- · 5 friends
-
I
வாழ்க்கையில் தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்
பணத்தை அலட்சியப்படுத்தாதீர்கள்
உங்களிடம் பணம் இருக்கும் போது, இதை நிலைமை உங்களுக்கு நிரந்தரம் என்ற மெத்தன போக்கு உங்களுக்கு வந்து விடுகிறது. பணம் பறக்கும் தன்மை உடையது. இன்று உங்களிடம் பணம் இருக்கலாம். நாளை அது உங்களிடம் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
உங்களிடம் பணம் இருக்கும் போது, உங்கள் முதல் செலவு உங்கள் சேமிப்பாக இருக்க வேண்டும். தேவை இல்லாததற்கெல்லாம் பணத்தை செலவழித்து, அதை உங்கள் வாழ்க்கையில் இருந்து விரட்டி விடாதீர்கள்.
உங்கள் பெற்றோரை அலட்சியபடுத்தாதீர்கள்
நீங்கள் சிறுவர்களாக இருக்கும் போது, உங்கள் பெற்றோர் தான் உங்கள் உலகமாக இருக்கிறார்கள். ஆனால். உங்கள் காலில் நீங்கள் சுயமாக நிற்கும் போது, பெற்றோரை விட உங்களுக்கு நிறைய தெரியும் என்ற மமதையில் அவர்களிடம் திமிராக நடந்து கொள்கிறீர்கள். உங்கள் திருமணத்திற்கு பிறகு, உங்கள் பெற்றோரிடமிருந்து விலகி விடுகிறீர்கள். இந்த தவறை செய்யவே செய்யாதீர்கள். உங்கள் பெற்றோரின் தியாகம் இல்லாமல், நீங்கள் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்க மாட்டீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள்
ஒன்றை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் யாரும் முழுமையாக நம்ப தகுந்தவர்கள் கிடையாது. நீங்கள் உங்கள் நண்பர்களையோ, உறவையோ முழுமையாக நம்பினால், ஒரு நாள் கண்டிப்பாக உங்களை ஏமாற்றுவார்கள். உங்களை மட்டும் முழுமையாக நம்புங்கள்.
வரும் சந்தர்ப்பங்களை நழுவ விடாதீர்கள்
உங்களில் பலர், சந்தர்ப்பங்கள் உங்களை நோக்கி வரும் போது அதை கண்டு கொள்வதே இல்லை. ஆனால், அந்த சந்தர்ப்பத்தை மற்றவர்கள் உபயோகித்து வெற்றி பெறும் போது தான், உங்களுக்கு சந்தர்ப்பத்தை நழுவ விட்ட வேதனை பிறக்கும். சந்தர்ப்பம் வரும் போது அதை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
கெட்ட பழக்கங்கள் உங்கள் வாழ்க்கைக்கு முடிவு கட்டும்
நீங்கள் கெட்ட பழக்கங்களை மேற்கொண்டால், அது ஒரு நாள் உங்கள் வாழ்க்கையையே சீரழிக்கும். குடி பழக்கம் உங்களுக்கு முதலில் த்ரில்லாக இருக்கலாம். குடல் வெந்து நீங்கள் பரிதவிக்கும் போது தான், உங்களுக்கு நீங்கள் செய்த தவறின் வீரியம் தெரியும். துஷ்டனை கண்டால் தூர விலகு என்பதை போல, கெட்ட பழக்கங்களிலிருந்து உங்களை விலக்கி கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கை உங்களுடையது. அதை அழகாக வாழ்வதும், அல்லது சீரழிப்பதும் உங்கள் கையில் தான் இருக்கிறது என்பதை ஒரு நாளும் மறந்து விடாதீர்கள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·