டார்.
இன்றும் பூலோகத்தில் எங்கும் பிரம்ம தேவருக்கு தனி கோவில்கள் கிடையாது.சிவன் கோவிலில் உள்ள சுற்றுப் பிரகாரத்தில் பிரம்ம தேவருக்கு தனி சன்னதிகள் அமைக்க பெற்றிருக்கும். இந்த பிரம்ம தேவரை வழிபடுபவர்களுக்கு நீண்ட ஆயுளும், குறைவற்ற ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வேதங்களில், கலைகளில் சிறந்து விளங்குவதற்கு பிரம்ம தேவரை வழிபட்டு வருவார்கள்.
பிரம்ம தேவருடைய காயத்ரி மந்திரம் ரொம்பவும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இம்மந்திரத்தை தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து 108 முறை உச்சரித்து வந்தால் கேட்ட வரம் கேட்டபடி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
பிரம்ம காயத்ரி மந்திரம்:
*ஓம் வேதாத்மகாய வித்மஹே*
*ஹரண்ய கர்ப்பாய தீமஹி*
*தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்!!!*
காலை 3.00 முதல் 5.00 மணி வரையிலான காலகட்டத்தை பிரம்ம முகூர்த்தம் என்கிறோம். சூரிய உதயத்திற்கு முன்பாக இருக்கும் இந்த பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வாய் கொப்பளித்து, முகம் கழுவி, வாசல் பெருக்கி, கோலமிட்டு பின்னர் பூஜை அறையில் அமர்ந்து பிரம்ம காயத்ரி மந்திரத்தை 108 முறை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும்.
இடைவிடாமல் இந்த மந்திரத்தை உச்சரித்து முடிக்கும் வரை கண்களை திறக்க கூடாது. பிரம்மனை முழுமையாக நினைத்து மந்திரத்தை உச்சரித்தால் உங்களுக்கு வேண்டிய வரம் வேண்டியபடி கிடைக்கும்.
உங்கள் சுய ஜாதகத்தில் நீங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ போகிறீர்கள் என்பதை மாற்றி அமைக்கக் கூடிய சக்தி இந்த பூஜை முறைக்கு உண்டு எனவே பிரம்மனுக்கு உரிய பிரம்ம முகூர்த்த வழிபாட்டை இங்கனம் மேற்கொண்டு நீங்களும் உங்களுடைய தலையெழுத்தை மாற்றிக் கொள்ளலாமே!
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·