·   ·  265 posts
  •  ·  1 friends
  • 1 followers

பக்கத்து இருக்கை

'நான் உங்க ஃபிளைட்டோட ரெகுலர் கஸ்டமர். அப்படி இருக்கிற பட்சத்தில் எனக்கு 14ம் நம்பர் சீட்டையும் என்னுடைய மனைவிக்கு 27ம் நம்பர் சீட்டையும் ஒதுக்கி இருக்கீங்களே! பக்கத்து பக்கத்து சீட்டா மாத்தி குடுங்க'

ரிசப்ஷன் கவுன்டரில் இருந்த அந்த விமான நிறுவன பணிப்பெண்ணிடம் முதியவர் பவ்யமாய் சொன்னார்.

'சாரி சார்..! இன்னைக்கு முகூர்த்த நாள். அதனால டிக்கெட் எல்லாமே அட்வான்ஸா புக்கிங் ஆயிருச்சு. அவைலபிளா இருக்கிற சீட்டை மட்டும் தான் எங்களால உங்களுக்கு தர முடியும். விமானத்துல நீங்களும் உங்க மனைவியும் அடுத்தடுத்த சீட்ல உட்கார்ந்து வர்ற மாதிரி எங்களால அரேஞ்ச் பண்ணி கொடுக்க முடியாது'

விமான நிறுவன பணிப்பெண் புன்னகை மாறாமல் காந்தக் குரலில் பதில் சொன்னாள்.

அதைக் கேட்ட பெரியவரின் முகம் சிவந்தது. பக்கத்தில் சோகமாய் நின்றிருந்த மனைவியை பார்த்துவிட்டு அந்த பணிப்பெண்ணிடம் பேசினார்,

'உனக்கு கல்யாணம் ஆகாததனால தம்பதிகளின் மன நிலை என்னன்னு உனக்கு தெரியலை. உண்மையிலேயே ஒருவரை ஒருவர் நேசிக்கிற தம்பதியராய் இருந்தால் எங்கே போனாலும் இணைபிரியாமல் இருக்கத்தான் விரும்புவாங்க.

நான் என் மனைவியை பிரிஞ்சு ஒரு நொடி கூட இருந்ததில்லை. ஆறு மணி நேர பயணம் நாங்கள் தனித்தனியா உட்கார்ந்து வந்தால் எப்படி எங்களால பொழுதை கழிக்க முடியும்?

காதலிக்கும் போது அவ பேசுறதை எப்படி கேட்டுக்கிட்டே இருக்கணும்னு நினைச்சேனோ அதே நினைப்பு தான் இன்னும் எனக்கு இருக்கு.

இன்னைக்கு உங்க மூலம் ஒரு மோசமான அனுபவத்தை சந்திச்சிருக்கேன். தனியா உட்கார்ந்து வரப்போற என் மனைவியை எப்படி சமாதானப்படுத்த போறேன்னு தெரியலை'

அந்த விமான நிறுவன பணிப்பெண் எதுவும் பேச முடியாமல் தலை குனிந்து நின்றிருந்தாள்.

பக்கத்தில் நின்றிருந்த மனைவியிடம் மெதுவாக சொன்னார் அந்த பெரியவர்,

'உன் பக்கத்தில் உட்கார்ந்து பயணம் பண்ண முடியலயேன்றதை நினைக்கும் போது துக்கம் தொண்டையை அடைக்குது. அடுத்த முறை வேற ஃபிளைட்ல பயணம் பண்ணுவோம். இந்த ஒரு முறை எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணிக்கோ டார்லிங்'

சோகமாய் தலையை அசைத்த அவரின் மனைவி விமானத்தில் ஏறுவதற்கு உள்ளே சென்றாள்.

மீண்டும் அந்த விமான நிறுவன பணிப் பெண்ணிடம் வந்த பெரியவர் அவளின் காதுகளுக்குள் கிசுகிசுத்தார்,

'அந்த ரெண்டு கால் டெரரோடு ஆறு மணி நேரம் பயணம் பண்ண வேண்டி இருக்கேன்னு என் ஈரக் குலை எல்லாம் நடுங்கிக்கிட்டு இருந்துச்சு.

நல்லவேளையா சீட்டை வேற வேற இடத்துல மாத்தி போட்டு எனக்கு அருமையான நிம்மதியை கொடுத்திருக்கீங்க.

அவ பேச ஆரம்பிச்சா நிப்பாட்டவே மாட்டா. ரெண்டு காதுலேயும் ஓட்டை விழுந்து அது வழியா உங்க ஏரோபிளேனே போயிட்டு வந்துரும்.

நீங்க செஞ்சிருக்கிற இந்த உதவிக்கு எப்படி கைமாறு செய்யப் போறேன்னு தெரியலை. இந்த வசதியை பண்ணி கொடுத்திருக்கிற உங்களுக்கு எக்ஸ்ட்ராவா நான் எவ்வளவு பணம் தரணும்?'

சந்தோஷமாய் பேன்ட் பாக்கெட்டிற்குள் கையை விட்டு பர்சை எடுத்தார்.

பர்சை எடுக்க வேண்டாம் என்பது போல் கையால் சைகை காட்டி விட்டு அந்த பணிப்பெண்ணும் பதிலுக்கு அவரது காதுகளுக்குள் கிசுகிசுத்தாள்,

'இந்த வசதியை பண்ணிக் கொடுத்ததுக்கு நீங்கள் எதுவும் பணம் தர வேண்டாம் சார்.

'நான் நிம்மதியா பயணம் செய்யணும்னு சொல்லி' அந்த வசதிக்கு உண்டான பணத்தை ஏற்கனவே உங்க மனைவி செலுத்திட்டாங்க'

  • 28
  • More
Comments (0)
Login or Join to comment.