-
- 3 friends
இன்றைய ராசி பலன்கள் - 17.1.2025
மேஷம்
திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தன வருவாயை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ரிஷபம்
முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் வழியில் வரன் அமையும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்
மிதுனம்
மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சிறு தூர பயணம் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அக்கம், பக்கம் வீட்டார்கள் ஆதரவாக இருப்பார்கள். பத்திரம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். எழுத்து சார்ந்த துறைகளில் சாதகமான சூழல் உருவாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
கடகம்
எதிர்பார்த்த சில வேலைகளில் அலைச்சல்கள் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தன வரவுகள் சாதகமாக இருக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சிம்மம்
தன வருவாயில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை பற்றி புரிதல் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். நிதானமான சில காரியங்கள் உங்கள் மீது நன்மதிப்பை மேம்படுத்தும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். தடங்கல் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீலம்
கன்னி
எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அனுபவங்கள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் சில மாற்றம் உண்டாகும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
துலாம்
பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகள் குறையும். வீட்டினை பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் மேம்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். மூத்த சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
விருச்சிகம்
உத்தியோகம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்விகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் இருந்துவந்த தாமதம் குறையும். மற்றவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக செயல்படுவீர்கள். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். எதிர்பாராத சில முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நேர்மை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
தனுசு
மனதளவில் புதிய தெளிவுகள் பிறக்கும். விவேகமான செயல்பாடுகள் மதிப்பை மேம்படுத்தும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். கடன் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்
மகரம்
விவேகமான செயல்பாடுகள் நம்பிக்கையை மேம்படுத்தும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும். அலுவலகப் பணிகளில் மறைமுக விமர்சனங்கள் உண்டாகும். திடீர் செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்
கும்பம்
எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு மேம்படும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தடைப்பட்ட சுபகாரியம் நடைபெறும். அலுவலகப் பணிகளில் நிர்வாகத் திறமை வெளிப்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மீனம்
கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உறவினர்கள் வருகை உண்டாகும். கனிவான பேச்சுக்களால் காரிய சித்தி ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பணிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சாம்பல்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·